நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Wednesday, November 30, 2011

Defence சர்வீஸ் தேர்வு

டிபன்ஸ் சர்வீஸ் தேர்வு
   
இந்தியன் மிலிட்டரி அகாதெமி, இந்தியன் நேவல் அகாதெமி, ஏர் போர்ஸ் அகாதெமி, ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாதெமி ஆகிய ராணுவ பயிற்சி நிலையங்களில் சேர விரும்பும் மாணவர்கள் மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் கம்பைண்ட் டிபன்ஸ் சர்வீசஸ்  தேர்வை எழுத வேண்டும்.

ராணுவம் தொடர்பான பல்வேறு கல்வி நிலையங்களில் சேர்ந்து படிக்க கம்பைண்டு டிபன்ஸ் சர்வீசஸ் தேர்வை நடத்துகிறது, மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (UPSC). 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி இத்தேர்வுகள் நடைபெறுகின்றன.

டேராடூனிலுள்ள இந்தியன் மிலிட்டரி அகாதெமியில் 250 இடங்கள் உள்ளன. இதற்கான படிப்பு, 2013-ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்குகிறது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்திலுள்ள எழிமலையில் உள்ள இந்தியன் நேவல் அகாதெமியில் 40 இடங்களும், ஹைதராபாத்தில் உள்ள ஏர் போர்ஸ் அகாதெமியில் 32 இடங்களும், சென்னையிலுள்ள ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாதெமியில் ஆண்களுக்கான 175 இடங்களும், பெண்களுக்கான (நான்-டெக்னிக்கல்) 30 இடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி
இந்தியன் மிலிடரி அகாதெமி மற்றும் ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாதெமிக்கு(OTA) விண்ணப்பிப்பவர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது அதற்கு இணையான கல்வி நிறுவனத்தில் பட்டப் படிப்பு முடித்திருக்கவேண்டும். இந்தியன் நேவல் அகாதெமிக்கு விண்ணப்பிப்பவர்கள், என்ஜினீயரிங்கில் பட்டப் படிப்பு, அல்லது இயற்பியல் அல்லது கணிதத்தில் பி.எஸ்சி. பட்டப் படிப்பு படித்திருக்கவேண்டும்.

ஏர் போர்ஸ் அகாதெமிக்கு விண்ணப்பிப்பவர்கள், பிளஸ் டூவுக்குப் பிறகு இயற்பியல் மற்றும் கணிதத்தை பிரதானப் பாடமாக எடுத்துப் படித்து அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

பட்டப் படிப்பு இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால், அதற்கான சான்றைச் சமர்ப்பிக்கவேண்டும்.

வயது:       
இந்தியன் மிலிட்டரி அகாதெமி படிப்புக்கு திருமணமாகாத ஆண்கள் விண்ணப்பிக்கலாம். 1989, ஜனவரி 2ஆம் தேதிக்கு முன்பும், 1994 ஜனவரி 1ஆம் தேதிக்குப் பிறகும் பிறந்தவராக இருக்கக்கூடாது.

இந்தியன் நேவல் அகாதெமிக்கு விண்ணப்பிப்பவர்கள் திருமணமாகாத ஆண்களாக இருக்கவேண்டும். 1991, ஜனவரி 2ஆம் தேதிக்கு முதலிலோ, 1994 ஜனவரி முதல் தேதிக்குப் பிறகோ பிறந்தவராக இருக்கக்கூடாது.

ஏர் போர்ஸ் அகாதெமிக்கு விண்ணப்பிப்பவர்கள், திருமணமாகாத ஆண்களாக இருக்கவேண்டும். 1990 ஜனவரி 2ஆம் தேதிக்கு முதலிலோ, 1994 ஜனவரி 1ஆம் தேதிக்குப் பிறகோ பிறந்தவர்களாக இருக்கக்கூடாது.

ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாதெமிக்கு (ஆண்கள்) விண்ணப்பிப்பவர்கள், திருமணமான அல்லது திருமணமாகாத ஆண்களாக இருக்கலாம். 1998, ஜனவரி 2ஆம் தேதிக்கு முதலிலோ, 1994 ஜனவரி 1ஆம் தேதிக்குப் பிறகோ பிறந்தவர்களாக இருக்கக்கூடாது.

ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாதெமிக்கு (நான்-டெக்னிக்கல் படிப்பு, பெண்களுக்கானது) விண்ணப்பிக்கும் பெண்கள், திருமணமாகாதவர்களாக இருக்கவேண்டும். கணவனை இழந்த, வாரிசுகள் இல்லாத பெண்கள், விவாகரத்தான வாரிசுகள் இல்லாத பெண்களும் விண்ணப்பிக்கலாம். 1998, ஜனவரி 2ஆம் தேதிக்கு முன்னரோ, 1994, ஜனவரி 1ஆம் தேதிக்குப் பிறகோ பிறந்தவர்களாக இருக்கக்கூடாது.

தேர்வு முறை:   
யூ.பி.எஸ்.சி. நடத்தும் போட்டித் தேர்வில், எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும். ஆங்கிலம், பொது அறிவு மற்றும் அடிப்படைக் கணிதம் போன்ற பாடங்களுக்கு தலா 2 மணி நேரம் தேர்வு நடைபெறும். ஒவ்வொரு பாடங்களுக்கும் தலா 100 மதிப்பெண்கள். இத்தேர்வு இந்தியன் மிலிட்டரி அகாதெமி, இந்தியன் நேவல் அகாதெமி, ஏர்போர்ஸ் அகாதெமி ஆகிய நிறுவனங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே. ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாதெமிக்கு விண்ணப்பிப்பவர்கள், ஆங்கிலம் மற்றும் பொது அறிவு என இரண்டு பாடங்களுக்கு மட்டுமே தேர்வு எழுதினால்போதும். இந்தப் பாடங்களுக்கு தலா 2 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான மதிப்பெண்கள் தலா 100.

இந்தியன் மிலிட்டரி அகாதெமி, இந்தியன் நேவல் அகாதெமி, ஏர் போர்ஸ் அகாதெமி போன்றவற்றுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வையும் சேர்த்து அதிகபட்சமாக 300 மதிப்பெண்கள் பெறவேண்டும். ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாதெமிக்கு அதிகபட்சமாக 200 மதிப்பெண்கள் எடுக்கவேண்டும்.

கணிதப் பாடத்தில் கேட்கப்படும் கேள்விகள், மெட்ரிக்குலேஷன் நிலைக்குச் சமமானவையாக இருக்கும். மற்ற பாடங்களுக்கான சிலபஸ், இந்தியப் பல்கலைக்கழகத்தில் பட்டதாரிகளுக்கான சிலபஸை ஒத்திருக்கும். ஆங்கிலப் பாடத்தைப் பொருத்தவரை, விண்ணப்பதாரர்களின் ஆங்கில அறிவு, வார்த்தைகளை உபயோகப்படுத்தும் விதம் போன்றவை சோதித்து அறியப்படும்.

கேள்வித் தாள்கள் ஆப்ஜெக்ட்டிவ் முறையில் அமைந்தவை. பொது அறிவு மற்றும் அடிப்படைக் கணிதம் போன்றவற்றுக்கான கேள்வித்தாள்கள் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என்று இரு மொழிகளில் அமைந்திருக்கும்.

யூ.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வில், ஆப்ஜெக்ட்டிவ் முறையிலான கேள்விகளுக்குத் தவறான பதில் எழுதினால் நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு என்பதை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.

சென்னை, பெங்களூரு, கொச்சி, திருப்பதி, திருவனந்தபுரம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு இடங்களிலுள்ள மையங்களில் தேர்வு நடைபெறும்.

தேர்வு எழுத விண்ணப்பிக்கும் மாணவர்கள் ஏதேனும் தகவல்கள் அறிய விரும்பினால் 011-23385271, 011-23381125, 011-23098543 என்ற தொலைபேசி எண்களில் வேலை நாட்களில் காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை தொடர்புகொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் தாங்கள் எதற்கு விண்ணப்பிக்க விரும்புகிறார்களோ அதுகுறித்து ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் தெளிவாகக் குறிப்பிடவேண்டும். ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான முகவரி: WWW.upsconline.nic.in

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பக் கடைசி நாள் : 28.11.2011

கட்டணம்:
பெண்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் ஆகியோர் நீங்கலாக, மற்றவர்கள் ரூ.100க்கான பணத்தை விண்ணப்பக் கட்டணமாகக் கட்ட வேண்டும். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் எந்தக் கிளையில் வேண்டுமானாலும் விண்ணப்பக் கட்டணத்தை பணமாகச் செலுத்தலாம்.
-- 
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ وَلَاتَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّـهَ ۖ إِنَّ اللَّـهَ شَدِيدُ الْعِقَابِ  (05-02)
..and help one another in goodness and piety, and do not help one another in sin and aggression; and be careful of (your duty to) Allah; surely Allah is severe in requiting(05;02)
"..நீங்கள் நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள், பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவன் கடுமையாக தண்டிப்பவன்" (05,02)
 Regards 
Ansar (U.L)

----------------



No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...