நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Monday, September 19, 2011

PT GROUP வேலை வாய்ப்புகள்அஸ்ஸலாமு அலைக்கும்,,, 

 

லெதர் ஆராய்ச்சி மையத்தில் தொழிநுட்ப உதவியாளர் பணி

 

 மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் இயங்கி வரும் சென்னையில் உள்ள லெதர் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. பணியின் பெயர்: Principal Technical Officer (ECO-testing Lab) (Post Code-3701)

காலியிடம்: 1

சம்பளம்: ரூ.37,400 - 67,000

வயது வரம்பு: 45க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித் தகுதி: chemistry/Analytical Chemistry பாடத்தில் குறைந்தது 55 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Analytical Chemistry துறையில் குறைந்தது 15 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Medical Officer (Post code -Mo3401)

காலியிடம்: 2 (UR-1,OBC-1 )

சம்பளம்: ரூ.15,600 - 39,100

வயது வரம்பு: 35-க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித் தகுதி: MBBS படிப்புடன் அங்கீகாரம் பெற்ற மருத்துவமனையில் 6 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர்: Technical Assistant

காலியிடம்: 3 (UR-2,ST-1)

சம்பளம்: ரூ.9,300 - 34,800

வயது வரம்பு: 28-க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித் தகுதி & போஸ்ட் கோடு:

1. Post Code TA3201

கல்வித் தகுதி: அறிவியல் பாடப் பிரிவில் +2 தேர்ச்சியுடன் Leather Technology பாடத்தில் 3 வருட டிப்ளமோ படிப்பை முதல் வகுப்பில் முடித்திருக்க வேண்டும்.

2. Post code: TA3202

கல்வித் தகுதி: அறிவியல் பாடப் பிரிவில் +2 தேர்ச்சியுடன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் 3 வருட டிப்ளமோ படிப்பை முதல் வகுப்பில் முடித்திருக்க வேண்டும்.

3. Post Code: TA3203

கல்வித் தகுதி: B.Sc. Physics பாடத்தில் முதல் வகுப்பு தேர்ச்சியுடன் Biophysics பாடப்பிரிவில் ஒரு வருட தொழிற்படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது +2-வில் அறிவியல் பாடப்பிரிவில் தேர்ச்சியுடன் Instrumentation Engineering பாடத்தில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: விண்ணப்பதாரரின் உச்ச வயது வரம்பில் SC/ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PH பிரிவினருக்கு 5 வருடங்களும் சலுகை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:  ரூ.100. விண்ணப்பக் கட்டணத்தை " Director, Central Leather Research Institute" என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக செலுத்தவும். டி.டி.-யை SBI  வங்கி மூலம் எடுத்து அனுப்பவும். டி.டி.யின் பின்பக்கம் விண்ணப்பதாரரின் பெயர், விண்ணப்பிக்கும் பணிக்கான Post Code ஆகியவற்றை குறிப்பிடவும். SC/ST/ PH  , பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:  www.clri.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பத்தை ஆன்லைனில் பூர்த்திச் செய்து அனுப்பவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.09.2011

ஆன்லைனில் பூர்த்தி செய்த பின் அதனை பதிவிறக்கம் செய்து தேவையான இடத்தில் கையெப்பமிட்டு அதனுடன் அட்டெஸ்ட் செய்யப்பட்ட தேவையான அனைத்து நகல்களையும் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

The Controller of Administration,

Central Leather Research Institute,

Sardar Patel Road,

Adyar, Chennai - 600020.

தபாலில் விண்ணப்பத்தை அனுப்ப கடைசி நாள்: 30.09.2011

 

 

மத்திய அரிசி ஆய்வகத்தில் பல்வேறு பணிகள்

 

 இந்திய அரசின் கீழ் இயங்கி வரும் மத்திய அரிசி ஆய்வகத்தில் லோவர் டிவிஷனல் கிளார்க் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: லோவர் டிவிஷனல் கிளார்க் -5

கல்வித் தகுதி: பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் 35 ஆங்கில வார்த்தைகளை ஒரு நிமிடத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 27-க்குள் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.09.2011

மேலும் விவரங்கள் அறிய www.crri.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

 

என்.எஸ்.பி.சி.எல். நிறுவனத்தில் பல்வேறு பணிகள்

 

 என்.டி.பி.சி. செயில் பவர் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: டிப்ளமோ டிரெய்னி

கல்வித் தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமெண்டேஷன் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 27-க்குள் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2011

மேலும் விவரங்களை அறிய www.clri.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

இந்திய ராணுவத்தில் கால்நடை மருத்துவம் முடித்தவர்களுக்கு வேலை

 

 இந்திய ராணுவத்தில் Remount veterinary corps பதவிகளுக்கு கால்நடை மருத்துவத்தில் ஆண் பட்டத்தாரிகளுக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: sss in remount veterinary corps

வயதுவரம்பு: 01.10.2011 தேதியின் படி 21-லிருந்து 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: BVSc BVSC-AH பட்டப்படிப்பு தகுதி அல்லது அLற்கு இணாயான வெளிநாட்டு பட்டப்படிப்பு தகுததி பெற்றிருக்க வேண்டும்,

சம்பளம்: ரூ15,600 - 39.100

விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.10.2011

மேலும் விவரங்கள் அறிய : http://indianarmy.nic.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

சி.எல்.ஆர்.ஐ. நிறுவனத்தில் பல்வேறு பணிகள்

 

 சென்னை, அடையாரில் இயங்கி வரும் சென்ட்ரல் லெதர் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தில் பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரேற்கப்படுகின்றன.

பதவி: விஞ்ஞானி

கல்வித் தகுதி: லெதர் டெக்னாலஜி, என்விரான்மெண்டல் என்ஜினீயரிங் துறையில் எம். இ, எம்.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 32 க்குள்

பதவி: டெக்னிக்கல் உதவியாளர்

கல்வித் தகுதி: பன்னிரெண்டாம் வகுப்புடன் லெதர் டெக்னாலஜி, மெக்கானிக்கல் துறையில் டிப்ளமோ.

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.09.2011

மேலும் விவரங்கள் அறிய www.nspcl.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

 

 

-- 

No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...