- சென்னை கிண்டியிலுள்ள மத்திய அரசு நிறுவனமான, அட்வான்ஸ்ட் டிரெய்னிங் இன்ஸ்டிட்யூட்டில் பல்வேறு தொழில்நுட்பப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பொறியியல் அல்லது பி.எஸ்சி. எலெக்ட்ரானிக்ஸ் அல்லது பி.எஸ்சி. இன்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி படித்தவர்கள் இந்தப் பயிற்சிகளில் சேரலாம். ஐ.டி.ஐ. படித்தவர்களும் இப்பயிற்சியில் சேர அனுமதிக்கப்படுகிறார்கள்.
- இதில் சேர வயது வரம்பில்லை. இந்தப் பயிற்சி குறித்த விவரங்கள்: ஹைட்ராலிக் மற்றும் நியூமாட்டிக் கண்ட்ரோல்ஸ் பிரிவில் நான்கு வகையான சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பாடப் பிரிவுக்கும் இரண்டு வாரம் பயிற்சி கொடுக்கப்படுகிறது. எலெக்ட்ரிக்கல் கண்ட்ரோல் பிரிவில் நான்கு சிறப்புப் பயிற்சிகள் சொல்லித் தரப்படுகின்றன.
- பயிற்சிக் காலம் - ஒன்று முதல் இரண்டு மாதங்கள் வரை. எலெக்ட்ரானிக்ஸ் கண்ட்ரோல்ஸ் அண்ட் மெயின்டனென்ஸ் பிரிவில் ஏழு சிறப்புப் பயிற்சிகள் உள்ளன. பயிற்சிக் காலம் - மூன்று மாதங்கள். பிராசஸ் கண்ட்ரோல் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன் பிரிவில் 9 வகையான பயிற்சிகள் உள்ளன.
- பயிற்சிக் காலம் - இரண்டு மாதங்கள். சி.என்.சி. சென்டர் பிரிவில் மூன்று சிறப்புப் பயிற்சிகள் உள்ளன. பயிற்சிக் காலம் - ஒன்றரை மாதங்கள். வாகனத் துறையில் சாதிக்க நினைப்பவர்களுக்காக ஹீட் என்ஜின் பிரிவில் வாகனப் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு போன்றவை கற்றுத் தரப்படும். பயிற்சிக் காலம் - ஏழு வாரங்கள். இன்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி பிரிவில் மூன்று வகையான பயிற்சிகள் அளிக்கப்படும்.
- பயிற்சிக் காலம் - 3 வாரங்கள். புரடக்ஷன் டெக்னாலஜி பிரிவில் மூன்று வகையான பயிற்சிகள் உள்ளன. உற்பத்தி தொழில்நுட்பத்தில் ஆர்வம் உள்ளவர்கள் இந்தப் பயிற்சியில் சேர்ந்து பயனடையலாம். இப்படிப்புக்கு தொழிற்சாலைகளில் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். பயிற்சிக் காலம் - ஒன்றரை மாதங்கள். எடை அளவுகள் ஆய்வில் (Metrology) 5 வகையான பயிற்சிகள் உள்ளன.
- பயிற்சிக் காலம் - ஒன்றரை மாதங்கள். இயந்திரங்கள் பராமரிப்பு சம்பந்தப்பட்ட மெஷின் டூல் மெயின்டனென்ஸ் பிரிவில் நான்கு வகையான பயிற்சிகள் உள்ளன. பயிற்சிக் காலம் - 7 வாரங்கள். அட்வான்ஸ்ட் வெல்டிங் பிரிவில் ஐந்து வகையான பயிற்சிகள் இருக்கின்றன. பயிற்சிக் காலம் - இரண்டு மாதங்கள்.
- இந்தப் பயிற்சிகளுக்கு ஒரு வாரத்திற்கு ரூ.350 முதல் 2,500 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சிகளுக்கேற்ப கட்டணமும் மாறுபடும். விண்ணப்பத்திற்கும், பதிவு செய்வதற்கும் ரூபாய் 100-ஐ போஸ்டல் ஆர்டர் அல்லது டிமாண்ட் டிராப்ட் மூலம் அனுப்ப வேண்டும். விடுதியில் தங்கிப் படிக்க விரும்புபவர்களுக்கு, ஒரு நாள் விடுதிக் கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படுகிறது.
- இந்தப் பயிற்சிகள் 26.03.2012ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. விவரங்களுக்கு: இயக்குநர், அட்வான்ஸ்ட் டிரெய்னிங் இன்ஸ்டிட்யூட், சி.டி.ஐ. வளாகம், கிண்டி, சென்னை - 600032 தொலைபேசி எண்: 044- 22500252 இணையதள முகவரி: http:atichennai.org.in
- THANKS - Mr.ASHRAF
No comments:
Post a Comment
மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்