நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Thursday, February 23, 2012

பொதுத் துறை நிறுவனங்களுக்கு CAMPUS INTERVIEW (வளாகத் தேர்வு) நடத்த தடை

நேற்று (21/02/2012) சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை பெஞ்ச் தனியார்நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஊழியர்களை சிறந்தகல்லூரிகளிலிருந்து CAMPUS INTERVIEW எனும் நடைமுறையில் தேர்வு செய்வதுபோலபொதுத் துறை நிறுவனங்கள் (PSU) தேர்வு செய்யக்கூடாது என  இடைக்காலதடை விதித்துள்ளனர் , மறு ஆணை வரும் வரை இந்நிலையே (status quo) தொடர  வேண்டும்  எனவும்  அறிவித்துள்ளனர்

 

இத்தீர்ப்பின் காரணத்தால் ISRO(Indian Space Research Organization), HAL (HindustanAeronautics Limited) போன்ற நிறுவனங்கள் CAMPUS INTERVIEW முறைப்படிஆட்களை  தேர்ந்தெடுக்க முடியாது.

 

இம்முறையில் சிறந்த மாணவர்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டால் தடுக்கமுடியுமா என்பதும் வேலைவாய்ப்பு அலுவகங்களில் பதிவுசெய்துள்ளமாணவர்கள் புறக்கணிக்கப்பட்டால் அதை எவ்வாறு களைவது என்பதும்கேள்விக்குரியதகாவே உள்ளது " என  தங்களின் இடைக்கால தீர்ப்பில் தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவா ஞானம் அடங்கிய முதன்மை பெஞ்ச்குறிப்பிட்டுள்ளது.. வாதிகள் தங்களின் கவுன்ட்டர் அப்பிடவிட்டை இரு வாரகாலத்திற்குள் பதிவு செய்யுமாறும் பெஞ்ச் கூறியுள்ளதுஇந்த பெட்டிசனில்குறிப்பிடப்பட்டுள்ள மேலும் இரண்டு முக்கியமான  நிறுவனங்கள்  இந்தியன்ஆயில் கார்பரேஷன் மற்றும்  பாரத் பெட்ரோலியம் .

 

- N. அல் அமீன்


No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...