நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Thursday, November 17, 2011

ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது (வேலை வாய்ப்புகள்)

Subject: PT GROUP - ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது (வேலை வாய்ப்புகள்)

அஸ்ஸலாமு அலைக்கும்,,,

 
 
இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது
 
இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்ப விநியோகம் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை தொடங்கியது. வரும் 23-ம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.
 மாநிலம் முழுவதும் 1,743 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டது. மாநில பதிவு மூப்பு தகுதி அடிப்படையில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
 வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஒரு பணியிடத்துக்கு 5 பேர் என்ற வீதத்தில் மொத்தம் 9,200 பேர் கொண்ட பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்தது. இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் இடைநிலை ஆசிரியர் விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் திங்கள்கிழமை முதல் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
 இதற்கென 20 ஆயிரம் விண்ணப்பங்கள் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டன. முதல்நாளான திங்கள்கிழமை பதிவுதாரர்கள் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பங்களைப் பெற்றுச் சென்றனர்.
 ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட பதிவு மூப்புத் தகுதிப் பட்டியல் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு வெளியே ஒட்டப்பட்டிருந்தது. பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்களுக்கு விண்ணப்பங்கள் இலவசமாக விநியோகிக்கப்பட்டன.
 வேலைவாய்ப்பு அலுவலக பதிவின்படி பதிவு மூப்புத் தகுதியிருந்தும் பட்டியலில் இடம்பெறாதவர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திடம் இருந்து கடிதம் பெற்று இந்த விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 இந்த விண்ணப்ப விநியோகம் நவம்பர் 23-ம் தேதி வரை நடைபெறும். பூர்த்திசெய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க அன்றே கடைசி தேதி ஆகும்.
 
கல்வி அமைச்சர் தகவல் 55 ஆயிரம் ஆசிரியர்கள் இந்த ஆண்டில் நியமனம்
 
இந்த கல்வி ஆண்டில் 55,000 ஆயிரம் ஆசிரியர் நியமனம் செய்யப்படுவார்கள் என்று கல்வி அமைச்சர்   தெரிவித்தார். 2006&2011 ஆண்டுகளில் 58,000 ஆசிரியர்கள்தான் நியமிக்கப்பட்டனர். ஆனால் 2001&2006 ஆண்டுகளில் 61,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இப்போது, ஒரே ஆண்டில் 55000 ஆசிரியர் நியமிக்க உள்ளோம். பள்ளிகளில் இடைநிற்றலை குறைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் கட்டாய இலவச கல்வி திட்டம், தமிழகத்தில் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.  
 
கடற்படையில் பணியுடன் கூடிய பி.டெக்., படிப்பு
 
இந்தியக் கடற் படையின் பயிற்சி தளமாகிய நேவல் அகாடமி கேரளாவின் கண்ணூர் மாவட்டத்திலுள்ள எழிமலாவில் உள்ளது. இந்த மையத்தில் திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களுக்கான 10+2 கேடட் (பி.டெக்.,) என்ட்ரி ஸ்கீம் என்னும் பணி சேர்ப்பு முறைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேவைகள் என்னென்ன: இந்தியக் கடற் படையின் கேடட் என்ட்ரியில் சேர்வதற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 17 வயது நிரம்பியும் 19 1/2 வயதுக்கு உட்பட்டும் இருக்க வேண்டும். அதாவது 02.01.1993 முதல் 01.07.1995க்குள் பிறந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களை உள்ளடக்கி பிளஸ்டூ படிப்பைக் குறைந்த பட்சம் 70 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உயரம் குறைந்த பட்சம் 157 செ.மி.,யும் இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும். கண்ணாடி அணிந்தவர்களும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்தப் படிப்பிற்கு விண்ணப்பிக்க முடியும் என்ற போதும் மாலைக் கண் நோய், வண்ணக் குறைபாடு உடையவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
இதர விபரங்கள்: விண்ணப்பிப்பவர்களின் கல்வித் தகுதி அடிப்படையில் நேர்காணலுக்கான அழைப்பு அனுப்பப்படும். இந்த நேர்காணல் பெங்களூரு, போபால், கோவை ஆகிய மையங்களில் அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் மே மாதம் வரை நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு மட்டுமே பணியுடன் கூடிய இந்தப் படிப்பில் சேர்வதற்கு வாய்ப்பு கிடைக்கும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்-லைன் முறையில் இ-அப்ளிகேஷன்களை அனுப்ப வேண்டும். இதன் பின்னர் கிடைக்கும் பிரின்ட் அவுட்டில் இரண்டு காப்பிகள் எடுத்து அவற்றில் ஒன்றில் போதுமான இணைப்புகளைச் சேர்த்து பின் வரும் முகவரிக்கு சாதாரண தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தை அனுப்பும் கவரின் மீது Online Roll No________ Application for 10+2 Cadet (B.Tech.,) Entry Scheme & JUN 2012 Course Qualification PCM Percentage ______ % என்று தவறாமல் குறிப்பிடவும்.
ஆன்-லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் : 26.11.2011
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Post Box No.04,
Chanakyapuri,
New Delhi 110 021.
இணையதள முகவரி : www.nausena&bharti.nic.in/pdf/10+2/AdvEng.pdf
 
எல்லைப் பாதுகாப்புப் படையில் பணிவாய்ப்பு
 
இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை ( பி.எஸ்.எப்.,) ஆகும். இந்த படையில் டெக்னிகல் பிரிவுகளான ஒர்க்ஸ் மற்றும் எலக்ட்ரிகலில் துணை கமாண்டண்ட்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒர்க்ஸ் பிரிவில் 19 இடங்களும், எலக்ட்ரிகல் பிரிவில் 7 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
தேவைகள்: பி.எஸ்.எப்.,பின் இந்த இரண்டு பிரிவுகளுக்குமே குறைந்த பட்ச வயது 21ஆகவும், அதிக பட்ச வயது 26 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒர்க்ஸ் பிரிவுக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக சிவில் இன்ஜினியரிங் பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
எலக்ட்ரிகல் பிரிவுக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இது தவிர சில குறைந்த பட்ச உடல் தகுதிகளும் தேவைப்படுகிறது.
உயரம் ஆண்களுக்குக் குறைந்த பட்சம் 165 செ.மி.,யும், பெண்களுக்கு 157 செ.மி.,யும் மற்றும் இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும். கண்ணாடி அணிந்தவர்களும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்க முடியும்.
இதர தகவல்கள்: பரிந்துரை செய்யப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்துடன் வயது, கல்வித் தகுதி ஆகியவற்றின் சான்றுகளின் நகல்கள், ரூ.100/-க்கான டி.டி., ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும். டி.டி.,யை விண்ணப்பிக்கும் மையத்திற்கேற்ற பெயரிலும் மற்றும் மாற்றத்தக்க வகையிலும் எடுக்க வேண்டும். முழு தகவலுக்கு இணைய தளத்தைப் பார்க்கவும். விண்ணப்பிக்க இறுதி நாள் : 03.12.2011
இணையதள முகவரி : www.bsf.nic.in/recruitment/r50.pdf http://www.bsf.nic.in/recruitment/r50.pdf>
 
 
 

No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...