நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Saturday, December 10, 2011

IAS தேர்வுகளுக்கு இலவச பயிற்சி!!


ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வுகளுக்கான இலவச பயிற்சிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள புது கல்லூரி, சமூக, பொருளாதார, கல்வி மேம்பாட்டு அறக்கட்டளையுடன் இணைந்து, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ் மற்றும் அரசுசார் பணிகளுக்கான தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கி வருகிறது.
அடுத்தாண்டு மே மாதம் நடக்கும், ஐ.ஏ.எஸ்., -ஐ.பி.எஸ்., முதல்நிலை தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், வரும் 10ம் தேதி, கல்லூரி வளாகத்தில் துவங்குகிறது.http://www.kalvikalanjiam.com
இதுகுறித்து, ஒருங்கிணைப்பாளர் ராஜாராமன் கூறும்போது,
“”இவ்வகுப்புகள், சனிக்கிழமை மாலை 6முதல், இரவு 8 மணி வரையும், ஞாயிறுக்கிழமை மாலை 4 முதல் இரவு 8 மணி வரையும் நடைபெறும்.
இதில் பங்குபெற, ஏழை, எளிய மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு முன்னுரிமை தரப்படும். சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இப்பயிற்சியை பெறலாம்.
விண்ணப்பம் உள்ளிட்ட விவரங்களை, 044 – 2835 0297, 81488 94099 ஆகிய எண்களில் பெறலாம்,”என்றார்.

No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...