நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Sunday, December 4, 2011

AIEEE நுழைவுத்தேர்வு – மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது

என்ஐடிக்கள், ஐஐஐடிக்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உள்பட நாட்டின் முக்கியக் கல்வி நிலையங்களில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்கள் அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். இந்த நுழைவுத் தேர்வை எழுத விரும்பும் பிளஸ் டூ மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

அகில இந்திய அளவில் மிகவும் புகழ்பெற்ற பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பது இன்றைய இளைஞர்களின் கனவு. நாட்டில் மிகச் சிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்களாகத் திகழ்பவை என்.ஐ.டி. எனப்படும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்வி நிலையங்கள். இதுபோல, இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி (ஐஐஐடி) கல்வி நிறுவனங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உள்பட முக்கிய பொறியியல், தொழில்நுட்பக் கல்வி நிலையங்களில் மாணவர்களைச் சேர்க்க அகில இந்திய அளவில் பொறியியல் நுழைவுத் தேர்வு (ஏஐஇஇஇ) நடத்தப்படுகிறது. இத்தேர்வை மத்திய செகண்டரி கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்துகிறது. சுமார் 40 ஆயிரம் இடங்களுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆண்டுதோறும் இந்த நுழைவுத்தேர்வை எழுதுகின்றனர் என்பதிலிருந்தே இத்தேர்வின் முக்கியத்துவம் விளங்கும்.http://www.kalvikalanjiam.com


ஏ.ஐ.இ.இ.இ. நுழைவுத் தேர்வை யார் எழுதலாம்?


பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பி.பிளானிங் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஏ.ஐ.இ.இ.இ. தேர்வை எழுத வேண்டும்.பிளஸ் டூ தேர்வில் இயற்பியல், கணிதம், வேதியியல் ஆகிய பாடங்களை விருப்பப்பாடமாக எடுத்துப் படித்திருக்கவேண்டும்.

குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று பிளஸ் டூ தேறியிருக்கவேண்டும். பி.ஆர்க்., பி.பிளானிங் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், கணிதத்தில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்கவேண்டும். 2012ல் பிளஸ் டூ தேர்வு எழுத இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். 2013ஆம் ஆண்டில் பிளஸ் டூ தேர்வு எழுத இருப்பவர்களும், 2009ஆம் ஆண்டிலோ அல்லது அதற்கு முதலிலோ பிளஸ் டூ தேர்வு எழுதியவர்களும் விண்ணப்பிக்க முடியாது. 1987ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தேதிக்குப் பிறகு பிறந்தவர்கள் இத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு வயது வரம்பில் ஐந்து ஆண்டுகள் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை எப்படி இருக்கும்?


ஏ.ஐ.இ.இ.இ. தேர்வுகள் எழுத்துத் தேர்வு மற்றும் ஆன்லைன் என இரண்டு முறைகளில் நடைபெறுகின்றன. எந்த முறையில் தேர்வு எழுதுவது என்பதை மாணவர்கள் முடிவு செய்து தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆன்லைன் தேர்வுகள் சென்னை, திருவனந்தபுரம், மும்பை, போபால், ஹைதராபாத் உள்ளிட்ட 22 நகரங்களில் நடைபெறும். எழுத்துத் தேர்வுகள் தமிழகத்தில் கோவை, மதுரை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெறும். வினாத்தாள் ஆங்கிலம் அல்லது இந்தியில் இருக்கும். எந்த மொழியில் தேர்வு எழுத விரும்புகிறீர்கள் என்பதை விண்ணப்பத்தில் முன்னதாகவே குறிப்பிடவேண்டும்.

பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகளைப் படிக்க விரும்பும் மாணவர்கள் முதல் தாளை எழுத வேண்டும். இதை எழுத்துத் தேர்வாகவும் எழுதலாம் அல்லது ஆன்லைன் மூலமும் எழுதலாம். முதல் தாளில் இயற்பியல், வேதியியல், கணிதம் போன்றவை இடம்பெறும். மூன்று பாடங்களிலும் ஆப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். பி.ஆர்க்., பி.பிளானிங் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இரண்டாம் தாளை எழுத வேண்டும். இரண்டாம் தாளில் கணிதம், ஆப்டிட்யூட் டெஸ்ட், டிராயிங் டெஸ்ட் போன்றவை இடம்பெறும்.

இந்த ஆன்லைன் நுழைவுத் தேர்வு அடுத்த ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெறும். காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரையும் இத்தேர்வு நடத்தப்படும். எழுத்துத் தேர்வு முறையில் தேர்வு எழுத விரும்புவோர், முதல் தாளை அடுத்த ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையும், இரண்டாம் தாளை அதே நாளில் மதியம் 2 மணி முதல் 5 மணி வரையும் எழுத வேண்டும். பி.இ., பி.டெக் படிக்க விரும்புபவர்கள் பி.ஆர்க் (அல்லது பி.பிளானிங்) படிப்புக்கும் சேர்த்து நுழைவுத் தேர்வு எழுத விரும்பினால், பி.இ. (பி.டெக்) படிப்புக்கான நுழைவுத் தேர்வை ஆன்லைன் முறையிலும், பி.ஆர்க் (பி.பிளானிங்) படிப்புக்கான நுழைவுத் தேர்வை எழுத்துத் தேர்வு முறையிலும் எழுதலாம். கம்ப்யூட்டரில் நன்கு பரிச்சயமுள்ள மாணவர்கள், ஆன்லைன் மூலம் தேர்வு எழுதுவதைத் தேர்ந்தெடுக்கலாம். கம்ப்யூட்டரில் அத்தனை பரிச்சயமில்லாதவர்கள், எழுத்துத் தேர்வைத் தேர்ந்தெடுக்கலாம்.

தேர்வுக் கட்டணம் எவ்வளவு?


பி.இ./பி.டெக் மட்டுமோ அல்லது பி.ஆர்க்./பி.பிளானிங் மட்டுமோ படிக்க விரும்புபவர்கள், எழுத்துத் தேர்வு (பேனா, பேப்பரில் எழுதும் தேர்வு) முறையில் தேர்வு எழுத விரும்பினால், தேர்வுக் கட்டணமாக ரூ.800ஐ கட்டவேண்டும். தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கு இந்தக் கட்டணம் ரூ.400 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பி.இ./பி.டெக் மற்றும் பி.ஆர்க்./பி.பிளானிங் ஆகிய இரண்டு படிப்புகளுக்கும் விண்ணப்பிக்க விரும்புபவர்கள், எழுத்துத் தேர்வு முறையில் தேர்வு எழுத விரும்பினால் தேர்வுக் கட்டணமாக ரூ.1,400ஐ கட்டவேண்டும். தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கு இந்தக் கட்டணம் ரூ.700 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பி.இ./பி.டெக் அல்லது பி.ஆர்க்./பி.பிளானிங் ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒரு படிப்பை படிக்க விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் தேர்வு எழுத விரும்பினால், தேர்வுக் கட்டணமாக ரூ.500 செலுத்தவேண்டும். தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினத்தவர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ.250-ஐ செலுத்தவேண்டும். பி.இ./பி.டெக்., பி.ஆர்க்./பி.பிளானிங் ஆகிய இரண்டு படிப்புகளுக்கும் சேர்த்து ஆன்லைன் மூலம் நுழைவுத் தேர்வு எழுத விரும்புபவர்கள், தேர்வுக் கட்டணமாக ரூ.1,100ஐ கட்ட வேண்டும். தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கு தேர்வுக் கட்டணம் ரூ.550 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக் கட்டணத் தொகைக்கு, SECRETARY, CBSE PAYABLE AT NEWDELHI
என்ற பெயரில் வங்கி வரைவோலையாக எடுத்து அனுப்பவேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பங்களை  நவம்பர் 15ஆம் தேதி முதல் 31.12.2011ஆம் தேதி வரை அனுப்பலாம்.
விவரங்களுக்கு: www.aieee.nic.in

கல்வி களஞ்சியம் (www.kalvikalanjiam.com

1 comment:

  1. Now i am studying 12th, now it self i want to prepare AIEEE Pls give some suggestion and some important tips to get set my mail id is contact.indianist@gmail.com

    ReplyDelete

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...