நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Saturday, September 24, 2011

இந்தியாவில் பல்வேறு வேலைவாய்ப்புகள் காத்திருக்கிறது





அஸ்ஸலாமு அலைக்கும்,,,


 
ஆராய்ச்சிகளை ஊக்குவித்த 6 பேராசிரியர்களுக்கு தலா ரூ. 7 லட்சம் சிறப்பு நிதி
 
 ஆராய்ச்சிகளை ஊக்குவித்த சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் 6 பேருக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சிறப்பு நிதியாக தலா ரூ. 7 லட்சம் வழங்கியுள்ளது.
 இந்திய அளவில் சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்களே, அதிக எண்ணிக்கையில் இந்த சிறப்பு நிதியைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 பல்கலைக்கழகங்களில் அறிவியல் துறையில் ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதற்காக, அடிப்படை விஞ்ஞான ஆராய்ச்சித் திட்டம் என்ற புதிய திட்டத்தை யுஜிசி கடந்த 2010-ம் ஆண்டு அறிமுகம் செய்தது.
 இதன்படி, குறைந்தபட்சம் 15 ஆராய்ச்சி (பிஎச்.டி) மாணவர்களை உருவாக்கிய அல்லது கடந்த 5 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 5 ஆராய்ச்சி மாணவர்களை உருவாக்கிய பேராசிரியருக்கு சிறப்பு நிதியாக ரூ. 7 லட்சம் வழங்கப்படும்.
 இந்த நிதி மூலம் சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள், தங்களுடைய ஆராய்ச்சித் திட்டங்களுக்கான தேவையை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
 இந்த சிறப்பு நிதியை பெறுவதற்காக இந்தியாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழக பேராசிரியர்கள் யுஜிசி-யிடம் விண்ணப்பித்திருந்தனர்.
 இதில் சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து விண்ணப்பித்திருந்த பேராசிரியர்களில் உயிரியல் துறை பேராசிரியர்கள் என். முனுசாமி, ஹெச். தேவராஜ், தாவரவியல் பேராசிரியர்கள் ஆர். ரங்கசாமி, என். ராமன், கே. முருகேசன், படிகவியல் மற்றும் உயிரி இயற்பியல் துறை பேராசிரியர் டி. வேல்முருகன் ஆகிய 6 பேராசிரியர்களை யுஜிசி தேர்வு செய்து, தலா ரூ. 7 லட்சம் வழங்கியுள்ளது.
 இதுகுறித்து சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. திருவாசகம் கூறியது:
 அறிவியல் ஆராய்ச்சியாளர்களின் தேவை அதிக அளவில் உள்ளது.
 ஆராய்ச்சி மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. இதன் ஒரு பகுதிதான் யுஜிசி-யின் ஆசிரியர் ஊக்குவிப்பு சிறப்பு நிதித் திட்டம்.
 யுஜிசி முதன் முறையாக அறிமுகம் செய்துள்ள இந்த திட்டத்தின் கீழ், இந்திய அளவில் சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர்களே அதிக எண்ணிக்கையில் இந்த சிறப்பு நிதியை பெற்றுள்ளனர் என்றார்.
 
 
 
இந்தியக் கப்பல் படைக்கு செப்டம்பர் 29, 30-ல் ஆள்சேர்ப்பு
 
இந்திய கப்பல் படையில் வரும் செப்டம்பர் 29, 30-ம் தேதிகளில் ஆள்சேர்ப்பு நடைபெற உள்ளதாக பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
 இந்தத் தேர்வு சென்னை ராஜாஜி சாலை, நேப்பியர் பாலம் அருகில் உள்ள ஐ.என்.எஸ். அடையாறில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விரும்புவோர் 1991 ஜனவரி 31 மற்றும் 1995 ஜனவரி 30-ம் ஆகிய தேதிகளுக்கு இடையே பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
 மேலும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவோ அல்லது அதற்கு நிகரான தொழில் படிப்பில் தேர்ச்சி பெற்றவராகவோ இருக்க வேண்டும். குறிப்பாக கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களைக் கட்டாயப் பாடமாகவும், வேதியியல், உயிரியல், கம்ப்யூட்டர் அறிவியல் ஆகிய பாடங்களை விருப்பப் பாடமாகவும் படித்திருக்க வேண்டும்.
 உடல்தகுதி தேர்விலும் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதாவது 1.6 கிலோ மீட்டர் தூரத்தை 7 நிமிடங்களில் கடந்து, 20 முறை உட்கார்ந்து எழுதல் வேண்டும். மேலும் 10 தண்டால் எடுக்க வேண்டும்.
 விண்ணப்பிக்க விரும்புவோர் 10-ம் வகுப்பு, மெட்ரிக்குலேஷன் அல்லது அதற்கு நிகரான சான்றிதழ்களுடன் என்.சி.சி. சான்று, வயது சான்று, நன்னடத்தை சான்று, விளையாட்டு சான்று ஆகியவற்றையும் இணைக்க வேண்டும்.
 மேலும் சமீபத்தில் எடுக்கப்பட்ட 10 புகைப்படங்களை, நகல்களுடன் எடுத்து வர வேண்டும். தேர்வுக்கான பாட ஒழுங்கு விதிமுறைகளை
  www.nausena-bharti.nic.in என்ற இணையதள முகவரியிலோ அல்லது கல்வி அலுவலகம் ஐ.என்.எஸ். அடையாறு, நேவி அலுவலகம், போர்ட் காம்ப்ளக்ஸ், ராஜாஜி சாலை, சென்னை 600 009 என்ற முகவரிக்குச் சென்றோ தெரிந்து கொள்ளலாம்.
 
 
விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் வேலை
 
 திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் காலியாக உள்ள கீழ்வரும் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: VSSC-266 dated 10.09.2011
1.பணியின் பெயர்: Technician-B (Post No: 1191)
காலியிடம்: 1(பொது)
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் கார்பென்டர் பிரிவில் ITI/NTC/NAC சான்று பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.5,200 -20,000
2.பணியின் பெயர்: Cook (Post No: 1192)
காலியிடங்கள்: 9 (பொது-6,ஒபிசி-2, எஸ்சி-1)
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Hotel Management/Catering துறையில் சான்றிதழ் பட்டப்பிடிப்புடன் தேவையான பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.5,200 -20,200
விண்ணப்பிக்கும் முறை: www.vssc.gov.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி:  30.09.2011
ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனுடையை பதிவிறக்கம் நகலை தேவையான சான்றிதழ்களின் அட்டெஸ்ட் செய்யப்பட்ட நகல்களை இணைத்து தபாலில் அனுப்ப வேண்டும்.
தபால் அனுப்ப வேண்டிய முகவரி:
The Administrative Officer,
Recruitment  And Review Section,
VSSC, ATF Area, ISRO (PO),
Tiruvananthapuram-695022.
 
 
என்.டி.பி.சி நிறுவனத்தில் என்ஜினீயர் வேலை
 
 என்.டி.பி.சி நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள என்ஜினீயரிங் பணியிடங்களை நிரப்ப சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்: கிராஜூவேட் என்ஜினீயர்
கல்வித்தகுதி: ஆங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் போன்ற துறைகளில் என்ஜினீயரிங் முடித்திருக்க வேண்டும்.
தேர்வுமுறை: விண்ணப்பதாரர்கள் முதலில் கேட்-2012 தேர்வில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும். இந்த தேர்வில் வெறுபவர்கள் ஆன்லைன் மூலம் என்.டி.பி.சி. நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். இவர்களுக்கு கேட்-2012 தேர்வில் பெறும் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு குழுவிவாதம் மற்றும் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
கேட்-2012 தேர்வு பற்றி விவரங்களை அறிய என்ற  iitd.ac.in/gateஇணையதளத்தைப் பார்க்கவும். கேட்-2012 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.10.2011
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது, ET2012 என்று பதவியின் பெயரைக் குறிப்பிட வேண்டும். விண்ணப்பித்தவுடன் கேட் பதிவு எண்ணைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
என்.டி.பி.சி. நிறுவனத்திற்கு ஆன்லைனில் 06.01.2012 முதல் 26.01.2012-க்குள் பதிவு செய்து விட வேண்டும். கல்வி மற்றும் வயதுவரம்பு உள்ளிட்ட மேலும் பல தகவல்களைப் பெற www.ntpccareers.netஇணையதளத்தைப் பார்க்கவும்.
 
கெயில் இந்தியா நிறுவனத்தில் எக்ஸ்ப்ளோரேஷன் மற்றும் புரொடக் ஷன் துறையில் பணி
 
மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் இந்தி எரிவாயு பொறுப்புக்கழகத்தில் GAIL(Gas Authority of India Limited)  எக்ஸ்ப்ளோரேஷன் மற்றும் புரொடக் ஷன் துறையில் அதிகாரியாக பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1.பதவியின் பெயர்: சீப் மேனேஜர் (மட் என்ஜினீயரிங்)
காலியிடங்கள்: 1 (பொது)
2.பதவியின் பெயர்: சீப் மேனேஜர் (ரிசர்வோயர்)
காலியிடங்கள்: 1(பொது)
3.பதவியின் பெயர்: சீனியர் மேனேஜர் (டிரில்லிங்)
காலியிடங்கள்: 1 (பொது)
4.பதவியின் பெயர்: சீனியர் மேனேஜர் (சிமெண்டிங்)
காலியிடங்கள்: 1(பொது)
5.பதவியின் பெயர்: சீனியர் மேனேஜர் (இ அண்டு பி)
காலியிடங்கள்: 2 (பொது-1, எஸ்சி-1)
6.பதவியின் பெயர்: சீனியர் மேனேஜர் (ஜியோ பிசிக்ஸ்)
காலியிடங்கள்: 2 (பொது-1, ஒபிசி(என்சிஎல்)-1))
7.பதவியின் பெயர்: சீனியர் மேனேஜர் (ஜயோலஜி)
காலியிடங்கள்: 1(எஸ்டி)
8.பதவியின் பெயர்: மேனேஜர் (ரிசர்வோயர்)
காலியிடங்கள்: 1(எஸ்சி)
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2011
கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்கள் அறியwww.gailonline.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
கெயில் இந்தியா நிறுவனத்தில் சீனியர் ஆபிசர் பணி
 
 மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் இந்தி எரிவாயு பொறுப்புக்கழகத்தில் GAIL(Gas Authority of India Limited)  தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவு, பாய்லர் ஆபரேஷன்ஸ் துறைகளில் அதிகாரியாக பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1.பதவியின் பெயர்: சீனியர் ஆபிசர் (எப் அண்டு எஸ்)
காலியிடங்கள்: 18 (பொது-10, ஒபிசி-(என்சிஎல்)-3, எஸ்சி-3,எஸ்டி-2)
2.பதவியின் பெயர்: சீனியர் என்ஜினீயர் (பாய்லர் ஆபரேஷன்)
காலியிடங்கள்: 6 (பொது-2, ஒபிசி--3, எஸ்சி-1)
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2011
கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்கள் அறியwww.gailonline.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
BHEL நிறுவனத்தில் என்ஜினீயர் பணிகள்
 
 இந்தியா முழுவதும் பல்வேறு கிளைகளுடன் இயங்கி வரும் நிறுவனமான பெல் நிறுவனத்தில் என்ஜினீயரிங் படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்: என்ஜினீயரிங் டிரெய்னீ
காலியிடங்கள்: 800 (மெக்கானிக்கல்-550, எலக்ட்ரிக்கல்-175, எலக்ட்ரானிக்ஸ்-75)
வயதுவரம்பு: இளங்கலை பட்டதாரிகள் 27 வயதிற்கு மிகாமலும், முதுகலை பட்டதாரிகள் 29 வயதிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் முதலில் கேட்-2012 தேர்வில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், பெல் நிறுவனத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதில் தகுதியுள்ளவர்கள் நேர்முகத்தேர்விற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
கேட்-2012 நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.10.2011
கேட்-2011 பற்றி தகவல்களைப் பெற http://careers.bhel.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
பெல் நிறுவனத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்க கடைசி தேதி:28.01.2012
கல்வித் தகுதி, தேர்வு முறை, விண்ணப்பக் கட்டணம் உள்பட இதுபற்றி மேலும் தகவல்களைப் பெறhttp://careers.bhel.in/bhel/isp/index.jsp என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
ஏர் இந்தியாவின் துணை நிறுவனத்தில் வேலை
 
 ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் குறிப்பிட்ட கால ஒப்பந்த அடிப்படையில் பின்வரும் பதவிகளில் பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்: ஜூனியர் எக்சிகியூட்டிவ் டெக்னிக்கல்
காலியிடங்கள்: 97 (பொது-50, ஒபிசி-26, எஸ்சி-14, எஸ்டி-7) இவை வடக்கு மண்டலம்-4, கிழக்கு மண்டலம் (HQ உள்பட)-14 என்றவாறு பிரிக்கப்பட்டுள்ளன.
கல்வித்தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், ஆட்டோமொபைல், உற்பத்தி, எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவுகளில் குறைந்தபட்சம் 55 சதவிகித மதிபெண்களுடன் பி.இ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் கனரக வாகன ஒட்டுநருக்கான லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்மந்தப்பட்ட துறைகளில் 2 ஆண்டுகள் பணிபுரிந்திருந்தால் சிறப்பு.
வயதுவரம்பு: 01.09.2011 அன்று குறைந்தபட்சம் 25 வயதிற்குள் மிகாமல் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.10.2011
பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை(பிரிணட்-அவுட்) அனுப்ப கடைசி தேதி: 10.10.2011
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 06.11.2011
இதுபற்றிய மேலும் தகவல்களை அறிய www.airindia.in  என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
 
 



No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...