நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Saturday, February 4, 2012

கொட்டிக்கொடுக்கும் கொட்டில்



மேலே


ராஜ் டேனியல் (அலைபேசி 0451 2421057) பயிற்றுனர் ஆடு வளர்ப்பு பற்றி கூறுகையில் கால்நடை வளர்ப்பு என்பது இந்தக் காலத்தில் மிகவும் கடினமாகிக் கொண்டே வருகிறது. வெள்ளாடு உள்ளிட்டவைகளை கொட்டில் முறை ஆடு வளர்ப்பு மூலம் வளர்ப்பது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. ஆடுகளை வெளி இடங்களில் வளர்க்காமல், ஒரே இடத்திலேயே வைத்து வளர்ப்பது தான் கொட்டில் முறை.

கொட்டில் முறையில் வளர்க்கும் போது அலைச்சல் இல்லாததால் சீக்கிரம் உடல் பெருக்கும். தீவனத் தேவை குறையும்.
கொட்டில் முறையில் ஆடுகளை வளர்க்க விரும்புறவங்க, முதல்ல ரெண்டு ஏக்கர் அளவுக்காவது தண்ணீர் வசதியுள்ள தோட்டத்தைத் தயார்படுத்திக்கணும். அகத்தி, சூபாபுல், வேலி மசால் இதையெல்லாம் வேலியா நடலாம். கம்பி வேலி அமைச்சாலும் ரொம்ப நல்லது. ஒரு ஏக்கர் அளவுல பசுந்தீவனங்களை கட்டாயம் பயிர் பண்ணனும். மீதி இடங்களை ஆடு வளர்ப்புக்குத் தயார் பண்ணிக்கலாம். பசுந்தீவனம் வளர்க்கற இடம், ஆடுகள் இருக்கற இடம் ரெண்டுக்கும் நடுவுலயும் வேலி அமைக்கணும்.
20 பெட்டை, ஒரு கிடா கொண்ட கூட்டத்தை ஒரு யூனிட்டுன்னு சொல்வோம். வளர்ந்த ஒரு பெட்டை ஆட்டுக்கு, பதினைந்து சதுர அடி இடம் தேவை. கிடா, சினை ஆடு, குட்டிப் போட்ட ஆடுகளுக்கு இருபது சதுர அடி தேவைப்படும். ஆக, ஒரு யூனிட்டுக்கு 20 வளர்ந்த பெட்டைகள், 1 கிடா, பத்து பதினைந்து குட்டிகள்ன்னு கணக்குப் போட்டா.. சுமாரா 650 சதுர அடியில செவ்வக வடிவமான கொட்டில் தேவைப்படும். வளர்ற குட்டிகளை வைக்கறதுக்கு 200 சதுர அடியில தனியா ரெண்டு கொட்டில், நோய் தாக்கின ஆடுகளுக்குன்னு 200 சதுர அடியில இரண்டு கொட்டில்களும் கட்டாயம் தேவைப்படும். மொத்தமா 1,450 சதுர அடி (3.32 சென்ட்) வேணும்.

தரையிலிருந்து உயரமாக பெரிய கொட்டில் மட்டும் தரையிலிருந்து 5 அடி உயரத்தில் இருக்குற மாதிரி பாத்துக்கணும். ஆடுங்க ஏறும் போது சறுக்காம இருக்குறதுக்கு மரத்துலயே படிகள் வைக்கலாம். கொட்டிலை உயரமா அமைக்கறதுக்கு கான்கிரீட் தூண், இல்லைன்னா பனை மரத்தைப் பயன்படுத்தலாம். உயரம் கம்மியா இருந்தா, ஆடுகளோட கழிவுல இருந்து வெளிய வர்ற வாயுக்களால ஆடுகளுக்கு மூச்சுத்திணறல் வரும். சுத்தம் செய்யுறதுக்கும் கஷ்டமாப் போயிடும்.  சின்னச்சின்ன கொட்டில்களை தரையிலயே வெச்சுக்கலாம். எத்தனை யூனிட் அமைச்சாலும் நாலு பக்கமும் முப்பதடி இடைவெளி விட்டு, கட்டாயம் வேலி இருக்கணும். இந்த இடைவெளியில் தினமும் காலை நேரத்துல வெயில் படுற மாதிரி, ஆடுகளை மேய விடலாம். நோய், நொடிகள் வரும் போது அவற்றைக் கவனித்து உரிய மருந்துகளைக் கொடுக்கவேண்டும்.
கொட்டிலுக்குக் கூரையா தென்னை, பனை ஓலைகளை வெச்சா, குளிர்ச்சியா இருக்கும். ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்டா, வெப்பம் அதிகமா இருக்கும். எல்லாக் கொட்டில்களுக்குமே பக்கவாட்டு அடைப்புக்கு மூங்கில் தப்பைகளையே பயன்படுத்தலாம். அடிப்பாகத்துக்கு, சாதாரண மரப்பலகையே போதுமானது. வரிசையா மரப்பலகைகளை சீரான இடைவெளி விட்டு இணைச்சு ஆணி அடிக்கணும். பலகைகளோட இருந்தாத்தான் வளையாம இருக்கும் பலகைகளை சேக்குறதுக்கு முன்னாடி குரூட் ஆயில்ல ஊறவெச்சுட்டா.. சிறுநீர், கழிவுகளால பலகைக்கு பாதிப்பு வராது. ஊறவும் செய்யாது. இடைவெளி வழியாக் கழிவுகள் கீழே விழுந்திடும். அதனால கழிவுகளை சேகரிக்கிறதுக்கு சுலபமாயிடும்.

சுத்தம் சுகம் தரும் !
தினமும் காலையில கொட்டிலை சுத்தம் செய்யணும். ஒவ்வொரு கொட்டிலையும் சுத்தி சிமெண்ட் வாய்க்கால் எடுத்து ஒரு தொட்டிக் கட்டணும். ஆடுகளோட சிறுநீர், கொட்டிலைக் கழுவுற தண்ணியெல்லாம் அதன் மூலமா சேகரிச்சு தீவனப்பயிருக்கு உரமா உபயோகப்படுத்தலாம். கிடாவை தனியான தடுப்புல நீளமான கயித்துல கட்டி வைக்கணும். தீவனங்களை தரையில் போடாம பக்கவாட்டு மூங்கில்களில் கட்டி வெச்சுட்டா, தேவைப்படும் போது ஆடுங்க சாப்பிட்டுக்கும்.இந்தக் கொட்டில் அமைப்பு ரொம்பவும் செலவு கம்மியான முறை.
நாமக்கல் மாவட்டம், காளி செட்டிபட்டியில் கொட்டில் முறையில் தலைச்சேரி ஆடுகளை வளர்த்து வரும் ரகுநாதன் (அலைபேசி : 94426 25504) அதைப்பற்றிச் சொல்கிறார்.
“பத்து வருசமா ஆடு வளர்த்தாலும் மூன்றரை வருசமாத்தான் கொட்டில் அமைச்சு நல்ல முறையில வளக்க ஆரம்பிச்சிருக்கேன். நல்ல லாபம் கிடைக்குது. எண்ணூறு சதுர அடியில் தரையிலேயே சிமென்ட் போட்டக் கொட்டில் அமைச்சிருக்கேன். பக்க வாட்டுல கம்பி வலை போட்டிருக்கேன். மேல உயரமா ஆஸ்பெஸ்டாஸ் கூரையும் போட்டிருக்கேன். தனியே குட்டிகளுக்கு ஒரு அறை இருக்கு. என்கிட்ட இருக்கிற வளர்ந்த ஆடுகள் நாற்பதுக்கும், குட்டிகள் இருபதுக்கும் இதுவே போதுமானதாத்தான் இருக்கு. பசுந்தீவனமா வேலிமசால், கோ3 புல்லெல்லாம் தோட்டத்துலேயே வளர்த்திருக்கேன். அதோட சேத்துக் காய்ந்த தீவனத்துக்காக கடலைக் கொடி கொடுக்குறேன்.
தினமும் அடர் தீவனமும் கொடுத்தா நல்லா வளரும். மேய்ச்சல் முறையில்  வளர்க்கிறவ்பொ ஆறு மாசத்துக்கு பத்து, பதினோரு கிலோ வரை தான் எடை வரும். ஆனா, கொட்டில் முறையில் ஆறு மாசத்துக்குள்ள இருபது கிலோ வரை வந்துடும். நல்ல விலை கிடைக்கும். கிலோ 120 ரூபாய்ன்னு விலை வெச்சி ஆட்டைக் கொடுத்துடுவேன்.
குறைந்தபட்ச லாபமே குஷியானது தான்
ஒவ்வொரு பெட்டையும் எட்டு மாசத்துக்கு ஒரு தடவை குறைந்தபட்சம் ரெண்டு குட்டி போடும். அந்தக் குட்டிக்கு அடுத்த எட்டு மாதத்தில் குட்டி போட ஆரம்பித்துவிடும். சரியாக கருத்தரிக்காத ஆடுகள், குட்டி ஈனாத ஆடுகளை உடனடியாக கழித்து விடவேண்டும். தேவைக்கு அதிகமான கிடாக்களையும் கழிக்க வேண்டியது அவசியம். சரியான முறையில் மருத்துவம் மற்றும் அடர்தீவனங்கள் மேற்பட்ட ஆடுகளை விற்பனை செய்ய முடியும். குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய்க்கு விற்றாலே 8 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கும். இருபது ஆடுகள் மற்றும் அதன் மூலம் குட்டிகள் ஆகியவற்றை வைத்து 40 மாதங்களில் கிடைக்கும் லாபக்கணக்கு இது. ஆண்டுக்கு கணக்கிட்டால், 2 லட்ச ரூபாய்க்கு மேல் வரும்படி கிடைக்கும். இளங்குட்டிகள் 200 எண்ணிக்கையில் நம்மிடம் இருக்குமாறு பராமரிக்கலாம்.
தரையிலிருந்து உயரமாக அமைக்கப்பட்ட மூங்கிலால் ஆன கொட்டில் போடுவதற்கு 50 ஆயிரம் ரூபாய் செலவு பிடிக்கும். தரையிலேயே ஆஸ்பெஸ்டாஸ் கூரையுடன் அமைத்தால் 75 ஆயிரம் ரூபாய் செலவாகும். கொட்டில் அமைக்கும் பொருட்களைகப் பொறுத்து விலை வித்தியாசப்படும்.
அடர்தீவன தயாரிப்பு !
மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகிய தானியங்கள் 40 சதவிகிதம் கடலை, எள், தேங்காய், சூரியகாந்தி, பருத்தி மற்றும் சோயா ஆகிய புண்ணாக்குகள் 25 சதவிகிதம். அரிசி மற்றும் கோதுமை தவிடு 30 சதவிகிதம். தாது உப்பு 2 சதவிகிதம். உப்பு 2 சதவிகிதம். ஊட்டச்சத்து கலவை 1 சதவிகிதம் இந்த அளவில் எடுத்துக் கொண்டு மாவாக அரைத்து, தண்ணீரில் பிசைந்து தினமும் குறிப்பிட்ட விகிதத்தில் கொடுக்கவேண்டும். கர்ப்பிணி ஆடுகளுக்கு கொஞ்சம் அதிகப்படியாகக் கொடுக்கலாம். மேற்சொன்ன பொருட்களில் விலைக் குறைவாக கிடைப்பவற்றை கொஞ்சம் கூடுதலாகச் சேர்த்துக் கொண்டு, மற்றவற்றை குறைத்து சதவிகித அளவைப் பராமரிக்கலாம். அடர் தீவனம் கொடுக்கவேண்டும் என்பது கட்டாயமல்ல. கொடுத்தால் ஆடுகளின் எடை சீக்கிரமே அதிகரித்து கூடுதல் லாபத்துக்கு வழிவகுக்கும்.
கொட்டில் முறை ஆடு வளர்ப்புக்கான செலவு - வரவுக் கணக்கு (முதல் 40 மாதங்களுக்கானது)
விவரம்
செலவுவரவு
நிலையான செலவு கொட்டில்கள் அமைக்க (சராசரி)
60,000 
பெட்டை ஆடுகள் 20
24,000 
கிடா 1
2,000 
நடைமுறைச் செலவுகள் தீவனம் (நாமே உற்பத்தி செய்வது)
10,000 
இன்சூரன்ஸ்
10,000 
மருத்துவச் செலவு
10,000 
அடர் தீவனம்
30,000 
இதரச் செலவுகள்
4,000 
800 ஆடுகள் விற்பனை மூலம் (குறைந்தபட்சம்)
 8,00,000
கழிவு விற்பனை முகாம்
50,000
மொத்தம்
1,50,000
8,50,000
நிகர லாபம்
7,00,000

7 மாதம் 40 ஆயிரம் கொட்டிக் கொடுக்கும் கொடி ஆடுகள்





கொடி ஆடுகளை பற்றி சரோஜா கூறுவதுதாவது ஆடு வளர்த்தே வீடு கட்டியிரக்கேன். பொண்ணுங்களைப் படிக்க வெச்சு, கட்டிக் கொடுத்திருக்கேன். ஒரு கஷ்டமும் இல்லாம குடும்பத்தை ஒட்டிக்கிட்டிருக்கேன். இந்த ஆடுகளுக்காக நான் எந்தச் செலவையும் செய்யுறதில்ல என்று சரோஜா அவர்கள் பேசத் தொடங்கினார்.
நம்பிக்கையான கொடி ஆடுகள்  : 
“நம்ம பாரம்பர்ய ரசமான கொடி ஆடுகளையும், கன்னி ஆடுகளையும்தான் நான் வளர்த்துகிட்டிருக்கென். கொடி ஆட்டுக்குக்காலும், கொம்பும் நல்ல நீளமா இருக்கும். 15 மாச வயசுல மூணடி உயரத்துக்கு வளர்ந்து, பார்க்கவே கம்பீரமா இருக்கும். அதுல கரும்போறை, செம்போறைனு ரெண்டு வகை இருக்கு. கருப்பு உடம்புல வெள்ளைப் புள்ளிகளும், வெள்ளை உடம்புல கருப்புப் புள்ளிகளும் இருந்தா கரும்போறை. சிவப்பு உடம்புல வெள்ளைப் புள்ளிகளும், வெள்ளை உடம்புல, சிவப்புப் புள்ளிகளும் இருந்தா செம்போறை. இப்ப என்கிட்ட கரும்போறை மட்டும்தான் இருக்குது.
ஏழு மாதத்துக்கு ஒரு ஈத்து : கொடி ஆடுகள் முதல் தடவை சினை பிடிக்க 10-12 மாசம் ஆகும். அதுக்குப் பிறகு, ஏழு மாசத்துக்கு ஒரு தடவை குட்டி ஈனும். அஞ்சு மாசம் சினைக்காலம். குட்டி போட்ட ரெண்டு மாசத்துலயே திரும்பவும் சினை பிடிச்சுடும். ஒரு ஈத்துக்கு ரெண்டுல இருந்து, நாலு குட்டி வரை போடும். சராசரியா ஒரு ஈத்துக்கு ரெண்டு குட்டிங்க கிடைச்சுக்கிட்டே இருக்கும். மூணு மாசம் வரைக்கும் குட்டிகளுக்கு தாராமா பால் கொடுத்து அதுவே பராமரிச்சுடும். அதனால புட்டிப்பால் எல்லாம் தர வேண்டியதில்ல, போதுமான அளவுக்கு தாய்ப்பால் குடிக்கறதால குட்டிக நல்ல ஆரோக்கியத் தோட வளரும்.
ஏழு மாதத்தில் விற்பனை : கொடி ஆட்டுல ஏழு மாசத்துலயே ஒரு பெட்டை ஆடு பதினஞ்சு கிலோ எடை வரைக்கும் வந்துடும். கிடா, இருபது கிலோ எடைக்கு வந்துடும். அந்த சமயத்துல விற்பனை செய்தா ஒரு பெட்டை அடு 2,250 ரூபாய், கிடா 3,000  ரூபாய்னு விலை (குறைந்தபட்சம்) போகும்”
கைகொடுக்கும் கன்னி ஆடு : “ கன்னி ஆடு கொஞ்சம் குட்டையா, உடம்பு குறுகலா, திகாத்திரமா இருக்கும். கொம்பு நடுத்தரமா இருக்கும். கொம்பு நடுத்தரமா இருக்கும். இதுல பால்கன்னி, செங்கன்னினு ரெண்டு வகை இருக்குது. கண் ஒரத்துலயும் கொம்பிலிருந்து வாய் வரைக்கும் ரெண்டு சிவப்பு கோடு இருக்கும். அதேபோல, காது ஒரத்துலயும், கால்கள்லயும் சிவப்பு கோடுக இருக்கும். இது, செங்கன்னி. இந்தக் கோடெல்லாம் வெள்ளையா இருந்தா பால் கன்னி.
கன்னி ஆடுக முதல் தடவை மட்டும் 8-10 மாச வயசுல சினை பிடிக்கும். அதுக்குப் பிறகு ஏழு மாசத்துக்கு ஒரு தடவை குட்டி போடும். ஒரு ஈத்துக்கு ரெண்டு குட்டி வரை போடும். இந்த இனத்துலயும் தாயே மூணு மாசம் வரைக்கும் பால் கொடுத்துப் பரமாரிச்சுடும். அதனால் புட்டிப்பால் தேவையே இருக்காது. கன்னி ஆடுகளைப் பொறுத்தவரை ஏழு மாச வயசுல ஒரு பெட்டை 10 கிலோ எடையும், கிடா 15 கிலோஎடையும் இருக்கும். பெட்டை 1,500 ரூபாய், கிடா 2,250 ரூபாய்னு விலை போகம்.
ஏழு மாசத்துக்கொரு தடவை 40 ஆயிரம் : ரெண்டு வகையிலயும் கலந்துகட்டி மொத்தம் 10 பெரிய ஆடுங்க என்கிட்ட இருக்குது கணக்குப் பாத்தா ஏழு மாசத்துக்கு ஒரு தடவை இதுங்கல்லாம் குட்டி போட்டுக்கிட்டே இருக்கும். ஈத்துக்கு 10 பெரிய ஆடுங்க மூலமா, 20 குட்டிங்க கிடைச்சுடும். அந்தக் குட்டிகளையெல்லாம் ஏழு மாசம் வரைக்கும் வளர்த்து, அதுக்குப் பிறகு விலைக்குக்  கொடுத்துடுவேன். இதன் மூலமா எப்படிப் பார்த்தாலும் 40 ஆயிரம் ரூபாய்க்குக் குறையா வருமானம் கிடைச்சுக்கிட்டே இருக்கும். இப்படி நான் விலைக்குக் கொடுக்குற சமயத்துல, புதுசா 20 குட்டி ஆடுங்க வந்துடும் மொத்தத்தையும் சேர்த்து பராமரிக்க ஆரம்பிச்சா ஒரு தடவை ஆடுகளை வித்துக்கிட்டே இருக்கறதை ஒரு வழக்கமாகவே வெச்சுருக்கேன். இது எனக்கு ரொம்பவே வசதியா இருக்கு.
எப்பவுமே 10 தாய் ஆடுகளும், 20 இளம் ஆடுகளும் இருக்குற மாதிரி வெச்சுகிடடு, மத்ததைக் கழிச்சுடுவேன், 10 தாய் ஆட்டுக்கு ஒரு பெரிய கிடா போதும்.

பராமரிப்பு என்பதே இல்லை : பராமரிப்புனு பார்த்தா பெருசா எதுவுமே இல்ல. பகல்ல பக்கத்துல ஆத்தோரத்துல மேய்ச்சுகிட்டு வந்து ராத்திரியில கட்டிப்போட்டுடுவேன். பனிக் காலத்துலகூட எந்தப்பிரச்னையும் வந்ததில்ல. பரண் இல்ல தரையிலதான் படுத்துக் கிடக்குது. பேன், உண்ணி தொந்தரவுகள் இல்ல. ஒருமுறைக் கூட ஒட்டுண்ணி நீக்கம் செஞ்சதில்ல. குடற்புழு நீக்கம்கூட செஞ்சத்தில்ல. மேய்ச்சலுக்கு போகும்போது குட்டைகள்ல தேங்கி கிடக்குற தண்ணீரைதான் இந்த ஆடுகள் குடிக்குது. இதுக்குனு தனியா காட்டகைக்குள்ள தண்ணீர் தொட்டி வைக்கல

தீவன சாகுபடி முக்கியம்
30 அடி நீளம், 10 அடி அகலத்துல கொட்டகை அமைச்சு நாலு பக்கமும். வலை அமைச்சு அதை ரெண்டு பகதியா பிரிச்சு, ஒரு பகுதியா பிரிச்சு, ஒரு பகுதியில பெரிய ஆடுகளையும், இன்னொர பகுதியில குட்டி ஆடுகளையும் வெச்சுக்கலாம். கொட்டகையில் தண்ணீர்த் தொட்டி கண்டிப்பா இருக்கணும். பத்து பெட்டை ஆடுகளுக்கு ஒரு கிடா போதும். கிடாக்களை அதிகளவுல வெச்சுக்கக் கூடாது. ஒண்ணோட ஒண்ணு முடடிக்கும். அதைவிட தீவன உற்பத்தி ரொம்ப முக்கியம். அதை ஏக்கர் அளவுல சூபதபுல், அகத்தி, கிளரிசீடியா, மலர்பேரி, சங்குப் புஷ்பம், முயல்மசால், வேலிமசால், வேம்பு, கொருக்காப்புளி மாதிரியான பசுந்தீவனங்களை சாகுபடி செஞ்சுக்கணும். வேற அடர்தீவனம், கலப்புத் தீவனமெல்லாம் தேவையேயில்லை.
குட்டிகள் பிறந்து மூணாவது மாசத்துல, தாய்ப்பால் குடிக்குற காலத்துலயே அரை கிலோ பசுந்தீவனம் கொடுக்க அரம்பிச்சுடணும். நாலாவது மாசம் தினம் ஒன்றரைக் கிலோவும், அஞ்சாவது மாசத்தல 3 கிலோவும் கொடுக்கணும். அதுக்கப்பறம் வளர்ச்சியைப் பொறுத்து அளவைக் கூட்டிக்கலாம். எட்டு மாச வயசுல ஒவ்வொரு ஆட்டுக்கும் தினம் 5 கிலோ தீவனமும், அதுக்கப்பறம் 7 கிலோவும் கிடைக்குற மாதிரி பாத்துக்கணும். ரெண்டு வகையான ஆடுகளுமே, உயிர் எடைக்கு ஒரு கிலோ 150 ரூபாய்னு விலை போகுது.
கொடி ஆடுகளைக் காப்பாற்றுங்கள்
“இந்த மாதிரியான ஆடுகதான் ஏழை விவசாயிகளுக்கு வருமானத்தைத் தரக்கூடியது நம்ம சூழலுக்கு ஏத்ததும்கூட ஆனா, இந்த வகை ஆடெல்லாம் இப்போ குறைஞ்சுகிட்டே வருதுங்கறதுதான் வேதனையான விஷயம். இதையெல்லாம் பாதுகாக்குறதுக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கணும். இதன் மூலமா நம்ம மக்களளோட பொருளாதார நிலைமையையும் சரிஞ்சுடாம காப்பாத்த முடியும்”
தொடர்புக்கு
சரோஜா
(உறவினரின் அலைபேசி) 98376-63517
ஆதிநாராயணன் 98656-13616
செளந்தரபாண்டியன் 94431-84974

கால்நடை பராமரிப்பு



மேலே


கால்நடைகளை கொண்டு வேளாண்மை செய்வது. விவசாயிகள் வாழ்வாதாரமாக காணப்படுகிறது. விவசாயத்தின் முக்கிய பயிர் தோல்வி அடையும் போது, தங்களது கால்நடைகளை விற்பனை செய்து, ஈடுகட்டலாம். பணத் தேவை ஏற்படும் போது கால்நடைகள் கடன் அட்டையாக திகழ்கிறது. இம்மாதிரியான மாற்று முறைகள், விவசாயிகளை அதிக வட்டி விகிதத்தில் பணம் வழங்கும் தனியார் நிறுவனங்கள் மற்றும் பிற மனிதர்களிடம் இருந்து பாதுகாக்கிறது.

தொழில்நுட்ப பின்நகர்வு:
கேரளா கோழிக்கோடு மாவட்டத்தின் கூரசண்ட்த் கிராமத்தை சார்ந்த திரு. சீஜித், தனது 6 ஏக்கர் நிலத்தில் 200 தென்னை மரங்களை வளர்கிறார். இது ஆண்டுக்கு ரூபாய், 50,000 வருமானம் ஈட்டி தருகிறது. தீவன புல் மற்றும் வாழை ஊடுபயிராக பயிரிடப்படுகிறது. இத்தீவன புல் அவரது இரண்டு மாடுகளுக்கும் உணவாகவும் மேலும் வாழையின் மூலமாக கூடுதல் வருமானமாக ரூபாய் 5000 வரையிலும் பெறுகிறார்.
பண்ணை உற்பத்தியும், வருமானத்தையம் பெருக்கும் விதமாக வேளாண் அறிவியல் மையத்தை நாடினார். அங்கு வழங்கப்பட்ட பயிற்சியின் மூலம், 2007 ஆம் ஆண்டு முதல் அலங்காரத்திற்காக வளர்க்கப்படும் பறவைகளான கோல்டன் சில்கி (Golden Silky), கொச்சின் பேண்டாம் (Cochin Bandom), ஒய்ட் சில்கி (White Silky) போஸ்லைன் (Phoseline), ஜப்பானிய பேண்டாம் (Japanese Bandom), புளு கொச்சின் (Blue Cochin), கோல் டன் மில்லிபிளோர் (Golden milli flour) சில்வர் மில்லிபிளோர் (Silver milliflour), சில்வர் லேஸ் (Silver lace) போன்ற நன்கு தேவை இருக்கும் பறவைகளை வளர்த்து ஆரம்பித்தார்.

பறவைகளுக்கு ஒர் இருப்பிடம்:
ரூபாய் 60,000 செலவில், பறவைகள் தங்குவதற்கான கொட்டகை உருவாக்கினார். பட்சிகளுக்கான உணவு மற்றும் மருத்துவ செலவாக, ஒரு நாளுக்கு ரூபாய் 150 தேவைப்படுகிறது.
ஒரு ஜோடி பறவை ரூபாய் 400 முதல் 600 வரையிலும், ஒரு முட்டையின் விற்பனை விலை ரூபாய் 30-40 வரையிலும், உள்ளூரில் விற்பனை செய்கிறார். சராசரியாக ஒரு மாதத்திற்கு 80 பறவைகளும், 30 முட்டைகளும் விற்பனையாகிறது. மேலும் ஒரு கோர்வையாக 150 முட்டைகளை பொரிக்கும் அடைகாப்புக்கருவியும் வைத்துள்ளார். இதன் விலை 7500 ரூபாயாகும்.
மேம்படுத்தப்பட்ட இனங்களான கலிங்கா பிராவுன் (Kalinga brown) மற்றும் கிராம சி (Gramasree) வகைகளை ஒரு வயது குஞ்சுளாக கேரள கோழி வளர்ப்பு பண்ணையிலும், கேரளா வேளாண் பல்கலைக்கழகத்தில் இருந்தும் பெற்றும் முட்டைகோழிகளாக வளர்க்க தொடங்கினார். இவ்வாறு முதன்மை விஞ்ஞானியான முனைவர் டி.கே. யாகோப் (Jacob) கூறுகிறார். இவ்வகை குஞ்சுகள் 50 நாட்கள் வளர்க்கப்பட்டு, பின்பு விற்பனை செய்யப்படுகிறது.

சாண எரிவாயு நிலையம்:
மேற்கண்டவாறு வளர்க்கப்பட்ட குஞ்சுகள் ரூபாய் 50க்கு விற்கப்படுகிறது. இதற்கு ஒரு நாளுக்கான செலவாக ரூபாய் 29 தேவை
திரு.சிஜித் அவர்கள் இவ்வாறாக, இதுவரை 1500 கோழிகளை ஐந்து கோர்வையாக குழுக்களாக மொத்தம் ரூபாய் 31,500 லாபம் கிடைக்குமாறு விற்பனை செய்துள்ளார். மேலும் இவர் கோழி கழிவு மற்றும் சாணத்தை கொண்டு எரிவாயு நிலையம் ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளார்.

தொடர்புக்கு: திரு.சிஜீத் ஜான், தேக்கயல் வீடு, கூரசண்த் அஞ்சல், கோழிக்கோடு - 673527 கேரளா
தொலைபேசி : 0496 2660661
மேலும் (பல்வேறு) பயிற்சி வகுப்புகளுக்கு
முனைவர் டி.கே.யாகோப், முதன்மை விஞ்ஞானி
11SR
கோழிக்கோடு - 673 012
மின்அஞ்சல்:jacobtk@spices.res.in
அலைபேசி : 9447539967

விற்பனை வாய்ப்பை அதிகப்படுத்தும் கோழிகளின் வளர்ப்பு



மேலே


ஆயிரம் ஈமு கோழிகளுடன் ஒரு பண்ணையைப் பராமரித்துக் கொண்டிருக்கிறார் ஆந்திராவைச் சேர்ந்த லட்சுமணரெட்டி (அலைபேசி - 094408 - 92951). இந்த இனக்கோழிகளை முதன்முதலாக இந்தியாவுக்கு அநிமுகப்படுத்திய  இவர், ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தூனி என்ற குட்டி நகரத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள ஹம்சவரம் என்ற கிராமத்தில் ‘ஃப்ளைட்லெஸ் பேர்ட்ஸ் ஆஃப் இண்டியா’ (Flightless birds of India) என்ற பெயரில் அமைந்திருக்கிறது. சென்னையில் இருந்து சுமார் 650 கி.மீ தொலைவில் உள்ள இந்தப் பண்ணையைப் பார்வையிட நாடு முழுவதுமிருந்து விவசாயிகள் வந்து செல்கின்றனர்.
“ஈமு கோழி முதன் முதலாக 1996 - ம் ஆண்டு இந்தியாவில் வந்து இறங்கிய இடம்.. சென்னை விமான நிலையம். அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்திடமிருந்து 12 குஞ்சுகளை வாங்கி வந்தார். 

ஈமு கோழிகளின் வளர்ப்பு அனுபவத்தை பற்றி இவர் கூறியதாவது: 

நான் வைத்திருக்கும் ஆயிரம் கோழிகளும் முழுக்க முழுக்க குஞ்சு உற்பத்திக் காகத்தான் வளர்கின்றன. ஆயிரம் கோழிகள் என்றவுடன் நூற்றுக்கணக்கான ஏக்கரில் கோழிகளுக்கு இடம் வேண்டும் என்று நினைத்து விடாதீர்கள். பத்து ஏக்கர் நிலத்தில்தான் இவை வளர்கின்றன. இதற்காக கொட்டகைகூட போடவில்லை. மாமரங்களுக்கு இடையேதான் வலம் வருகின்றன. கோழிகள் வெளியே ஓடிவிடாமல் இருப்பதற்காக மட்டும் கம்பி வேலி போட்டுள்ளோம். மற்றபடி காற்று, மழை, என்று எதற்கும் கலங்காமல் உள்ளன. வெயில் என்றால் இவைகளுக்குக் கொண்டாட்டம்தான். அதனால் தான் அதிக வெயில் அடிக்கும் ஆந்திரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பல பண்ணைகள் உருவாகின்றன. ஒரு வார வயதுடைய குஞ்சுகளை ஐந்தாயிரம் ரூபாய்க்கு விற்கிறோம். சிலர் எங்களிடம் வாங்கிச் சென்று கூடுதல் விலைக்கு விற்கிறார்கள்’.

குறைந்தபட்சம் நூறு கோழிகள் இருக்க வேண்டும். பெண் கோழிகளின் எண்ணிக்கைக்கு சமமாக ஆண் கோழிகளின் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும். இதற்கு இரண்டு ஏக்கர் நிலம் தேவைப்படும். கோழிகளுக்கு ஒரு ஏக்கர், தீவனம் மற்றும் இடுபொருட்கள் வைக்க ஒரு ஏக்கர் என்று பிரித்துக் கொள்ளலாம். கோழிக்குஞ்சுகள், பண்ணை அமைக்கும் இடம். பராமரிப்பு, இங்குபேட்டர், தீவனம் என்று எல்லாவற்றையும் கணக்கிட்டால்.. அதிகபட்சமாக 40 லட்சம் ரூபாய் முதலீடு தேவைப்படும். நான்கு அல்லது ஜந்து வருடத்தில் இதைத் திரும்ப எடுத்து விடலாம்.

ஒரு குஞ்சு 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வதன் மூலம் 500 குஞ்சுகளில் இருந்து மூன்றாம் ஆண்டே, கிட்டத்தட்ட 25 லட்ச ரூபாய் கிடைத்துவிடும். ஈமு வளர்ப்பை ஊக்கப்படுத்தும் விதமாக நபார்டு வங்கிக் கடன் வழங்கி வருகிறது. ஒவ்வொரு விவசாயிக்கும் சுமார் 40 லட்சம் வரை கடன் வழங்குகிறார்கள். இதில் 15 லட்ச ரூபாய் வரை வட்டியில்லா கடனாகும்.

இவருடைய கணிப்புப்படி இந்தியாவில் ஈமு கோழிப் பண்ணைகள் நிறைய உருவாக வேண்டும். அதற்காக குஞ்சுகளை உற்பத்தி செய்யும் பண்ணைகள் பெருகவேண்டும். ஒருகட்டத்தில் கோழிகளின் எண்ணிக்கை பெருகியவுடன், இறைச்சிக்குப் பயன்படுத்துவார்கள். சுவை மிகுந்த இந்த கறிக்கு வரவேற்பு இருக்கும். ஈமு வளர்ப்பை விஞ்ஞான அடிப்படையில் கத்துக்கிட்டு முறையாக வளர்த்தால் எதிர்காலத்தில் இது மிக அருமையான தொழிலாக அமையும்.

நம்பிக்கை தரும் நாமக்கல் காடை



மேலே

லட்சக் களக்கில் செலவழித்து கோழிப் பண்ணை அமைப்பது என்பது எல்லா விவசாயிகளுக்கும் சரிப்பட்டு வருவதில்லை. அவர்களுக்கு ஏற்ற தொழில் காடை வளர்ப்பு தான். இதற்கு இட வசதி தேவையில்லை. ஒரு கோழி வளர்க்கிற இடத்தில் ஐந்து காடையை வளர்க்கலாம். அதே போல் முதலீடும் அதிகமாக தேவைப்படாது. ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர் வைத்திருக்கின்ற சின்ன விவசாயிகளுக்கு மிகவும் கைகொடுக்கக்கூடியது. “காடை வளர்ப்பு” என்கிறார் நாமக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அனுபவ விவசாயி முத்துசாமி.

30 நாட்களில் வருமானம்!

“ஏற்கெனவே, நாட்டுக் கோழி பண்ணை வைத்திருந்தேன். கோழியில் நோய், நொடி வந்து அடிக்கடி இறந்து போகும். அதனால் பராமரிப்புலையே பாதி நேரம் போயிவிடும். அப்பொழுது தான் நாமக்கல், கால்நடைக் கல்லூரியில் காடை வளர்ப்பைப் பற்றி பயிற்சி கொடுத்தார்கள். அதற்குப் பிறகு அவர்கள் இடமே குஞ்சுகளை வாங்கிக் கொண்டு வந்து என்னிடம் இருந்த ஒரு கொட்டகையில் விட்டு வளர்த்தேன் குறைந்த நாட்களில் அதிக எடை வருகிற ‘நாமக்கல் – 1’ ரக காடையைத்தான் நான் வளர்க்கிறேன். கோழி மாதிரி, இதனை நோய், நொடி தாக்குவதில்லை. அதனால் உசி, மருந்து போடுகிற வேலையும் இல்லை. தினமும் காலையில் ஒரு மணி நேரம், சாயங்காலம் ஒரு மணி நேரம் மட்டும் தண்ணீர் வைத்து பார்த்தால் போதும். அந்த வேலையை வீட்டில் இருக்கிறவர்களே செய்யலாம். கோழி வளர்த்தால் வருமானம் பார்க்க 90 நாட்களாகும். ஆனால் இந்தக் காடையில் 30 நாட்களில் வருமானம் பார்க்கலாம். இதைப் பார்த்த பிறகு கோழிப் பண்ணையை விட்டுவிட்டு நாலு கொட்டகையிலையும் காடையை வளர்க்க ஆரம்பித்துவிட்டேன்.

மாதம் 10 ஆயிரம்!

என்னிடம் மொத்தம் 2,000 குஞ்சுகள் இருக்கிறது. அதில் பொடிக் குஞ்சு, 10 நாள் குஞ்சு, 20 நாள் குஞ்சு, 30 நாள் குஞ்சு என்று நான்காக பிரித்து வளர்க்கிறேன். இதை சுழற்சி முறையில் செய்து கொண்டிருக்கிறேன். ஒரு நாள் வயதுள்ள குஞ்சுகள் நாமக்கல் கல்லூரியில் வாங்கி வந்து முப்பது நாளைக்கு வளர்த்து விக்கின்றேன். ஒரு காடைக்கான உற்பத்தி செலவு 15 ரூபாய் வரைக்கும் ஆகும். அதை 25 ரூபாயிலிருந்து 30 ரூபாய் வரைக்கும் விற்கின்றேன். விற்பனையில் எனக்கு எந்த சிரமமும் இல்லை. அருகில் இருப்பவர்கள், கறிக்கடைக்காரர்கள், நைட்ஹோட்டல்காரர்கள் தேடி வந்து வாங்கிக் கொண்டு போகிறார்கள். மாதம் ஆயிரம் குஞ்சுகளை வித்தாலும் செலவு போக 10 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.

குறைந்த நாளில் அதிக எடை!

‘நாமக்கல் காடை – 1’ ரகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மற்ற காடை ரகங்களை விட இந்த ரக காடைகளுக்கு நோய் எதிர்ப்புத் திறன் அதிகம். மற்ற காடைகளைவிட, இந்த ரகத்தை வாங்கி வளர்த்தால் அதிக லாபம் கிடைக்கும்.

பழைய பண்ணைகளே போதும்!

“காடைகளை வளர்க்க அதிக பணம் தேவையில்லை. பயன்படுத்தாத கொட்டகை, கோழிப் பண்ணைகளிலும் வளர்க்கலாம். அல்லது குறைந்த முதலீட்டில் கொட்டகை போட்டும் வளர்க்கலாம். ஆழ்கூளம் (கொட்டகை), கூண்டு என இரண்டு முறையிலும் வளர்க்கலாம். நமது வசதியைப் பொறுத்து இதை முடிவு செய்து கொள்ளலாம். கொட்டகையைவிட கூண்டில் வளர்க்கும் போது கையாள்வதற்கு சுலபமாக இருப்பதுடன் நோய்க் கிருமிகளும் அதிகமாக தாக்காது. ஆனால், கூண்டு செய்ய ஆரம்ப முதலீடு சிறிது அதிகமாக இருக்கும்.
முதல் முறையாக காடையை வளர்ப்பவர்கள், சுமார் 12 கிராம் எடையுள்ள ஒரு நாள் வயதுடைய காடைக் குஞ்சுகளை வாங்கி வளர்க்க வேண்டும். முதல் பத்து நாட்களுக்கு விளக்குப் போட்டு, போதுமான சூட்டை (வெப்பம்) குஞ்சுகளுக்குக் கொடுக்க வேண்டும். இந்தப் பத்து நாட்களும் பருவ நிலைக்கு ஏற்ப செயற்கை வெப்பம் கொடுக்க வேண்டும்.

இறப்பைத் தடுக்கும் கோலிக்குண்டு!

முதல் இரண்டு வாரத்தில் பெரும் பாலான காடைகள் தண்ணீர் வைக்கும் பாத்திரத்தில் விழுந்து அதிகமாக இறந்து விடும். அந்தப் பாத்திரத்தில் கோலிக்குண்டுகளை போட்டு வைத்தால் உள்ளே என்னவோ இருக்கிறது என்ற பயத்தில் குஞ்சுகள் உள்ளே இறங்காமல் இருக்கும். இதன் மூலம் அவற்றின் இறப்பைத் தவிர்க்கலாம். அல்லது ‘நிப்பிள்’ மூலம் தண்ணீர் கொடுக்கலாம். நிப்பிளைப் பயன்படுத்தும் போது சுத்தமான நீர் தொடர்ச்சியாக குஞ்சுகளுக்கு கிடைக்கும்.
காடைக் குஞ்சுகளின் கால் மிகவும் மிருதுவாக இருக்கும். அதனால் வளவளப்பான பரப்பில் (செய்தித் தாள் போன்றவற்றின் மீது) வளர்க்கும் தீவனம், தண்ணீர் எடுக்காமல் இறந்து போகும். எனவே, சணல் துணியைப் பரப்பி அதன் மேல் மூன்று நாள் வளர்ந்த பிறகு, வளவளப்பான பரப்பில் வளர்த்தால் கால் ஊனமாகாது.
இரண்டாவது வாரத்தில் காடையின் எடை, சராசரியாக 90 கிராம் இருக்க வேண்டும். இந்தப் பருவத்தில் தான் வளர்ச்சி வேகமாக இருக்கும் அதனால் தொடர்ச்சியாக தீவனம் கிடைப்பது போல பார்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக இரவு நேரத்தில் தீவனம் எடுக்க வசதியாக இடத்தை வெளிச்சமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

500 கிராம் தீவனம்.. 200 கிராம் எடை!

காடைகளுக்கு முதல் இரண்டு வாரங்களுக்கு ஆரம்பகால தீவனத்தையும் கொடுக்க வேண்டும். இது கடைகளில் கிடைக்கிறது. ஆரம்ப கால தீவனத்தில் புரதம் அதிகமாகவும், எரிசக்தி குறைவாகவும் இருக்கும். இறுதி கால தீவுனத்தில் புரதம் குறைவாகவும், எரிசக்தி அதிகமாகவும் இருக்கும். காடைக்கான பிரத்யெகத் தீவனம் கிடைக்காவிட்டால் பிராய்லர் கோழிக்கான, ‘ஆரம்ப காலத் தீவனத்தையே பயன்படுத்தலாம். ஒரு காடை 500 கிராம் தீவனத்தை சாப்பிட்டால், 200 கிராம் எடை வரும். காடை வளர்ப்பில் தீவனச் செலவு 70% இருக்கும். சொந்தமாக தீவனம் தயாரிக்கும்போது இதைக் குறைக்கலாம். ஆனால் வாரத்திற்கு 1,000 காடைகளுக்கு மேல் வளர்த்தால் மட்டுமே தீவனத் தயாரிப்பில் இறங்க வேண்டும். சிறிய அளவில் வளர்க்கும்போது, தீவனம் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை வாங்கும் செலவு அதிகமாகிவிடும்.
காடைக்கு தீவனம் மாதிரியே தண்ணீரும் மிகவும் முக்கியம். இரண்டும் சுத்தமாக இருந்தால், பெரும்பாலும் நோய்கள் வராது. முதல் இரண்டு வாரங்களுக்கு கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீரைக் கொடுப்பது நல்லது. பிறகு, கொதிக்க வைக்கத் தேவையில்லை. தண்ணீரில் ‘ஹைட்ரஜன் பெராக்ஸைடு’ கிருமிநாசினியைக் கலந்து கொடுத்தால் போதும். இது, குறைந்த விலையில் எல்லா இடங்களிலும் கிடைக்கும் 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு மில்லி வீதம் கலந்து கொடுக்கலாம்.

கறிக்கோழி வளர்ப்பவர்கள் அதை விற்பனை செய்வதற்குள் 4 தடுப்பூசி போடுவார்கள். ஆனால், காடைகளுக்கு எந்த விதமான தடுப்பூசிகளும் போடத் தேவையில்லை. தண்ணீர், தீவனம் சுகாதாரமாக இல்லாவிட்டால், மட்டுமே நோய் தாக்கும். தரையில் ஆழ்கூள முறையில் வளர்க்கும் போது, கோழிகளைத் தாக்கும் ரத்தக் கழிசல் நோய் வர வாய்ப்பு உள்ளது. இதனைத் தடுக்க தீவனத்தில் ரத்தக் கழிசல் நோய்த் தடுப்பு மருந்துகளைக் கலந்து கொடுக்கலாம். காடைகளைக் கூண்டு முறையில் வளர்க்கும் போது பெரும்பாலும் ரத்தக் கழிசல் நோய் வருவதில்லை.

விற்பனையில் வில்லங்கமில்லை

அதிகபட்சம் 15 ரூபாய் செலவில் உற்பத்தி செய்யப்படும் ஒரு காடை 25 ரூபாய்க்கு குறையாமல் விற்பனையாகிறது. அந்தந்தப் பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகள், அசைவ உணவகங்கள், அருகில் உள்ளவர்கள், பார்களில் இதற்கான விற்பனை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எங்களிடம் குஞ்சுகளை வாங்கி வளர்ப்பவர்களுக்கு இதுவரை விற்பனையில் பிரச்சனை என்று வந்ததில்லை. எனவே நிச்சய லாபம் கிடைக்கும் இந்த ‘நாமக்கல் – 1’ ரக காடையை விவசாயிகளுக்கு முன்பதிவின் அடிப்படையில் ரூ. 3.50 வீதம் விற்பனை செய்கிறோம்.

தொடர்புக்கு:
இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
கோழியின அறிவியல் துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
நாமக்கல் – 637002
தொலைபேசி: 04286 – 266494
முத்துசாமி,
அய்யம் பாளையம் கிராமம்,
நாமக்கல் மாவட்டம்
தொலைபேசி: 99659 - 52483

ஏரோபிளேன் ஏற வைத்த எருமை வளர்ப்பு!



மேலே


பால்பண்ணை, பால்மாடு என்றாலே கலப்பினப் பசுக்கள் தான் நினைவிற்கு வரும். வெளிநாடுகளைச் சேர்ந்த ஜெர்சி, சிந்து, ஃபிரீசிஸியன் போன்ற கலப்பின மாடுகள் அதற்குக் காரணம். இரத வகையான மாடுகளுக்கு அதிகப் பராமரிப்புத் தேவைப்பட்டாலும், ஒரு எருமை சாப்பிடும் தீவனத்தைவிடக் குறைவாகச் சாப்பிட்டு ஐந்து எருமை கொடுக்கும் அளவுக்கு அதிக பால் கொடுக்கும் என்பதுதான்.
இது போன்ற காரணங்களால் நாட்டுப் பசு மற்றும் எருமை போன்றவற்றின் வளர்ப்பு குறைந்து கொண்டே இருக்கிறது என்றாலும், தயிர், தேநீர், போன்ற உபயோகங்களுக்குப் பலராலும் இன்றளவும் எருமைப் பால் விரும்பப்படுகிறது. எருமை, குறைவாகப் பால் கொடுத்தாலும் அதிலிருக்கும் கொழுப்புச் சத்தின் அளவு மிகவும் அதிகம் என்பதும் அந்தப் பால் விரும்பப்படுவதற்கு ஒரு காரணம். பல கிராமங்களில் எருமை வளர்ப்பு ஓரளவுக்கு நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது போல் ‘எருமை வளர்க்கும்’ கிராமங்களில் ஒன்று தான் தேனி மாவட்டம், சங்கராபுரம் அருகில் இருக்கும் வடமலைராஜபுரம். 

எருமை வளர்ப்பில் கரை கண்ட இந்த ஊர்க்காரர்களில் ஒருவரான கருப்பையா, அதைப் பற்றி கருப்பையா கூறுகிறார். நான் படிக்கலை, அதனால் எனக்கு எந்த வேலையும் கிடைக்கலை. இருந்த தோட்டத்தில் கொஞ்சம் விவசாயத்தைப் பார்த்துக்கிட்டே விவசாயக் கூலி வேலையையும் செய்து கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் கிராமங்களில் எல்லா வீடுகளிலும் பாலுக்காக எருமை மாடு வளர்ப்பார்கள். அதனால் நானும் ஒரு எருமை வாங்கலாம் என்று ஆசைப்பட்டேன். 83 – ம் வருடம் முன்னூறு ரூபாய்க்கு ஒரு எருமைக் கன்று வாங்கினேன். இப்பொழுது என்னிடம் இருக்கின்ற எருமைகள் எல்லாம் அதனுடைய வாரிசுகள் தான்.

இப்பொழுது மொத்தம் எட்டு ஈத்துவழி எருமைகள், ஏழு கிடேரிகள், ஒரு பொலிகாளை வைத்திருக்கிறேன். ஒரேயொரு எருமைக் கன்றுக்குட்டியில் தான் என்னுடைய வாழ்க்கை மேலே உயர ஆரம்பித்தது. வீடுகட்டி, பிள்ளைகளைப் படிக்க வைத்து வெளிநாட்டு வேலைக்கு அனுப்பினேன்.
மேய்ச்சல் நிலம்.. தண்ணீர் அவசியம்!

“எருமை வளர்க்க கட்டாயம் மேய்ச்சல் நிலம் இருக்க வேண்டும். அவை காலாற சுற்றி வந்து மேய்ந்து, வயிறு நிறைய சாப்பிட்டால் தான் நன்கு வளரும். காலையில் தண்ணீர் காட்டி மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். வெள்ளாடு, பசுக்களைப் போல் இல்லாமல், ஒரே இடத்தில் நின்று கொண்டே செடிகளைச் சாப்பிடும். அந்த இடத்தில் தீர்ந்தால்தான் அடுத்த இடத்துக்குப் போகும். காலை பத்து மணியளவில் ஏதாவது குளம், குட்டையில் கொஞ்ச நேரம் இருக்க விட வேண்டும். குளங்களில் தண்ணீர் இல்லாத சமயங்களில் பம்பு செட் மூலமாவது தண்ணீர் பாய்ச்சி எருமைகளைக் குளுமைப் படுத்த வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது இப்படிச் செய்ய வேண்டும். அதிக வெயிலில் எருமைகளைக் கட்டிப் போடக் கூடாது. உச்சி வெயில் நேரங்களில் தானாகவே அவையெல்லாம் நிழலைத் தேடிப் போய் விடும்.
கொட்டகையெல்லாம் தேவையில்லை!

மதியம் மூன்று மணி வாக்கில் பால் கறந்துவிட்டு, மீண்டும் தண்ணீர் காட்டி மேயவிட வேண்டும். சாயங்காலம் ஆறு மணி சுமாருக்கு அழைத்து வந்து மீண்டும் தண்ணீர் காட்டி கட்டி வைத்தால் போதும். இதற்காக தனிக் கொட்டகையெல்லாம் அமைக்க வேண்டியதில்லை. ஏதாவது மர நிழலில் கட்டி வைத்தால் போதும் மழையோ, பனியோ எதுவாக இருந்தாலும் எருமைக்கு எந்த பாதிப்பும் வராது. மழையில் நனைந்தால் பாலின் அளவு கூடும். இரவில் வைக்கோலைத் தீவனமாகக் கொடுக்கலாம். காலையில் மூன்று மணிவாக்கில் பால் கறந்து விடலாம்.
சினை மாட்டுக்கும், பால் கறக்கும் மாட்டுக்கும் தண்ணீர்த் தொட்டியில், கம்பு மாவு, சோளமாவு, புண்ணாக்கு, தவிடு ஆகியவற்றை அதிகமாகக் கலந்துவிட வேண்டும். அதன் மூலம் தான் எருமை நன்கு பளபளப்பாகும், பாலின் அளவும் கூடும். பால் கறப்பதை நிறுத்தும் நிலையில் இருக்கும் மாட்டுக்கு மேற்கண்ட தீவன அளவுகளைக் குறைத்துக் கொள்ளலாம்.

பருவம் சொல்லும் பல்!

எருமைகள் இரண்டு பல் முளைத்த பிறகுதான் பருவத்துக்கு வரும். சினைப் பருவத்திற்கு வந்த எருமைகள், கீழ் வரிசைப் பல்லைக் காட்டி கத்தும். விட்டு விட்டு சிறுநீர் கழிக்கும். இதை வைத்துக் கண்டுபிடிப்பது சிறிது சிரமம் என்பதால் கூடவே ஒரு பொலி எருமைக் கிடாவையும் வளர்த்தால் அது பருவத்துக்கு வந்த எருமைகளை விரட்டும். அதை வைத்து எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். அதன் பிறகு நேரடியாகவோ, செயற்கை முறையிலோ கருவூட்டல் செய்து கொள்ளலாம். கன்று போட்ட மூன்று நான்கு மாதங்களுக்குப் பிறகு தான் மீண்டும் எருமைகள் பருவத்துக்கு வரும்.
எருமையின் கீழ் உதட்டைப் பிரித்துத் தெரியும் பற்களை வைத்து வயதைக் கணக்கிடலாம்
2 பல்
2 முதல் 3 வயது
4 பல்
3 முதல் 4 வயது
6 பல்
4 முதல் 5 வயது
8 பல்
5 முதல் 6 வயது
பால் பற்கள் இருந்தால், 2 வயதுக்கும் குறைவானவை என்றும் பத்து பற்களுக்கு மேல் இருந்தால், அதிக வயதானவை என்றும் தெரிந்து கொள்ளலாம்.
எருக்கு இலை பழுப்பதேன்… எருமைக் கன்று சாவதேன்?

கன்றுகள் பிறந்ததிலிருந்து நாற்பது நாட்கள் வரை வயிறாரப் பால் குடிக்க அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால் கன்றுகள் இறந்து போக வாய்ப்பிருக்கிறது. இதை மனதில் வைத்து தான் கிராமங்களில் ‘எருக்கலை பழுப்பதேன்? எருமைக் கன்று சாவதேன்,’ என்று ஒரு விடுகதை போடுவார்கள். அதன் விடை ‘பால் இல்லாமல்’ என்பதாகும்.
பிறந்த அன்றே கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். கன்றுப் பருவத்தில் முடியை மழித்துவிட வேண்டும். இல்லையென்றால் பேன் பிடித்து அரிப்பெடுக்கும். அரிப்பெடுத்த இடத்தை நக்கும்போது முடி வயிற்றுக்குள் சென்று விடும். இதைச் சரியாகக் கடைபிடித்து விட்டால், கன்றுகளை இறப்பிலிருந்து தடுத்து விடலாம்.

தடுப்பூசிகள் அவசியம்!

எருமைக்குப் பெரும்பாலும் அதிகமாகக் காணை நோய்தான் வரும். காணை தாக்கினால் வாயிலும், கால் குளம்பிலும் புண் வந்து, எச்சில் ஒழுகும். தடுப்பூசி மூலம் காணை நோயைத் தவிர்க்கலாம். பால் முழுவதையும் கறந்தாலோ, அல்லது கன்று குடித்தாலோ மடி நோய் வரும். அதேபோல் பால் கறப்பவர்கள் கைகளில் நகம் இருக்கக்கூடாது. சுத்தமாகக் கழுவுியபின் தான் கறக்க வேண்டும். சுண்ணாம்புச் சத்து குறைவு காரணமாக சமயங்களில் மாடு படுத்துக் கொண்டே இருக்கும். அதுமாதிரியான சமயங்களில் தெளிந்த சுண்ணாம்பு நீரைக் குடி நீரோடு கலந்து கொடுக்க வேண்டும். தடுப்பூசிகளையும் தவறாமல் போட்டுவிட வேண்டும்.

ஒரு நாளைக்கு 10 லிட்டர்!

கன்று போட்டதிலிருந்து மூன்று மாதம் வரைக்கும் ஒரு நாளைக்கு ஒரு எருமை அதிகபட்சம் 10 லிட்டர் பால் கொடுக்கும். அடுத்த இரண்டு மாதம் 3 லிட்டராகும். அடுத்த 3 மாதம் 5 லிட்டர் ஆகும். பாலின் அளவில் இப்படி ஏற்ற இறக்கம் இருக்கும். அதன் பிறகு பால் வத்திவிடும். பசுந்தீவனம் நிறைய சாப்பிட்டா, பால் கூடும். கோடையில் கொஞ்சம் குறைவாகத்தான் பால் கறக்கும். டீக்கடை, மற்றும் வெளியில் நேரடியாக பால் விற்றால் லிட்டருக்கு 16 ரூபாய் தான் கிடைக்கிறது. எருமைப்பால் கொழுப்பு அதிகமாக, கெட்டியாக இறுப்பதால் தான் நல்ல விலை கிடைக்கிறது.
“எருமையைப் பொறுத்தவரைக்கும் பராமரிப்புக்காக மிகவும் குறைந்தபட்சம் விஷயங்களை எல்லாம் முறைப்படி பராமரிப்போமானால் எருமை மூலமாகவே போதுமான லாபம் பெறலாம்”.
சினையான கன்றுக்குட்டிக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை விலை கிடைக்கும். என்னிடம் இருக்கின்ற மாடுகளில் எட்டு மாடு இப்ப கறந்துகொண்டிருக்கிறது. சராசரியாக ஒரு நாளைக்கு 50 லிட்டர் பால் மூலமாக, மாதத்திற்கு செலவு போக 14,000 ரூபாய் கிடைக்கிறது. கறவைக் கூலியாக 2000 ரூபாயும், சாணி மூலமாக 3000 ரூபாயும் கிடைக்கிறது. மொத்தம் மாதத்திற்கு 17,000 ரூபாய் லாபமாக கிடைக்கிறது.

தொடர்புக்கு:
திரு. கருப்பையா,
வடமலைராஜபுரம்,
சங்கராபுரம் அருகில்,
தேனி மாவட்டம்.
அலைபேசி: 98437 - 27958

ஆண்டுக்கு இரண்டு ஈத்து ஈத்துக்கு இரண்டு குட்டிகள்





வான்கோழி, காடை, வென்பன்றி, முயல் கறிக்கோழி என இறைச்சிக்காக பல வகை கால்நடைகளை வளர்த்தாலும் நாட்டுக்கோழிக் கறி, ஆட்டுக் கறி இவையிரண்டுக்குமான கிராக்கி என்றும் குறைவதேயில்லை. மளமளவென்று ஏறி வரும் இவற்றின் விலை, அப்படியிருந்தும் சந்தையில் இவற்றுக்கான தட்டுப்பாடு ஆகியவையே இவற்றின் தேவைக்கான சாட்சி. அந்த வகையில் விவசாயிகளுக்கு அதிகளவில் கைகொடுத்து வருவது ஆடு வளர்ப்புதான்.
ஏறத்தாழ நம் ஊர் வெள்ளாடுகளைப் போன்ற தோற்றம். ஆனால், உயரம் மட்டும் கொஞ்சம்குறைவு. முழுவெள்ளை மற்றும் முழுகருப்பு என இரண்டு நிறங்களில் இருக்கும் இந்த ஆடுகளின் காது, கண், கால் என்று சில இடங்களில் மட்டும் கருப்பு அல்லது வெள்ளை நிறத்தில்பரஸ்பரம் மாறி இருக்கின்றன.
ஆடுகளைக் கொட்டிலிருந்து மேய்ச்சலுக்காகத் திறந்து விட்ட சுந்தர்ராஜன். “பெங்கால் கருப்புன்ற வகை ஆட்டுக்கும், ஆஸ்டின் வெள்ளைன்ற ஆட்டுக்குமான கலப்பின வகை இது. நம்ம ஊரு செம்மறி ஆட்டை வளர்க்கற மாதிரி மேயவிட்டும் வளர்க்கலாம். வெள்ளாடு மாதிரி கொட்டில்ல அடைச்சு, தீவனம் கொடுத்தும் வளர்க்கலாம். ஆக, எல்லா வகையிலும் செளரியமானது இந்த ஆடு. பெரும்பாலும் இதை அழகுக்காகத்தான் வளர்க்கறாங்க. நானும் அப்படித்தான் வாங்கிட்டு வந்தேன். நாலு வருஷத்துக்கு முன்ன ஒரு தடவை சந்தைக்குப் போயிருந்தப்ப, ஒரு வியாபாரி இந்த ஆட்டை கொண்டு வந்திருந்தார். பாக்கறதுக்கு நல்ல ஜாதி நாய்க்குட்டி மாதிரி இருந்துச்சு. சரி பேத்தி விளையாடறதுக்கு ஆகட்டுமேனு ஐநூறு  ரூபாய்க்கு வாங்கினேன். ஆனா, நாளடைவுல இதையே பெரிய அளவுல வளர்க்க ஆரம்பிச்சிட்டேன்” என்று பெருமிதத்தோடு ஒரு ஆட்டுக்குட்டியைத் தடவிக் கொடுத்தார். 

தற்போது 57 வயதாகும் சுந்தராஜன், கோவையில் பத்து ஆண்டு காலம் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். கோர்ட்டையும், கோப்புகளையும் பார்த்துப் பார்த்து ஒரு கட்டத்தில் அலுத்துப் போகவே சட்டப் பணிக்கு மொத்தமாக, முழுக்குப் போட்டுவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பி, மனைவியோடு கைகோத்து முழுநேர விவசாயத்தில் இறங்கிவிட்டார்.
“அந்த ஆட்டைப் பிடிச்சுக்கிட்டு வந்தப்போ அது என்ன ரகம்னெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா, வீட்டுல எல்லாத்துக்கும் எனக்குத் தெரியாது. ஆனா, வீட்டுல எல்லாத்துக்கும் பிடிச்சுப்போயிடுச்சு. அந்த சமயத்துல வீட்டுக்கு வந்த சொந்தக்காரர் ஒருத்தர்தான் இதோட ரகத்தைச் சொல்லி, கேரளாவுல இருந்து இதுக்கு ஜோடியா ஒரு கிடாக் குட்டியை வாங்கிட்டு வந்து கொடுத்தார். அந்த ரெண்டு ஆடுதான் இன்னிக்கு நாப்பது ஆடுகளா பெருகியிருக்கு. இதுக்காக நான் தனியா கொட்டகையெல்லாம் அமைக்கல. ஏற்கெனவே  காலியா கிடந்த கறிக்கோழிக்கொட்டகைக்கு உள்ளேயேதான் வளர்த்துக்கிட்டு இருக்கேன்.

அதிகபட்சம் ரெண்டரை அடி உயரம்தான் இதுங்க வளருதங்க. தீவனம், தண்ணியெல்லாம் குறைவாத்தான் எடுத்துக்குதுங்க. நோய் எதிர்ப்புச் சக்தி நல்லாவே இருக்கறதால, பெருசா எந்த நோயுமே வர்றதில்லை. பூச்சிமருந்துகூட கொடு்குறதில்லைனா பார்த்துக்கோங்க. காலையில் ஒவ்வொரு ஆட்டுக்கும் கால் கிலோ மக்காச்சோளத்தைக் கொடுத்து. தண்ணியையும் வெச்சுடுவோம். சாயங்காலம் மூணு மணி வாக்குல மேய்ச்சலுக்கு அனுப்புவோம். ஆறரை மணிக்குப் பிறகு திரும்பவும் அடைச்சுடுவோம்.

எந்த இலை, தழையையும் கழிக்கிறதில்லை. தென்னை ஓலை, தேக்கு இலைனு விட்டு வெக்காம சாப்பிட்டுட்டு, ‘கண்டதைத் தின்றால் குண்டன் ஆவான்ன்ற மாதிரி ‘கொழுகொழு’னு ஆயிடும். மேய்ச்சலுக்காகவே தட்டை, கொள்ளு, கம்புனு மாத்தி மாத்தி பயிர் பண்ணிடுவோம். மேய்ச்சல் முடிஞ்சதும் ஒரு தண்ணி பாய்ச்சுனோம்னா மறுதழைவு வந்துடும். ஆடுகளோட எருதான் அதுக்கு உரம்” என்று சுந்தரராஜன் நிறுத்த, தொடர்ந்தார் செண்பகவல்லி. 

“ஆடுகளுக்குனு எயும் வெளியில வாங்குறதில்ல. இயற்கை முறையில் நாங்களே உற்பத்தி பண்ற மக்காச் சோளம், சவுண்டல்தான் தீவனம். வழக்கமா ஆடுக ரெண்டு வருஷத்துக்கு மூணு தடவை குட்டி ஈனும். இந்த ஆடுக, வருஷத்துக்கே ரெண்டு தடவை ஈனுதுங்க. அஞ்சு மாசத்துலேயே பருவத்துக்கு வந்துடுது. ஒவ்வொரு ஈத்துக்கும் ரெண்டு குட்டிங்களை ஈனுது. தென்னந்தோப்பு வெச்சுருக்கவங்களுக்குகளை எடுக்குறதுக்கு இந்த வகை ஆடுகள் வரப்பிரசாதம்னே சொல்லலாம். அந்தளவுக்கு எல்லாச் செடிகளையும் பிடுங்கிச் சாப்பிட்டுடுதுக. நம்ம சீதோஷ்ண நிலைக்கு நல்லா தாங்கி வளருதுங்க இந்த ஆடுக” என்று தன் பங்குக்கு கலப்பின ஆடுகளின் பெருமையைச் சொன்னார்.

நிறைவாக வருமானம் பற்றிய பேசிய சுந்தராஜன், “கிடைக்கிற குட்டிகளில் சராசரியா பாதி அளவுக்கு கிடாக் குட்டிகளும் இருக்கு. நான் இந்த ஆடுகளைப் பெருக்கணும்னு நினைச்சு வளர்க்கறதால பெரியளவுல விற்பனை செய்யலை. கிடாக்குட்டிகளை மட்டும் ஏழு மாசம் வளர்த்து வித்துடுவேன். ஏழு மாசத்துல இருபது கிலோ வரை எடை வந்துடும். உயிர் எடைக்கு கிலோ 125 ரூபாய்னு எடுத்துக்கறாங்க. இதுவரைக்கும் இப்படி அஞ்சாறு கிடாக்களை கறிக்காக வித்துருக்கேன். வளப்புக்காக ஏழு ஜோடியை வித்துருக்கேன். இதெல்லாம் கழிச்சது போக, கையில நாப்பது ஆடுக இருக்கு. கசாப்புக் கடைக்காரங்க தேடி வந்து விலைக்கு கேட்டுக்கிட்டு இருக்காங்க. இனிமேதான் விற்பனையைத் தொடங்கணும். எப்படி இருந்தாலும் பத்து பெட்டை, ஒரு கிடா வாங்கி விட்டோம்னா வருஷத்துக்கு நாப்பது குட்டி கண்டிப்பா கிடைக்கும்” என்றார் .

தொடர்புக்கு
சுந்தர்ராஜன்
அலைபேசி: 93675-33111

வாழ்க்கையை வளமாக்கிய எருமை வளர்ப்பு





தஞ்சாவூர் மாவட்டம்,  கோடுகிழி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமலிங்கம். என் மாமனார், 1987-ம் வருடம் எனக்குச் சீதனமாக கன்னுக்குட்டியோட ஒரு எருமை மாட்டைக் கொடுத்தார். அப்ப எனக்குனு இருந்தது, ஒரு ஏக்கர் நிலமும், ஒரே ஒரு மண் குடிசையும்தான். எருமையும். கன்னுக்குட்டியும் வந்த அடுத்த வருடத்துலயே என் வாழ்க்கை மாறத் தொடங்கிடுச்சு. மாடுகளோட எண்ணிக்கை பெருகிக்கிட்டே போய்விட்டது. பால் மற்றும் மாடு விற்பனை மூலமாக நல்ல வருமானம் கிடைத்தது.  இந்த வருமானத்தை வைத்து தான் குடும்பத்தைக் கவனித்து, வசதியாக வீடு கட்டி என் ரெண்டு பொண்ணுங்களையும் நன்றாக படிக்க வைத்து வசதியான இடத்தில் கல்யாணமும் பண்ணிக் கொடுத்தேன். அதுமட்டுமில்லாமல் நில புலன்களும் கொஞ்சம் வாங்கியிருகேன்”.

            “சீதனமா வந்தப்ப. எருமைக்கு நாலு வயசு, சினைப் புடித்து, அடுத்த பத்து மாதத்தி்ல கன்னு போட்டுவிட்டது. சீதனமாக வந்தபொழுது கன்றுக்குட்டிக்கு ஒண்ணரை வயது. அடுத்த ஒண்ணரை வருடத்திலேயே அதுவும் கன்று போட்டுவிட்டது. புதுசாக பிறந்த ரெண்டு கன்னுக்குட்டியும் வளர்ந்து, மூணாவது வயதில் அதுங்களும் கன்று போட்டுவிட்டது. இப்படியே பெருகி ஏழு வருடத்திலேயே பதினாறு எருமைகள் ஆகிவிட்டது.
            இரண்டு வயது முடித்ததும், பருவத்துக்கு வந்து சினைப்புடித்து, அடுத்த பத்து மாத்தில் கன்று போட்டுவிட்டுவிடுமா அடுத்த ஐந்து மாதத்திலேயே மறுபடியும் சினைப் புடித்துவிடும், சராசரியாக பதினைந்து மாதத்துக்கு ஒரு முறை ஒரு ஈத்து கிடைக்கும். ஒரு எருமையிலிருந்து இதே மாதிரி பத்து ஈத்து வரைக்கும் கிடைக்கும். ஆனா, நாங்க இரண்டு ஈத்து வரைக்கும் தான் ஒரு எருமையை வைத்திருப்போம். மூன்றாவது ஈத்து போட்டதும், கன்னுக்குட்டியோட அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் விலை வைத்து வித்துவிடுவோம்.
கன்னுக்கு நன்றாக பால் கொடுத்து வளர்க்கறதால். சீக்கிரத்துலேயே சினைப் புடித்துவிடும். நோய் எதிர்ப்புச் சக்தியும் இருக்கும். தொடர்ச்சியாக பாலும் கிடைக்கும். அதனால், எங்க வளர்ப்பில் இருக்கற எருமைகளுக்கு சந்தையில் எப்பவும் நல்ல மதிப்பு இருக்கு.

            ஒரு கடா கன்னுக்குட்டி, இரண்டு வருடத்தில் சினையூட்டறதுக்குத் தயாராயிடும். எங்ககிட்ட உள்ள கடாவும் நல்ல ஆரோக்கியமா, திடகாத்திராமா இருக்கிறது. சினை ஊசி போடாமல் இயற்கையாகவே கருவூட்டல் நடக்கிறதால், சீக்கிரத்தில் கிடேரி சினைப் புடித்துவிடும். பிறக்குறக் கன்னுக்குட்டியும் நல்லா  ஆரோக்கியமா இருக்கும். பத்து கிடேரிக்கு ஒரு கடா வளர்த்தாலே போதும். நாலு வயது வரைக்கும் கடா நல்ல வீரியமாக இருக்கும். அதுக்கு மேல அதை வித்துடலாம். நாலு வயதுள்ள கடாவுக்கு பத்தாயிரம் ரூபாய் விலை கிடைக்கும். இதுவரைக்கும் 30 கடா விற்று இருக்கிறோம். இப்ப என்கிட்ட சுருட்டை இனத்தைச் சேர்ந்த மூன்று பெரிய எருமையும், மூன்று கிடேரியும், ஒரு கிடேரி கன்றும், ஒரு கடாவும் இருக்கிறது.

வளர்க்கும் முறை:
எருமைகளைக் கட்டிப்போட்டுத்த தீவனம் கொடுத்து வளர்ப்பவர்களுக்கு நஷ்டம்தான் மிஞ்சும். எருமை வளர்ப்பவர்கள் பெரும்பாலும் கன்றுக்கு தேவையான அளவுக்கு பாலை விடாமல், முழுமையாகக் கறந்துவிடுவார்கள். இதனால் கன்றுகள் வளரும்போது நோய் எதிர்ப்புச் சக்தியே இல்லாமல். நோஞ்சானாகி விடும். சினைப் பிடிப்பதிலும் பிரச்சனை உருவாகும். சினைப் பிடித்தாலும்கூட, பிறக்கும் கன்று ஆரோக்கியம் இல்லாமல் திடீரென இறந்து விடும். எருமையின் பால் கொடுக்கும் திறனும் வெகுவாகக் குறைந்து விடும். அதனால் எருமை வளர்ப்பில் முக்கியமாக கவனிக்க வேண்டியது கன்று பிறந்ததிலிருந்து பத்து மாதம் வரை தாய்ப்பால் தர வேண்டும். பிறந்த 15-ம் நாள் வரை காலை, மாலை இருவேளையும் முழுமையாக பால் குடிக்க அனுமதிக்க வேண்டும். 15 நாட்களுக்குப் பிறகு, எருமையின் பால் சுரக்கம் தன்மை அதிகரிக்கத் தொடங்கும். அப்போது, ஒரு காம்பில் மட்டும் பாலை கறந்து கொண்டு, மற்ற மூன்று காம்புகளையும் கன்றுக்காக விட்டுவிட வேண்டும்.

            எருமைப் பாலில் கொழுப்புச்சத்து அதிகமாக இருப்பதால், கன்றுக்கு செரிமானம் ஆகாமல் பல தொந்தரவுகள் உருவாகும். அதனால் கன்றுக்குட்டி பிறந்ததிலிருந்து ஒரு மாதம் வரை தினமும் ஒரு பூவன் வாழைப்பழம் கொடுக்க வேண்டும். பாலை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்க வேண்டும். 30 நாட்களுக்கு மேல் புல், வைக்கோல் என தீவனம் தின்னத் தொடங்கும். அப்போது 2 காம்பில் மட்டும் பால் குடிக்க அனுமதிக்க வேண்டும். 45 நாட்களுக்கு மேல் ஒரு காம்பில் மட்டுமே அனுமதிக்க வேண்டும். 60 நாட்களில் இருந்து, எட்டு மாதம் வரை அரை காம்பில் மட்டுமே பால் குடிக்க அனுமதிக்க வேண்டும். அதாவது, குறிப்பிட்ட அளவுக்கு மேல் குடிக்க அனுமதிக்கக் கூடாது. ஒரு  கன்றுக்குட்டி, பத்து மாத வயது வரை தாய்ப்பால் அருந்த வேண்டும். அதன் பிறகு அனுமதிக்கக் கூடாது. நாமும் பால் கறக்கக்கூடாது ஏனென்றால், அந்தச் சமயத்தில் தாய் மாடு 6 மாத சினையாக இருக்கும். ஆனால். பெரும்பாலும் கன்று போடும் முதல் நாள் வரை பால் கறந்து  விடுகிறார்கள். அப்படிச் செய்தால், எருமையில் உடல்நலம் பாதிக்கப்படுவதோடு, அதன் வயிற்றில் உள்ள கன்றின் உடல்நலமும் பாதிக்கப்படும்.

எருமை வளர்ப்பபை பொறுத்தவரை மேய்த்தலும் தேய்த்தலும்தான் மிக முக்கியம் பிறந்த ஒரு மாதத்திலிருந்தே கன்னுக்குட்டியை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். புல் மற்றும் மூலிகைத் தாவரங்களை உண்பதால் நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகும். எருமையைப் பொறுத்தவரை செரிமானப் பிரச்சனைதான் பெரிய பிரச்சனை. வீட்டிலேயே தீவனம் போட்டு வளர்த்தால், செரிமானம் ஆகாமல், குடல் புழுக்கள் அதிகமாகி, பலவிதமான நோய்கள் உருவாகும். சில சமயம் இறந்து விடும் வாய்ப்பும் இருக்கிறது.

தினமும் ஐந்து மணி நேரமாவது மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக சினை மாடுகளை, கன்று ஈனுவதற்கு முதல் நாள் வரை மேய்ச்சலுக்கு அழைத்து  சென்றால்தான், எவ்வித சிரமமும் இல்லாமல் ஈனும். பிறந்ததிலிருந்து 30 நாட்களுக்கு மேல் கன்றை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லலாம். பங்குனி முதல் ஆடி வரை வெயில் அதிகமாக இருப்பதால், தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரை மேய்த்து விட்டு, அதன் பிறகு 12 மணி வரை நீர்நிலைியல் கிடக்கச் செய்து. நன்கு தேய்த்து குளிப்பாட்டி கொட்டகைக்கு அழைத்து செல்ல வேண்டும்.. இல்லைபென்றால், பேன், உன்னி உருவாகி பல வித பாதிப்புகளை ஏற்படுத்தும்.

மாட்டுக் கொட்டகைக்கு அழைத்து வந்ததும். மதியம் 2 மணிக்கு ஒரு முறையும், 3 மணிக்கு ஒரு முறையும் எருமையின் மேல் தண்ணீர் தெளித்து, உடல் சூடேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மாலை 4 மணிக்குத் திரும்ப வேண்டும். மற்ற காலங்களில் காலை 10 மணியில் இருந்து 2 மணி வரைக்கும் மேய்ச்சலில் இருக்க வேண்டும்.
தினமும் குளிப்பாட்டும்போது கால் விரல்களின் இடுக்குகளில் அழுக்கு சேராமல் நன்றாக தேய்க்க வேண்டும். இல்லையென்றால் புண்கள் உருவாகி, புழுக்கள் பெருக்கெடுத்து. உயிருக்கே ஆபத்தாகி விடும்.

எருமை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும். மழையைத் தாங்கும் என்ற தவறான கருத்து நிலவுகிறது. மழையில் அதிகமாக நனைந்தால்... காய்ச்சல் உருவாகி ஜன்னி கண்டுவிடும். மழைக்காலங்களில் தவிர்க்க முடியாத சூழ்நிலையாக இருந்தால் மட்டும், அதிகபட்சம் நான்கு மணி நேரம் மழையில் இருக்கலாம். எருமை தினமும் சாணம் போடவேண்டும். சிறுநீர் கழிக்க வேண்டும். ஒரு நாள் தவறினாலும்... அது வியாதிக்கான அறிகுறி. உடனடியாக மருத்துவரிடம் காட்ட வேண்டும். சாணம் கழிசலாக இருந்தாலும் மருத்துவரை அணுக வேண்டும். சாணம் துர்நாற்றம் அடித்தால் அது குடற்புழு இருப்பதற்கான அறிகுறி. உடனே குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும். சாதாரணமாகவே ஆறு மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்க மருந்து தர வேண்டும். இதையெல்லாம்விட எப்போதுமே மாட்டுக் கொட்டகையை சுத்தமாக வைத்திருந்தாலே நோய்கள் அதிகம் தாக்காது.

“பொறுமைக்கு உதாரணமா எருமையைச் சொல்லுவாங்க. அந்தப் பொறுமையை எருமை வளர்க்கறதுலயும் காட்டணும். அப்பத்தான் நாம் நினைத்த மாதிரி லாபத்தைப்ப பார்க்க முடியும்”.

தொடர்புக்கு
ராமலிங்கம்
கோடுகிழி கிராம்,
தஞ்சாவூர் மாவட்டம், 
அலைபேசி: 93445-36882
தஞ்சாவூர் மாவட்டம்.

விறு விறு லாபம் தரும் விரால் மீன்



மேலே


ஏக்கர் கணக்ககில் குளமும் செழிப்பான தண்ணீ்ா வசதியும் இருந்தால், மட்டுமே மீன் வளர்ப்பில் ஈடுபட முடியும்  என்பது பெரும்பாலானோரின் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும் கருத்து.  இதை அடியோடு தகர்க்கும் விதத்தில், “ஒரு சென்ட் அளவுக்கு குளமும் அதில் நிரப்பும் அளவுக்கு நீரும் இருந்தாலே போதும். விரால் மீன் வளர்த்து அதிக லாபம் ஈட்ட முடியும்” என்கிறார் திருநெல்வேலியில் சேவியர் கல்லூரியில் இயங்கி வரும் நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தின் இயக்குநர்  ஹனீபா. சொல்வதோடு மட்டுமல்லாமல் அதற்கான பயிற்சியையும் இலவசமாக வழங்கி வருகிறது. இந்த மையம். விரால் மீன் வளர்ப்பை ஊக்குவிப்பதுதான் இந்த மையத்தின் முக்கிய நோக்கம். அந்த வகையில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் நிதி உதவியோடு ‘விரால் மீன்களைப் பாதுகாத்தல், அவற்றை இனபெருக்கம் செய்தல், விவசாயிகளுக்கு விரால் வளர்ப்புத் தொழில்நுட்பங்களை விளக்குதல் போன்றவைகளைச்  செயல்படுத்தி வருகிறது இம்மையம். 

மையத்தின் இயக்குநர் ஹனீபா நம்மிடம் “பொதுவா மீன் வளர்க்கறாங்க.  விரால் மீன் பக்கம் திரும்பறதேயில்ல. ஆனா, சாப்பாட்டு மீன்களில் விரால், அவுரி, குறவை விரால் மீன் நல்லா சதையாவும் சுவையோடவும் இருக்கும். முள்ளும் கம்மியா இருக்கறதால நிறையபேர் விரும்பி சாப்பிடுவாங்க. இதுல சில மருத்துவக் குணங்களும் இருக்கு. கர்ப்பிணிப் பெண்களுக்கும், இளம் தாய்மார்களுக்கும் இது நல்ல உணவு. ஆனா, தேவைக்குத் தகுந்த அளவுக்கு இங்க உற்பத்தி கிடையாது. பார்க்கறதுக்கு பாம்பு மாதிரி இருக்கறதால, இதை பாம்புத் தலை மீன்’னும் சொல்வாங்க. விரால் மீன்ல ஏறத்தாழ 30 ரகங்கள் இருக்கு. இந்தியாவுல பெருவாரியா இருக்குற  பத்து ரகங்களுக்கும் நல்ல  விற்பனை வாய்ப்பு இருக்கு. ஆனா, சரியான வழிகாட்டுதல் இல்லாததால தமிழ்நாட்டுல பெரியளவுல விரால் மீன் வளர்ப்புல யாரும் ஈடுபடுறதில்ல. மீன் பண்ணைகளில் விரால் மீன் குஞ்சுகளும். அதுக்கான உணவுகளும் பரவலா கிடைக்காததும் இன்னொரு காரணம். இப்போ எங்க மையத்தோட தொடர் பிரசாரத்தால திருநெல்வேலி சுற்றுப்புறத்துல நிறைய பேருக்கு விரால் மீன் பத்தின விழிப்பு உணர்வு வந்து, அதை வளர்க்க ஆரம்பிச்சுருக்காங்க” என்றவர், விரால் மீன் வளர்ப்புப் பற்றி விரிவானத் தகவல்களைத் தந்தார்.

“ஒரு விரால் மீனுக்கு எட்டுல இருந்து பத்து சதுர அடி வரைக்கும் இடம் தேவை. ஒரு ஏக்கர் அளவுக்கு குளம் எடுத்தா அதுல 5,000 மீன்கள் வரை வளர்க்கலாம். ஒரு முறைக்கு 7,000 குஞ்சு களை விட்டா அதுல தப்பிப் பிழைச்சு 5,000 மீன்கள் வரை வளந்துடும். அதேமாதிரி உணவுகள சரியான விகிதத்துல கொடுத்துப் பராமரிச்சா ஒவ்வொரு மீனும் பத்தே மாசத்துல முக்கால் கிலோ எடை வந்துடும். அந்த எடைதான் விக்கிறதுக்கு ஒவ்வொரு சரியான அளவு. ஒரு கிலோ விரால் மீன் குறைந்தபட்சம் 250 ரூபாய்க்கு விற்பனையாகும். சீசன் சமயங்கள்ல அதிகபட்சமா 350 ரூபாய் வரைக்கும் கூட விற்கும். இதுல இன்னொரு முக்கியமான விஷயம் என்னான்னா இது இறந்துடுச்சுனா கொஞ்சநேரத்துலேயே சதை நைஞ்சு போயிடும். அதனால, உயிரோடதான் விற்பனைக்குக் கொண்டு போகணும். அப்பதான் வாங்குவாங்க. இந்த மாதிரி சின்னச்சின்ன விஷயங்கள்ல மட்டும் கவனமா இருந்தா விறுவிறுனு லாபத்தைப் பார்க்க முடியும்.

விரால் மீனை ஏக்கர் கணக்கில் குளம் வெட்டி தான் வளர்க்கணும்னு இல்லை. தோட்டத்துல சின்ன இடம் இருந்தாலேகூட போதும். வீட்டுக்குப் பின்னாடி ஒரு சென்ட் அளவுக்கு நிலம் இருந்தாகூட அதுல 50 மீன் வரை வளர்த்துடலாம். விருப்பப்படறவங்களுக்கு இலவசமா பயிற்சி கொடுக்கறதோட, மீன் குஞ்சுகளையும் உற்பத்தி பண்ணிக் கொடுக்கறதுக்கும் தயாரா இருக்கோம். அதோட விரால் மீன்களுக்கான உணவை விவசாயிகளே தயாரிச்சுக்குறதுக்கான பயிற்சியையும் கொடுக்குறோம். மீன்கள மதிப்புக் கூட்டுறதுக்கான ஆலோசனைகளையும் கொடுக்குறோம்” என்று சொன்னார். நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டு, மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வரும் ஆலங்குளத்தைச் சேர்ந்த இப்ராஹிம் தனது அனுபவங்களை கூறுகிறார்.
“எங்களுக்கு பேக்கரிதான் குடும்பத்தொழில். அதோட தனியா ஏதாவது தொழில் ஆர்பிக்கலாம்னு யோசித்து கொண்டு இருந்தபொழுது தான் இந்த மையம் பத்திக் கேள்விப்பட்டேன். உடனே பயிற்சி எடுத்தேன். நாங்க வாங்கிப் போட்டிருந்த காலி வீட்டு மனையில, மீன் வளர்ப்பை ஆரம்பித்தேன். ஆறு சென்ட் அளவில் ஒரு குளம்னு எடுத்து வளர்த்துக்கிட்டிருக்கேன் நல்ல லாபமானத் தொழிலாத்தான் இருக்கிற என்றவர், தன் அனுபவத்திலிருந்து வளர்ப்பு முறைகளைச் சொன்னார். அதை பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.

நம்மிடம் இருக்கும் நிலத்தின் அளவுக்கும் நீரின் அளவுக்கும் ஏற்ப குளத்தின் அளவை கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். விரால் மீன்கள் ஒன்றை ஒன்று சாப்பிடும் பழக்கமுள்ளவை. அதனால் ஒரே வயதுடைய மீன்களை மட்டும் ஒரு குளத்தில் வளர்க்க முடியும். வயது வித்தியாசமிருந்தால் சிறிய மீன்களை, பெரிய மீன்கள் சாப்பிட்டு விடும். அதனால் ஒரே குளமாக எடுக்காமல் நிலத்தின் அளவைப் பொறுத்து அதிக எண்ணிக்கையில் குளங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு குளத்திலும் இரண்டு மாதங்கள் இடைவெளியில் தனித்தனியாக குஞ்சுகளை விடும்போது இழப்பையு்ம குறைக்க முடியும். வருடம் முழுவதும் தொடர் வருமானத்தையும் பார்க்க முடியும். மூன்றரை அடி ஆழத்துக்குக் குளம் வெட்டி, தோண்டிய மண்ணை கரையைச் சுற்றிக் கொட்டி கரையைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். குளத்தின் அடியில் அரை அடி உயரத்துக்குக் களிமண்ணை (வண்டல் மண்) பரப்ப வேண்டும். பின் ஆறு சென்டுக்கு 20 கிலோ என்ற கணக்கில் தொழுவுரத்தைப் பரப்பி, நீரை நிரப்ப வேண்டும். மூன்று அடி மட்டத்துக்கு எப்போதும் குளத்தில் நீர் இருப்பது போல பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கேற்ப தண்ணீர் வசதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

குஞ்சாக வாங்கி வந்து நாம் பத்து மாதம் வரை வளர்க்க வேண்டியிருப்பதால், நம்மிடம் ஐந்து குளங்கள் இருந்தால் இரண்டு மாத இடைவெளியில் ஒவ்வொரு குளத்திலும் மீன் குஞ்சுகளை விடலாம். குளத்தின் எண்ணிக்கையைப் பொறுத்து கால இடைவெளியை நிர்ணயித்துக் கொள்ளலாம். ஆறு சென்ட் அளவு குளத்துக்கு 500 குஞ்சுகளை விட வேண்டும். பிறந்து மூன்று நாட்கள் வயதுள்ள குஞ்சுகளைத் தான் கொடுப்பார்கள். குஞ்சுகளுக்கு இருபது நாள் வயது வரை நுண்ணுயிர் மிதவைகள்தான் உணவு. இவை நாம் குளத்தில் இடும் தொழுவுரத்தில் இருந்து உற்பத்தியாகி விடும். இருபது நாட்களுக்குப் பிறகு முதல் மூன்று மாதங்கள் பிரத்யேகமான தீவனம் தயாரித்துக் கொடுக்க வேண்டும். (பார்க்க, பெட்டிச் செய்தி) மூன்று மாதங்களுக்குப் பிறகு. ஆறு மாதங்கள் வரை இந்தத் தீவனத்தோடு கோழிக்கழிவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆறு மாதங்களுக்குப் பிறகு, இவை இரண்டோடு அவித்த முட்டைகளையும் கலந்து கொடுக்க வேண்டும். தினமும் காலையும் மாலையும் மீன்களுக்கு உணவு கொடுக்க வேண்டும்.
நோய்களும்  பெரியதாக தாக்குவது கிடையாது. சில சமயம் அம்மை போன்று கொப்புளங்கள் தோன்றி, மீனின் மேல் தோல் இடையிடையே உதிர்ந்து விடும். இந்த நோய் தாக்கினால் மஞ்சளையும், வேப்பிலையையும் அரைத்து தேங்காய் எண்ணையில் குழைத்து மீனின் மேல் தடவினால் சரியாகி விடும். இவை மட்டும்தான் பராமரிப்பு. வேறு எதுவும் தேவையில்லை. பத்து மாதத்தில் மீன்கள் முக்கால் கிலோவுக்கு மேல எடை வந்த விற்பனைக்குத் தயாராகி விடும்.
ஆறு சென்ட் குளத்தில் விரால் மீன் வளர்க்க இப்ராஹிம் சொல்லும் செலவு, வரவு கணக்கு
விவரம்
 செலவு
வரவு
தொழுவுரம்
100

மீன் குஞ்சு
1,000

உணவு
15,000

மின்சாரம் (தண்ணீருக்கு)
2,000

அறுவடை, பராமரிப்பு
1,500

200 கிலோ மீன் மூலம் வரவு

50,000
மொத்தம்
19,600
50,000
நிகர லாபம்

30,400
குறிப்பு: குளம் வெட்டுவதற்கான செலவான 15,000 ரூபாய் நிரந்தர முதலீடு என்பதால் அது செலவுக் கணக்கில் சேர்க்கப்படவில்லை.
            நிறைவாக விற்பனை பற்றி பேசிய இப்ராஹிம், “நாம எங்கயும் அலைய வேண்டியதில்லை நம்மகிட்ட மீன் இருக்கறது தெரிஞ்தாலே வியாபாரிவர் தேடி வந்துடுவாங்க. எனக்கு நான்கு குளம் இருக்கறதால். மூன்று மாசத்துக்கு ஒரு தடவை மீன்களை விற்பனை பண்ணிக்கிட்டிருக்கேன். குளம் வெட்டுற செலவும் ஒரே ஒரு முறைதான். கொஞ்சம் அனுபவம் வந்துவிட்டால் குஞ்சுகளையும் வெளிய வாங்க வேண்டியதில்லை. நல்ல ஆண், பெண் மீன்களை எடுத்து தனியா சிமென்ட் தொட்டியில் விட்டு, ஹார்மோன் ஊசி போட்டு முட்டையிட வெச்சு நாமளே குஞ்சுகளையும் உற்பத்தி பண்ணிக்கலாம்.

பத்து சென்ட் வரைக்கும் உள்ள குளம் என்றால் ஒரே ஆளே பராமரிச்சுக்கலாம். ஒரு குளத்துக்கு வேலையாள் வைத்தால் சம்பளம் கட்டுபடியாகாது. அதேமாதிரி பாதுகாப்பும் ரொம்ப முக்கியம் நாம பக்கத்துலேயே இருந்து பாதுகாக்க முடியாதுன்னா வலைகள் போட்டு பறவைகளிடமிருந்து மீன்களைக் காப்பாத்தணும். பராமரிக்குறதைப் பொறுத்துதான்  லாபம் கிடைக்கும். ஒரு குளத்துல (ஆறு சென்ட்) 500 குஞ்சுகள் விட்டால் 300 மீன்கள் கண்டிப்பாக வளர்ந்துடும். நன்றாக பராமரித்தால் 450 மீன்கள் வரைகூட தேத்தி விடலாம். எப்படிப் பாத்தாலும் 200 கிலோவுல இரந்து 300 கிலோ மீன்வரைக்கும் அறுவடையாகும். குறைஞ்சபட்சமாக 200 கிலோனு வைத்துக் கொண்டால்  கிலோ 250 ரூபாய்ங்கிற கணக்கில் பத்து மாதத்தில் 50,000 ரூபாய்க்கு விற்றுவிடலாம். எல்லாச்செலவும் போக 30,000 ரூபாய் வரை கண்டிப்பா லாபம் கிடைக்கும்.

தொடர்புக்கு

நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம், தொலைபேசி 0462-2560670
ஹனீபா, மைய இயக்குநர், அலைபேசி: 94431-57415
ஷெரீப், ஆராய்ச்சி மையம் ஒருங்கிணைப்பாளர், அலைபேசி: 98946-77286
இப்ராஹிம், அலைபேசி: 97915-78187

இணையற்ற லாபம் தரும் இயற்கை மீன் வளர்ப்பு!






செழிப்பான நீர்வளம் உள்ள தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கான சிறந்த உபதொழிலாக இருப்பது மீன் வளர்ப்பு. வழக்கமாக பெரும்பாலான விவசாயிகள் ரசாயன உரங்களையும், அதிகளவிலான அடர்தீவனங்களையும் பயன்படுத்திதான் மீன்களை வளர்க்கிறார்கள். அவர்களுக்கிடையில் கொஞ்சம் வித்தியாசமாக அடர்தீவனத்தைக் குறைத்து, அதிகளவில் பசுந்தீவனங்களை மட்டுமே கொடுத்து சிறப்பான முறையில் மகசூல் எடுத்து வருகிறார், மயிலாடுதறை அருகே இருக்கும் ஆனந்தக்குடியைச் சேர்ந்த பிச்சை பிள்ளை.‘விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு, சொந்தமாக மூணு ஏக்கர் நெல் வயல் இருக்கு. படிப்பு முடிந்ததும் பாஸ்போர்ட் ஆபிஸீல வேலை கிடைத்தது. அங்கே வேலை பார்த்து்கிட்டே இடையில் கொஞ்சம் விவசாயத்தையும் பாத்துக்கிட்டு இருந்தேன். பயி ஓய்வுக்கப்பறம் முழுநேர விவசாயியா மாறிவிட்டேன். மூணு ஏக்கர்ல், 100 குழி (33 சென்ட்) நிலத்தை மட்டும் ஓதுக்கி, அரசாங்க உதவியோட பண்ணைக்குட்டை வெட்டி மீன் வளர்க்க ஆரம்பித்தேன். மீதி இடத்துல் வழக்கம்போல நெல்சாகுபடி நடக்கிறது.

நானும் ரசாயன விவசாயந்தான செய்துக்கிட்டிருந்தேன். ரசாயன உரத்தால வர்ற தீமைகளை அடிக்கடி கெள்விப்படுறப்போ எனக்குள்ள ஒரு உறுத்தல் வந்தது. அதனால, இயற்கைக்கு மாறனும்னு பயிற்சிகளில் கலந்துக்கிட்டேன். விவசாயம் சம்பந்தப்பட்ட புத்தகங்களையும் தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். அதுல பசுமை விகடனும் அறிமுகமாகவே, முழுசா இயற்கை வழி விவசாயத்துக்கு மாறிட்டேன். மீன் வளர்ப்புத் துறையில இருக்கற பெரும்பாலான விஞ்ஞானிகள், உரம் போட்டுத்தான் மீன் வளர்க்கச் சொல்றாங்க, விவசாயத்துலயே ரசாயனப் பயன்பாட்டைக் குறைக்கணும்னு பேசிக்கிட்டிருக்கறப்போ, ‘மீன் வளர்க்கறதுக்குப் போய் ரசாயனத்தைப் பயன்படுத்தணுமா?னு ஒரு கேள்வி எனக்குள்ள உருவாகியது. குளத்துக்கு அடியில் இருக்குற மீனுக்கானத் தீவனத் தாவரங்கள் வேகமா வளர்றதுக்குத்தான் ரசாயன உரம் பயன்படுத்தறாங்க. ஆனா, அதோட தாக்கம் தண்ணீர் மூலமாக கட்டாயம் கொஞ்ச அளவுக்காவது மீன் உடம்புக்குள்ளேயும் இருக்கத்தான் செய்யும். அதனால உற்பத்திச் செலவு அதிகரிக்கிறதோட மீனோட சுவையும் குறைந்துவிடும். எனக்கு இதில் ஒப்புதல் இல்லாததால  இலை, தழைகளைக் கொடுத்தே மீன் வளர்க்கலாம்னு முடிவு பண்ணினேன். இயற்கையாவே ஆறு, குளத்துலயெல்லாம் வளர்ற மீன்களுக்கு யாரும் உரம் போடுறதில்லையே.

வீட்டு ஓரங்கள்ல தோட்டக்கால் வேலிகளில் முருங்கை, அகத்தி, சூபாபுல், சிறியாநங்கை, துளசி மாதிரியான தாவரங்கள வளர்த்து, அதையே வளர்ப்பு மீன்களுக்கு உணவா கொடுக்கலாமேனு யோசித்து அதையே நடைமுறைப் படுத்திக்கிட்டிருக்கேன். குளத்துக்குள்ள நுண்ணுயிர்கள், பாசி வளர்றதுக்கு சாணம் மாதிரியான இயற்கைக் கழிவுகளையும் கொடுக்குறேன். இப்படி வளர்த்தாலே ஆறே மாதத்தில் மீன் ஒவ்வொண்ணும் ஒரு கிலோ எடைக்கு வந்துவிடுகிறது. சுவையாவும் இருக்கு. அப்பறம் எதுக்குத் தேவையில்லாம ரசாயனத்தைப் பயன்படுத்தணும்? என்று கேள்வி எழுப்பியவர், 33 சென்ட் பண்ணைக் குட்டையில் மீன் வளர்ப்பதற்கானத் தொழில்நுட்பத் தகவல்களை, அழகாக விளக்குகிறார்.

35 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம், ஒன்றரை மீட்டர் ஆழம் இருக்குமாறு குளம் வெட்டிக் கொள்ள வேண்டும் (விவசாயத் தேவைக்கான நீராதாரத்தைப் பெருக்குவதற்காக, அரசு செலவில் பண்ணைக் குட்டை அமைத்துத் தரும் திட்டத்தை வேளாண்துறை நடை முறைப்படுத்தி வருகிறது. அதைப் பயன்படுத்திக் கொண்டு, மீன் வளர்ப்பையும் மேற் கொள்ளலாம்). அதில் தண்ணீரை நிரப்பி, குறிப்பிட்ட அளவுக்கான நீர், தொடர்ந்து தேங்கி நிற்கிறதா என்பதை உறுதி செய்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு வேளை அதிகமாக தண்ணீர் உறிஞ்சக்கூடிய பகுதியாக இருந்தால், குளத்தின்  அடியில் கரம்பை மண்ணைப் பரப்பி, தண்ணீரைத் தேக்கலாம். ஆறு, குளம் போன்ற நீர் நிலைகள் அருகில் இருக்கும் பகுதியாக இருந்தால், கவலையேபடத் தேவையில்லை. தண்ணீர் உறிஞ்சப்படாமல் தேங்கி நிற்கும்.

பண்ணைக் குட்டையில் மூன்றடி உயரத்துக்கு மட்டும் தண்ணீர் நிரப்பி, இரண்டு மாட்டு வண்டி அளவுக்கு கட்டி இல்லாத ஈர சாணத்தை தண்ணீரில் கரைத்துவிட வேண்டும். ஒரு வாரத்திலேயே சாணத்தில் இருந்து நுண்ணுயிர்கள் பெருகி விடும்.பிறகு அருகில் உள்ள மீன் விதைப் பண்ணைகளில் இருந்து, இரண்டு மாத வயதுடைய மீன்குஞ்சுகளை வாங்கி வந்து குளத்தில் விடவேண்டும். மீன்கள், அவை வளர்க்கப்படும் பகுதியைப் பொறுத்து மூன்று வகைகளாக அழைக்கப்படுகின்றன. அடி மீன் (சி.சி. காமன் கார்ப், மிர்கால்), நடுத்தட்டு மீன் (ரோகு, கெண்டை), மேல் மீன் (கட்லா, சில்வர்) எனப்படும் இந்த மூன்று வகைகளையும் கலந்து வளர்க்கும் போது குளத்துக்குள் இட நெருக்கடி இல்லாமல் மீன்கள் வளரும். பொதுவாக அனைத்து வகை மீன் குஞ்சுகளும் ஒரே விலையில் தான் விற்கப்படுகின்றன. வளர்ந்த மீன்களை மொத்தமாக விற்கும் போதும் சராசரியாக விலை நிர்ணயித்துதான் வியாபாரிகள் வாங்கவார்கள். அதனால் பல ரகங்களைக் கலந்து வளர்க்கும் போது விற்பனையில் பிரச்சனை இருக்காது. ஒரு வேளை நேரடி விற்பனை செய்வதாக இருந்தால், நமது பகுதி சந்தை நிலவரத்துக்கேற்ற அளவுக்கு ஒவ்வொரு ரக மீன் குஞ்சுகளின் எண்ணிக்கையைக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். ஆனால், 33 சென்ட் அளவு குளத்துக்கு 1,200 குஞ்சுகளுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குஞ்சுகளை விட்ட பிறகு நீர்மட்டத்தை நான்கடிக்கு உயர்த்தி, எப்போதும் அதே தண்ணீர் மட்டம் இருக்குமாறு பராமரிக்க வேண்டும்.

குஞ்சுகளை விட்டதில் இருந்து இரண்டு நாளைக்கு ஒருமுறை தொடர்ந்து 25 கிலோ அளவுக்கு பசுஞ்சாணத்தைக் குளத்தில் கலந்து விடவேண்டும். ஒரு மாத காலம் வரை தினமும் 5 கிலோ அரிசித் தவிடு, ஒரு கிலோ தேங்காய் பிண்ணாக்கு, ஒரு கிலோ அரிசியில் வடித்த சாதம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, மூன்று பங்காகப் பிரித்து சிறிய ஓட்டைகள் உள்ள சாக்கில் இட்டு, மூன்று இடங்களில் தண்ணீரின் மேல்மட்டத்தில் மூழ்குமாறு வைக்க வேண்டும். வழக்கமாக கடலைப் பிண்ணாக்கைத்தான் அனைவரும் பயன்படுத்துவார்கள். அதைவிட குறைவான விலையில் கிடைக்கும் தேங்காய்ப் பிண்ணாக்கிலும் அதற்கு ஈடான புரதச்சத்து இருப்பதால், தீவனச்செலவு கணிசமாகக் குறையும். தவிர, தேங்காய் வாசனைக்கு மீன்கள் போட்டிப் போட்டு வந்து சாப்பிடும். இரண்டாவது மாதத்திலிருந்து அரிசித் தவிடை மட்டும் மூன்று கிலோ கூட்டிக் கொள்ள வேண்டும்.

இந்த தீவனங்கள் மட்டுமில்லாமல் தினமும் 5கிலோ அளவுக்கு முருங்கை, அகத்தி, சூபாபுல், புல்வகைகள் என பசுந்தீவனங்களையும் கலந்து குளத்தில் இட வேண்டும். துளசி, சிறியாநங்கை  போன்ற மூலிகைகளையும் கலந்து இடலாம். நாம் இடும் பசுந்தீவனத்தில் எந்த வகையான இலைகளை மீன்கள் உண்ணாமல் கழிக்கிறதோ அந்த வகைகளை இடுவதை உடனே நிறுத்திவிட வேண்டும். அதே போல முதல் நாளே அதிகளவில் பசுந்தீவனத்தைக் கொட்டி விடாமல், கொஞ்சமாகக் கொட்டி மீன்கள் சாப்பிடும் அளவுக்கேற்ப அதிகரிக்க வேண்டும். அதிகமாகச் சாப்பிட்டால், அதிக எடை கூடுமே தவிர, வேறு தவறான விளைவுகள் எதுவும் வராது. தவிர, எந்த வகையான உயிரினமாக இருந்தாலும், தேவையான அளவுக்குத்தான் சாப்பிடும் என்பதால், தினமும் நாம் அளிக்கும் தீவனத்தில் மீன்கள் எவ்வளவு சாப்பிடுகின்றன, என்று தொடர்ந்து கவனித்து வந்தாலே எளிதாக மீன்களின் உணவுத் தேவையைக் கணித்து விடலாம்.

இதுபோல வளர்த்து வந்தால், மீன்களின் வளர்ச்சி வேகம் அதிகரிக்கும். ஆறு மாதத்திலேயே ஒரு மீன், ஒரு கிலோவில் இருந்து ஒன்றரை கிலோ வரை எடை வந்து விடும். மீன்கள் ஒரளவுக்கு எடை வந்த பிறகு அறுவடை செய்து விற்பனை செய்யலாம். வளர்ப்பு விதங்களைச் சொல்லி முடித்த பிச்சை பிள்ளை, “போட்லா வகை மீன்கள் இயல்பாவே அதிக எடை வந்துடும். நாம இந்த மாதிரி வளக்குறப்போ ஆறு மாசத்துல ஒரு மீன் அதிகபட்சமா நாலு கிலோ வரைகூட எடை வருது. கட்லா ஆறு மாசத்துல இரண்டரை கிலோ வரை எடை வரும். புல்கெண்டை, மிர்கால் மாதிரியான மீன்கள் இரண்டு கிலோ வரை எடை வரும். சி.சி.சாதாக் கெண்டை மீன்கள் ஒன்றரை கிலோ வரையும், ரோகு அரைகிலோ எடை இருக்கும்.
33 சென்ட் நிலத்தில் 6 மாதங்களில் மீன் வளர்ப்பு செய்ய ஆகும் வரவ –செலவு கணக்கு
விவரம்
செலவு
வரவு
மீன்குஞ்சு
3,000

தீவனம்
6,000

சாணம்
2,000

உரங்கள்
1,000

மீன் மூலம் வரவு (700X85)

59,500
மொத்தம்
12,000
59,500
நிகர லாபம்

47.500
இரண்டு மாத வயதுள்ள குஞ்சுகளை வாங்கி வந்து வளர்க்கிறப்போது இறப்பு விகிதம் குறைந்துவிடறதால் எண்பது சதவிகிதம் மீன்கள் வளர்ந்து வந்துவிடும். அதனால் கூடுதல் லாபம் கிடைக்கும். எப்படிப் பார்த்தாலும் இந்த எல்லா  வகை கலந்து 1,200 குஞ்சுகள் விட்டோம்னா சராசரியாக  1,500 கிலோவுக்கு குறையாம அறுவடை பண்ண முடியும். சராசரியாக  கிலோ 70 ரூபாய்னு வியாபாரிங்க எடுத்துக்குறாங்க. ஆக, 1,05,000 ரூபாய்க்கு விற்பனை பண்ண முடியும். கரன்ட், தீவனம், பராமரிப்பெல்லாம் போக 75,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.

தொடர்புக்கு : பிச்சை பிள்ளை
அலைபேசி : 80985 – 54747

தினமும் 18 லிட்டர் பால்! சந்தோஷம் பொங்க வைக்கும் சிந்து சமவெளி மாடு .. !


காட்டு வாழ்க்கையிலிருந்து, நாகரிகப் பாதையில் நடைபோடத் தொடங்கிய மனிதன், பாலுக்காக மட்டுமில்லாமல்.. உழவு, பாரம் இழுத்தல், போக்குவரத்து என பல வகையிலும் உதவும் என்பதற்காக தன்னுடன் சேர்த்துக் கொண்ட விலங்குகளில் ஒன்றுதான் மாடு!
கன்னியாகுமரி தொடங்கி, காஷ்மீர் வரை பல்வேறு  பெயர்களில் வகைவகையான இன மாடுகள் இங்கே இருக்கின்றன. ஆனால், காலப்போக்கில் ... ‘அதிக பால’ என்கிற கோஷம் இந்தியாவில் உரத்து ஒலித்ததோடு, மாடுகளின் பிற தேவைகளும் குறைய ஆரம்பித்து விட்டது. இதனால், நம் நாட்டு ரக மாடுகள் எல்லாம் ‘அடிமாடு’ என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டு, வெளிநாட்டுக் கலப்பின மாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம், ‘நம் நாட்டு மாடுகளிலும் அதிக பால் கொடுக்கும் மாடுகள் இருக்கின்றன’ என்கிற உண்மையை உணர்த்த தமிழக விவசாயிகளில் சிலர், வடமாநிலங்களிலிருந்து அத்தகைய மாடுகளை வாங்கி வந்து வளர்த்து வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டம், கோனூர் கிராமத்தைச் சேர்ந்த திம்மையா, அவர்களில் ஒருவர். நாட்டு மாடுகளைப் பற்றி கேட்டால், மடை திறந்த வெள்ளமாக வந்து விழுகின்றன அவரிடமிருந்து வார்த்தைகள்..

ஒரு டோஸ் விந்து 1,500 ரூபாய்!
“விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்குற குடும்பம் எங்களோடது. அப்பா திடீர்னு இறந்ததும் விவசாயத்தை நான் கையில் எடுக்க வேண்டியதாயிடுச்சு. விவசாயத்துக்காக அப்பா கடன் வாங்கியருந்தார். கொஞ்ச நிலத்தை வித்து, அதையெல்லாம் அடைத்தேன். ‘வருடம் முழுக்க ஓய்வில்லாமல்  உழைத்தாலும், விவசாயத்தில் கடன் மட்டுமே மிச்சமாகிறது ஏன்.. என்ன காரணம்?’னு அடிக்கடி யோசிச்சிக்கிட்டே இருப்பேன். அப்பத்தான் இயற்கை விவசாயத்தைப் பற்றி  தெரிய வந்தது. இப்ப, 10 வருடமா இயற்கை விவசாயம்தான். சுபாஷ் பாலேக்கரோட ‘ஜீரோ பட்ஜெட் பயிற்சி’யில கலந்துகிட்ட பிறகு, நாட்டு மாடுங்க மேல் தனி மரியாதை வந்துடுச்சு. உடனே, உம்பளாச்சேரி ரக மாடுங்க இரண்டை வாங்கி வளர்க்க ஆரம்பித்தேன். பயிருங்களுக்கத் தேவையான ஜீவாமிர்தத்துக்கு சாணம், மாட்டுச் சிறுநீர் இதுக்கெல்லாம் பிரச்சனை இல்லாம போயிடுச்சு.

இதெல்லாம் சரி.. கலப்பின மாடுங்க மாதிரி அதிகமா பால் கிடைக்க மாட்டேங்குதேனு ஒரு யோசனையோட, நாட்டு மாடுகள் பத்தின தகவல்களைத் திரட்டத் தொடங்கினேன். வெளிநாட்டு மாடுகளுக்கு சமமா பால் கொடுக்கிற நாட்டு ரக மாடுகள் வட இந்தியாவில் இருக்கிறது தெரிந்து, அதை வாங்குகிற முயற்சியில் இறங்கினேன். இதற்க்கு நடுவில், ‘கிர்’ மாட்டோட விந்தை, உம்பளச்சேரி  பசுவுக்கு செயற்கை கருவூட்டல் செய்யலாமே’னு ஒரு யோசனை தோணுச்சு. அதுக்காக சேலத்தில் இருக்கிற ஒருத்தர்கிட்ட கேட்டேன். ஒரு டோஸ்.. 1,500 ரூபாய்னு சொன்னார். நாட்டு மாட்டு விந்துவுக்கு உள்ள கிராக்கியைப் பார்த்த பிறகு, செயற்கை முறை கருவூட்டறது தொடர்பான  பயிற்சி எடுத்துக்கிட்டு, அந்த வேலையையும் செய்ய ஆரம்பித்தேன்.

ஒரு மாடு .. 60 ஆயிரம் ரூபாய்!
மாடு வாங்கறதுக்காக குஜராத், பஞ்சாப், ஹரியானா பகுதிகளுக்கு நேரில் சென்றேன். அதில் என்னை அதிகமாக கவர்ந்தது.. சாஹிவால் ரக மாடுங்கதான். சாதாரணமா மேய்ச்சலுக்கு போயிட்:டு வந்து, 15 லிட்டர் தொடங்கி, அதிகபட்சம் 20 லிட்டர் வரை பால் கறக்குறது நேரில் பார்த்ததும், ஆச்சரியமா போயிடுச்சு. மேய்ச்சலைத் தவிர வேறெந்த தீவனத்தையும் கொடுக்காமலே இவ்வளவு பால் கறக்குதே.. இதை வாங்கிட்டு போயே தீரணும்னு முடிவெடுத்தேன்.
எங்ககூட வந்திருந்தவங்களோட சேர்ந்து 10 மாடுகளை  வாங்கினேன். ஆனா, அதுங்களை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து சேர்க்கிறது சாமானியப்பட்ட வேலையா இல்லை. நம்ம  ஊரில் லாரிகளில் மாடுகளை ஏத்திக்கிட்டு போனா.. யாரும் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டாங்க. வட மாநிலங்களில் அங்கங்க கராம மக்களே வண்டியை மறிச்சுடறாங்க. ‘அடிமாட்டுக்கு கொண்டு போகலை. வளர்க்கறதுக்குத்தான் கொண்டு போறோம்’னு ஆதாரத்தோட புரிய வைத்துவிட்டு வர்றதுக்குள்ள தாவு தீர்ந்து விடும். அது போக அனுமதி, போக்குவரத்துனு செலவும் அதிகமா பிடிக்கும். அதாவத, ஒரு மாட்டோட விலை தமிழ்நாட்டுக்கு வரும் போது 60 ஆயிரம் ரூபாய் ஆயிடுச்சு.

குறைந்த பராமரிப்பு!
பெரும்பாலும் பாலுக்காக மட்டும்தான் இப்பெல்லாம் மாடுகள் வளர்க்கறாங்க. அதனால் தான், வெளிநாட்டு மாடுகளை வளர்க்கிறதில் விவசாயிகள்  அதிக ஆர்வம் காட்டுறாங்க. ஆனால், அந்த மாடுகளுக்கு எந்த வகையிலும் குறைந்தது இல்லை,சாஹிவால் மாதிரியான நம்ம நாட்டு மாடுகள்.  கிடைத்ததைத் தின்னுட்டு, நாளொன்றுக்கு அதிகபட்சம்  20 லிட்டர் வரைக்கும் பால் கொடுக்கிறது சாஹிவால் ரக மாடுகள். வெளிநாட்டு மாடுகளை வெயில், மழைக்கு பாதுகாத்து வளர்த்தாலும், பால் மூலமா வர்ற வருமானத்தில் சரிபாதி தீவனத்துக்கே செலவாகிறது. ஆனால், இந்த மாடுகளை  வளர்த்தால்.. தீவனச் செலவை பற்றி அதிகமாக அலடிக்க தேவையில்லை. குறைந்த செலவு, குறைந்த பராமரிப்புலேயே அதிக பால் கொடுக்கும்.

வருடத்தில் 6,000 கிலோ பால்!
இந்தியாவில் பாலுக்கான சிறந்த பசு இனம்னா.. அது இந்த சாஹிவால் ரக மாடுங்கதான்.  ஒரு ஈத்தில் (305 நாட்கள்) 3,000 கிலோ முதல் 6,000 கிலோ வரைக்கும் பால் கொடுக்கற அற்புதமான இனம். இதோட பாலில் 4 முதல் 4.5 சதவிகிதம் கொழுப்புச் சத்து இருக்கிறது. பெரிய மடி, நல்ல சிவப்பு நிறம், கனமான குட்டைக் கொம்பு, சிறிய திமில், கம்பீரமான  உடமைப்பு என்று பார்க்கிறதுக்கே அம்சமா இருக்கும். கடுமையான வெப்பம், கடுமையானப் பனி, மழைனு எதற்கும்  சளைக்காது. வெளிநாட்டு மாடுகள், குளிர்காலத்தில் அதிகமாகவும், வெயில் காலத்தில் குறைந்தளவும் பால் கொடுக்கும். ஆனால், சாஹிவால் உள்ளிட்ட நாட்டு மாடுகள், எப்பவும் ஏற்றத் தாழ்வு இல்லாம ஒரே அளவில் பால் கொடுக்கும்.

பஞ்சாப் மாநிலத்தில்தான் இந்த மாடுகளை அதிகமாக வளர்க்கிறார்கள். நம்ம ஊரில் செம்மறி ஆடுகளை மந்தையாக மேய்க்கிறது மாதிரியே, இந்த மாடுகளை மந்தை, மந்தையா மேய்க்கிறாங்க.  அதனால் இ்ந்த மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போடறதே இல்லை. ரொம்ப தூரம் வரைக்கும் மேய்ச்சலுக்கெல்லாம் போயிட்டு வருது. கை வளர்ப்பா வளர்த்தா சொன்னதெல்லாம் கேட்கிற அற்புதமான மாடு சாஹிவால், நம்ம ஊரில் மாடுகளை முன்னவிட்டு, பின்னாடி போறோம். வட நாட்டில் மேய்க்கறவரு முன்னாடி போக, அவருக்கு பின்னாடியே போகிறது மாடுகள். அதுக்கு காரணம் மாடுகளை வளர்க்கிற முறைகள் தான்.

அன்புக்கு அடிமை!
சாஹிவால் மாடுகள் ரொம்பவும் உணர்வுப் பூர்வமானது. அதை அடித்து அடக்கணும்னு நாம் நினைத்தால் கண்டிப்பா அடங்காது. முரண்டு பிடிச்சுக்கிட்டே இருக்கும். அதே நேரத்தில் தடவிக் கொடுத்து அன்பா வளர்த்தா, நாய்க் குட்டி மாதிரி காலை சுத்திக்கிட்டே இருக்கும். பொதுவா எந்த மாடாக  இருந்தாலும், ஒரே இடத்தில் கட்டிப் போட்டு வளர்க்க கூடாது. தினமும் 3 மணி நேரமாவது சூரிய ஒளி மாடுகளின் உடலில் படுகிற மாதிரி நடக்க விடணும்.
சாஹிவால் மாடுகள் 18-ம் மாசத்தில் பருவத்திற்கு வந்துவிடும். நான் வாங்கிட்டு வந்த மாடுகளை மேய்ச்சல் முறையில் வளர்க்கிறேன். ஒரு பசுவுக்கு சராசரி 13 லிட்டர் பால் கிடைக்கிறது. இந்த ரக மாடுகள் கூட்டமாக இருக்கிறததான் விரும்பும். அதனால் குறைந்தது 5 மாடுகளையாவது ஒன்றாக சேர்த்துதான் வளர்க்கணும். நம்ம ஊரில் இந்த மாடுகளை இப்பதான் வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதுகளோட எண்ணிக்கை அதிகரிக்கிறப் பொழுது இங்கேயே விலை குறைவாக கிடைக்க வாய்ப்பிருக்கிறது” என்று விரிவாகப் பேசி முடித்தார் திம்மையா..
பாலுக்கான  நாட்டு ரக மாடுகள்
ரகங்கள்
கிடைக்கும் இடங்கள்
கிர்
குஜராத். ராஜஸ்தான்
சாஹிவால்
பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம்
ரெட் சிந்தி
ஆந்திரா
வறட்சியைத் தாங்கும் இனங்கள்
மால்வி
ராஜஸ்தான், மத்திய பிரதேசம்
நாகேரி
டெல்லி, ஹரியானா, உத்திரப்பிரதேசம்
ஹாலிக்கார்
கர்நாடகா
காங்கேயம்
தமிழ்நாடு
பொதுவான ரகங்கள்
ஹரியானா
ஹரியானா, பீகார், பஞ்சாப், குஜராத், மத்திய பிரதேசம், ஆந்திரா
ஓங்கோல்
ஆந்திரா
காங்கிரேஜ்
குஜராத்
தார்பார்க்கர்
குஜராத், ஆந்திரா
தொடர்புக்கு :
திம்மையா, அலைபேசி : 94861 -11653     

கைகளால் இயக்கினால், கறக்குது பால்!




ஜனவரி 3 ம் தேதி தொடங்கி 7ம் தேதி வரை சென்னை அருகேயுள்ள காட்டாங் கொளத்தூர், எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழக வளாகத்தில் தேசிய அறிவியல் மாநாடு நடைபெற்றது. அதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியில், ஏர் கலப்பை முதல் ஏவுகணை வரை பலவிதக் கருவிகள் இடம் பெற்றிருந்தன.

அந்த வரிசையில், தேசியக் கண்டுபிடிப்பு மையம் (National Innovation Foundation) அமைத்திருந்த அரங்கில், கிராமப்புற அடிமட்டக் கண்டுபிடிப்பாளர்களால் வடிவமைக்கப்பட்ட கருவிகள் வைக்கப்பட்டிருந்தன. அதில், கைகளால் இயங்கும் பால் கறவை இயந்திரம், அனைவரையும் ஈர்ப்பதாக இருந்தது.

கர்நாடக மாநிலம், மங்களூரைச் சேர்ந்த ராகவ கவுடா என்கிற விவசாயி தான் இரத வடிவமைத்திருக்கிறார். அவரிடம் பேச்சுக் கொடுத்தபோது, “பத்து மாடுகள் வைத்திருந்தேன், எ்போதாவது வெளியூர்களுக்குச் செல்ல நேரிடும் போது, பால் கறக்க சம்பளத்துக்கு ஆட்களை வைக்கலாம் என்று தேடிப்பார்த்தால், ஆள் கிடைப்பது அரிதாக இருந்தது. அந்த மாதிரி இக்கட்டான சமயங்களில் வீட்டில் உள்ளவர்களே எளிதாக கறப்பதற்கு ஏற்ப கருவி இருந்தால், வசதியாக இருக்குமே என்று யோசித்தபோது உருவானதுதான் இந்த இயந்திரம். இதன் மூலம் ஐந்து நிமிடத்தில் பாலைக் கறந்துவிட முடியும். ஒரே சமயத்தில் இரண்டு மாடுகளிடம் கூட பால் கறக்கலாம். இதன் அடக்க விலை.. 11,500 ரூபாய். இந்தக் கண்டு பிடிப்புக்காக கடந்த 2005 ம் ஆண்டு ‘தேசிய கண்டுபிடிப்பு மையம் ‘ எனக்கு விருது கொடுத்து பாராட்டியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக வணிக ரீதியாக தயாரித்து விற்பனை செய்வதற்கும் உதவி வருகிறார்கள்’ என்று சொன்னார் ராகவ கவுடா.

தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசிய கண்டுபிடிப்பு மையத்தின் விஞ்ஞானி டாக்டர். ஆர்.கே. ரவிக்குமார், “மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் உதவியால் பேராசிரியர் அனில் குப்தா 2000 ம் ஆண்டு இந்த அமைப்பைத் தொடங்கினார். இதுவரை 1 லட்சத்து 40 ஆயிரம் கண்டுபிடிப்புகளை உலகுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறோம். ஆண்டு தோறும் போட்டி அறிவித்து சிறந்த அடிமட்டக் கண்டுபிடிப்பாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உதவி வருகிறோம். இந்த ஆண்டுக்கானப் போட்டி தற்போது அறிவிக்கப்பட்டள்ளது. விவசாயம், கால்நடை.. சார்ந்த சிறியக் கருவிகள், புதியத் தொழில் நுட்பங்கள் வைத்துள்ளவர்கள் பங்கேற்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31” என்ற தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.

தொடர்புக்கு 
அலைபேசி : 098250-71992
இணையதளம்: www.nif.org.in

ஜோரான வருமானம் தரும், ஜோடிப் புறா!


தீவனச் செலவு, பராமரிப்பு இல்லை.குஞ்சுப் புறாக்களுக்குத்தான் கிராக்கி ,பொழுது போக்குடன் கூடிய வருமானம்.

விவசாயம் வில்லங்கமாகும் போது, விவசாயிகளுக்குக் கைகொடுத்து கரை சேர்ப்பது.. கால்நடை வளர்ப்புத்தான். ஆனால், அதிலும் முதலீடு, நோய்த் தாக்குதல், தீவனச் செலவு என சிக்கல்கள் இல்லாமல் இல்லை. ஆனால், மிகக்குறைந்த முதலீடு, தீவனச் செலவு, நோய்த் தாக்குதல் என எந்தச் சிக்கலும் இல்லாமல்.. பொழுதுபோக்குடன், வருமானத்திற்கும் வழிவகை செய்கிறது புறா வளர்ப்பு!
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகிலுள்ள குஞ்சாம்பாளையம், சீதாபாரதி, பல ஆண்டுகளாக புறா வளர்ப்பில் ஈடுபட்டு வருபவர். அவரிடம் இதைப் பற்றிக் கேட்ட போது.. கண்களில் உற்சாகம் படபடக்கப் பேசத் தொடங்கினார்.

“எங்களுக்குனு இருக்கிற ஒரு ஏக்கர் நிலத்தில், மாட்டுக்குத் தேவையான பயிர், பச்சையை மட்டும் விதைப்போம். மத்தப்படி விவசாயத்துல பெரிதாக வருமானம் இல்லை. ரொம்ப வருடமாக நாங்க செய்துகிட்டு வர்ற புறா வளர்ப்புதான் ஓரளவு கைக்கொடுக்குது. ஆரம்பத்தில் பொழுதுபோக்கா பழைய பெட்டியில் இரண்டு ஜோடியை விட்டு வளர்த்தோம். அது இன்றைக்கு ஒரு தொழிலா வளர்ந்து நிற்கிறது” என்ற சீதாபாரதி, புறா வளர்ப்பு தொடர்பான அனைத்து விஷயங்களையும் விவரித்தார்.
‘கோழி, முயல், காடை வளர்ப்பில் வருமானம் அதிகம். என்றாலும், அதற்கு ஏற்ப கொட்டகை, மின்சாரம், தண்ணீர், தீவனம் என செலவுகளும் அதிகமாகிக் கொண்டே இருக்கும். அதே போல ஒவ்வொரு சீசனுக்கும் ஏதாவது ஒரு நோய் தாக்குதல் இருக்கும். ஆனால், புறா வளர்ப்பில் இது போன்ற எந்தத் தொல்லைகளும் இல்லை. புறாக்கள் தங்குவதற்கு மட்டும் ஒரு கூண்டு ஏற்பாடு செய்தால், போதும். மற்றபடி, எந்தத் தொல்லையும் வைக்காமல் அவை வெளியே சென்று இரையைத் தேடிக்கொண்டு, திரும்பிவிடும்.

தீவனச் செலவே இல்லை!

சிறிய அளவில் நான்க அல்லது ஐந்து ஜொடிகளை மட்டும் வளர்க்க நினைப்பவர்கள், பழையப் பெட்டிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். குறைந்தது 50 ஜோடிகளை வளர்க்க நினைப்பவர்கள் 10 அடி நீளம், 6 அடி அகலம், ஆறடி உயரத்தில் ஓர் அறையைக் கட்டிக்கொள்ள வேண்டும். சுக்கான் அல்லது செம்மண்ணைக் குழைத்துதான் எழுப்ப வேண்டும்.

மண்ணைக் குழைத்து சுவர் எழுப்பும் போது, இடையில் செங்கல் அல்லது கருங்கல் வைப்பதற்கு பதிலாக மண்பானைகளை நெருக்கமாக வைத்து கட்ட வேண்டும். இந்தப் பானைகளின் வாய்ப்பகுதி, அறைக்கு உள்பக்கமாக இருக்க வேண்டும். இதில்தான் புறாக்கள் வசிக்கும்.
வாசலுக்கான இடைவெளியைத் தவிர, வேறு எந்தப் பக்கமும் இடைவெளி இல்லாமல் வெளிப்புறச் சுவற்றை சிமெண்ட் வைத்து வழவழப்பாக பூசிவிட வேண்டும். வெளிச்சுவர் வழவழப்பாக இருந்தால்தான் விஷப்பூச்சிகள் சுற்றின் மீது ஏறி அறைக்குள் வராது. அதே போல அறையின் கீழ்பகுதிகளிலும், விஷப்பூச்சிகள் நுழையாதவாறு இடைவெளி இல்லாமல் அடைத்து விட வேண்டும்.

இரை தேடி, வெளியே போய் வருவதற்கு வசதியாக. சுவற்றில் ஐந்தரை அடி உயரத்தில், வீடுகளில் வெண்டிலெட்டர் வைப்பதைப் போல, சிறியதாக சதுர வடிவில் இரண்டு பக்கமும் இடைவெளி விட வேண்டும். கூரைக்கு ஓலை, தகரம், கான்கிரீட் என வசதிக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம்.
புறாக்களை அறைக்குள் விட்டுவிட்டால், ஜோடிஜோடியாக பானைகளுக்குள் சென்று அடைந்து கொள்ளும். மழைக் காலத்தில் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்படும் போது, மட்டும் கம்பு, சோளம் போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். பருவம் வந்தவுடன் பெண் புறா முட்டையிடும். ஒரு பெண்புறா, இரண்டு முட்டையிட்டவுடன் அடைக்கு உட்கார்ந்து விடும். அருகிலுள்ள மற்றொரு பானையில் ஆண் புறா வசிக்கும்.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், முட்டையைக் கையால் தொடக் கூடாது, அப்படி தொட்டால் அந்த முட்டை பொறிக்காது. அடை உட்கார்ந்த 28 நாட்களில் குஞ்சு பொறிக்கும். 15 நாட்களில் தாயிடமிருந்து குஞ்சுகளை தனியாகப் பிரித்து விட வேண்டும். அப்போது தான், அடுத்த முப்பது நாட்களில் மறுபடியும் தாய்ப்புறா முட்டை போடத் தொடங்கும். ஒரு பெண்புறா மூலமாக ஓராண்டுக்கு குறைந்தது 10 குஞ்சுகள் வரை கிடைக்கும்.

ஆண்டுக்கு ரூ 50 ஆயிரம்!

வியாபார ரீதியா புறா வளர்க்க நினைப்பவர்கள், குஞ்சு பொறித்த 15 –ம் நாளில் குஞ்சுகளைப் பிரித்து, தனியாக வைத்து தீவனம் கொடுத்து வளர்த்தால்.. கூடுதல் எடை கிடைக்கும். புறா வளர்ப்பைப் பொறுத்தவரை இளம் குஞ்சுகளுக்குத்தான் கிராக்கி. 25 நாள் வயதுள்ள குஞ்சுகள் ஒரு ஜோடி 100 ரூபாய் வரை விற்பனையாகிறது. இளம் குஞ்சுகளை மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.
இளம் குஞ்சுகளின் ரத்தத்தை மூட்டுவலி உள்ள இடத்தில் தடவினால், வலி குணமாகிவிடும் என்று அதற்காகவும் குஞ்சுகளை வாங்கிச் செல்கிறார்கள். அதே போல குஞ்சுகளில்தான் கறி அதிகமாக இருக்கும். பெரிய புறாவில் எலும்பு மட்டும் தான் இருக்கும். 25 நாள் வயதுள்ள குஞ்சு 300 முதல் 400 கிராம் எடை இருக்கும். குஞ்சுகளின் கறியை பக்கவாதம், மூலம் மாதிரியான நோய்களுக்கு மருந்தாக சிபாரிசு செய்கிறார்கள். பெரிய புறா ஜோடி 60 ரூபாய்க்குதான் விற்பனையாகும்.

ஒரு குஞ்சு 100 ரூபாய் வீதம் விற்பனை ஆனாலே .. ஒரு ஜோடிப் புறா மூலமாக ஆண்டுக்கு 1,000 ரூபாய் கிடைக்கும். 50 ஜோடிகள் இருந்தால், அதன் மூலமாக 50 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். முதலீட்டைப் பொறுத்தவரை அறை கட்டுவதற்கு அதிகபட்சம் ரூ பத்தாயிரம்

தொடர்புக்கு:
சீதாபாரதி
அலைபேசி :98427-67355

.tnau.ac.in

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...