என்எல்சியில்... நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தனது உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக, 12 தலைமை பொது மேலாளர்கள் (மெக்கானிக்கல் / எலக்ட்ரிகல், பைனான்ஸ், மைனிங், சிவில்), பல்வேறு பிரிவுகளுக்கான 19 துணைப் பொது மேலாளர்கள், 131 பொறியாளர்கள் ஆகிய பணிகளுக்காக தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது : பதவிக்கு ஏற்ப 32 முதல் 56 வரை. சம்பளம் : பதவிக்கேற்ப ^20,600 முதல் ^73,000 வரை. தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் நாடு முழுவதும் உள்ள எந்த கிளையிலும் பணிபுரிய தயாராக இருக்க வேண்டும். இடஒதுக்கீடு விதிமுறைகள் பின்பற்றப்படும். குறிப்பிட்ட பதவிகளுக்கு தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். அதற்கான தேதி மற்றும் இடம் ஆகியவை தனித்தனியாக தெரிவிக்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்,www.nlcindia.com இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி : 14&11&2011. மேலும் விவரங்களுக்கு: அக்டோபர் 22&28 நாளிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழை பார்க்கவும். ரயில்வேயில்... இந்திய ரயில்வேயின் மெக்கானிக்கல் துறையின் பணியிடங்களை நிரப்ப மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஸ்பெஷல் கிளாஸ் ரயில்வே அப்ரென்டிசஸ் தேர்வை (01/2012&எஸ்.சி.ஆர்.ஏ.) நடத்துகிறது. மொத்தம் 42 பணியிடங்களுக்காக நடக்கும் இத்தேர்வு சென்னை, மதுரை உட்பட நாட்டின் 41 முக்கிய நகரங்களில் நடக்கிறது. கல்வித் தகுதி: மெட்ரிக்குலேஷன் அதற்கு நிகரான மேல்நிலை பள்ளி படிப்பு மற்றும் பட்ட படிப்பில் கணிதம் மற்றும் இயற்பியல், வேதியியலில் ஏதேனும் பாடத்தை எடுத்து படித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 2012 ஜனவரி 1ம் தேதியில் 17 முதல் 21 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு வயது தளர்வு உண்டு. தகுதியான விண்ணப்பதாராகள் http:// www.upsc.gov.in என்ற இணையதள முகவரிக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 21.11.2011. மேலும் விவரங்களுக்கு அக்டோபர் 22&29ம் தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழை பார்க்கவும். பெல் நிறுவனத்தில் பொறியாளர் பணி நாடு முழுவதும் உள்ள 4 மண்டலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் மின் உற்பத்தி திட்டங்களில் பெல் நிறுவனத்தின் சார்பில் உதவி மேலாளர், மேலாளர், முதுநிலை மேலாளர் ஆகிய பதவிகளில் பணியாற்றுவதற்கு மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், சிவில், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன், கெமிக்கல் ஆகிய பிரிவுகளில் அனுபவம் வாய்ந்த பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது: உதவி மேலாளர் 38, மேலாளர் 41, முதுநிலை மேலாளர் 45க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு விதிமுறைகளுக்கு உட்பட்டு வயது வரம்பு தளர்த்தப்படும். முன் அனுபவம் முறையே 9, 12, 15 ஆண்டுகள் இருக்க வேண்டும். சம்பளம்: ^32,900 முதல் ^66,000 வரை. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.careers.bhel.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே 1.11.2011க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மேற்கண்ட இணையதளத்தைப் பார்க்கவும். இக்னோ, எஸ்எஸ்சிஐ அளிக்கிறது பேரிடர் மேலாண்மை பணிக்கான படிப்பு பூகம்பம், சுனாமி, தீ, புயல் & மழை உட்பட இயற்கை பேரிடர்கள் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து வருகின்றன. பூமி வெப்பமடைதல் காரணமாக பருவ நிலை மாற்றங்கள் ஏற்படுவதே இவற்றுக்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும், சுற்றுச்சூழல் சீர்கேடு, சரியான கழிவு மேலாண்மை இல்லாதது ஆகியவற்றால் மண் வளமும், காற்றின் தூய்மையும் வேகமாக குறைந்து வருகின்றன. இதனால், இயற்கை சீற்றங்கள் அதிகரித்து மக்கள் திடீர் அழிவுக்கும் சொத்துக்கள் இழப்புக்கும் ஆளாகின்றனர். எனவே, இந்த சூழ்நிலையில் பூகம்பம், சுனாமி, புயல் மழை & வெள்ளம், தீ, நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களை சமாளித்து சேதத்தை குறைக்க தேவையான நவீன நிர்வாக முறைகள் அவசியமாகிறது. இதை உணர்ந்து இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக் கழகமும், செக்யூரிடி அண்ட் இன்டலிஜென்ஸ் சர்வீசஸ் (எஸ்எஸ்சிஐ) நிறுவனமும் இணைந்து முதுகலை டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளை முதல்முறையாக அறிமுகம் செய்கின்றன. பிஜி டிப்ளமோ இன் செக்யூரிடி ஆபரேஷன்ஸ், பிஜி டிப்ளமோ இன் ஃபயர், சேப்டி அண்ட் டிசாஸ்டர் மேனேஜ்மென்ட் என்பது அந்த படிப்புகளின் பெயர். ஓராண்டு மற்றும் 6 மாதங்களில் இதை படித்து சான்றிதழ் பெறலாம். படிப்பு காலத்தில் கல்வி உதவித் தொகை உண்டு. படிப்பை முடித்த பிறகு வேலைவாய்ப்பு உறுதியை இந்த கல்வி நிறுவனங்களே அளிக்கின்றன. படிப்புகள் 2012 ஜனவரி மாதத்தில் தொடங்குகின்றன. எஸ்எஸ்சிஐ மையங்களில் நேரடி வகுப்புகள் மூலம் மட்டுமே படிக்க முடியும். இதில் சேர நவம்பர் 20ம் தேதி நுழைவு தேர்வு நடக்கிறது. எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வில் பங்கேற்க வேண்டும். சென்னையிலும் இவை நடக்கவுள்ளன. மேலும் விவரங்களை www.sisindia.com, www.ssci.co.in என்ற இணைய தளங்களிலோ, செக்யூரிடி ஸ்கில் கவுன்சில் இந்தியா லிட்., ஏ28, 29, ஆக்லா இண்டஸ்டிரியல் ஏரியா, பேஸ் 1, புதுடெல்லி&20, போன் 011 & 29536982 என்ற முகவரி, போன் எண்ணில் அறியலாம் . ஜிஐசி ரீ நிறுவனத்தில் வேலை ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா குளோபல் ரீஇன்சூரன்ஸ் சொல்யூஷன் நிறுவனத்தில் உள்ள 50 பணியிடங்களுக்கு இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்ற திறமையுடன்ஆர்வமிக்க இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்நிறுவனத்தின் உள்நாடு மற்றும் வெளிநாட்டு கிளைகளில் துணை மேலாளருக்கு (ஸ்கேல் 1) இணையான வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. கல்வித் தகுதி: இளங்கலை பொறியியல் (கடல்சார் / ஏரோநாட்டிக் / மெக்கானிக்கல் / கெமிக்கல் / எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் / சிவில் / ஐடி முதுகலை (புள்ளியியல் / கணிதம் / மார்க்கெட்டிங் / மேலாண்மை / ரிஸ்க் மேலாண்மை; தொடர்பியல் / மனித வள மேலாண்மை / நிதி / வணிகவியல் / சட்டம்) உட்பட எம்பிபிஎஸ். வயது வரம்பு: 30.09.2011ன்படி 21 முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். எழுத்து தேர்வு, குழு விவாதம், நேர்காணலுக்குப்பின் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்து தேர்வு சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தாவில் நடைபெறும். விண்ணப்பங்களை www.epostonline.in.GIC என்ற இணையதள முகவரிக்கு ஆன்லைன் மூலம் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 05.11.2011. மேலும் தகவலுக்கு 22&29ம் தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழை பார்க்கவும். |
ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக ! சகோதர்களே! இது கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளை பகிர்ந்துகொள்ளும் பொதுவான தளம். உங்களுக்கு தெரியவரும் வேலைவாய்ப்பு தகவல்களை nagoreflash@ymail.com என்ற முகவரிக்கு நீங்கள் அனுப்பிதந்து இங்கே இடம்பெற செய்யுங்கள் இன்ஷால்லாஹ் பலர் பயன்பெறுவர்கள்..... இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளின் வேலைவாய்ப்பு தகவல்களை தொடர்ந்து UPADATE செய்து வருகிறோம்.
நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
Website Translator
- CALL CENTRE வேலையை பற்றிய ஒரு பார்வை
- List of Organisations offering Awards to Muslim students
- List of Organisations offering coaching to Muslim students
- List of Organisations offering Scholarships to students
- LIST OF TOP UNIVERSITIES IN INDIA
- அரசு தேர்வானையும் முஸ்லிம்களின் ஆர்வமின்மையும்
- ஆன்லைன் வேலைவாய்ப்பு அலுவலகம் - பதிவுசெய்யுங்கள்.
- என்ன படிக்கலாம்? - டாப் 10 படிப்புகள்!
- கல்வி உதவிக்கான இந்திய அரசின் வலைத்தளம்!
- சிறுபான்மையினருக்கான உயர்கல்வி பயிற்சி மையம்
- சுவீடனுக்குப் படிக்கப் போகலாம் வாங்க, படிப்பு இலவசம்!
- தமிழ்நாடு கலை & அறிவியல் கல்லூரிகள்
- தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகள்
- தொழில்நுட்பம் படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித்தொகை!
- மாணவர்கள் 'அதிக மதிப்பெண்கள்' பெற ஓர் இணையதளம்!
- முழுமையான கல்வி வழிகாட்டி -தமிழில்
- முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள்
Wednesday, November 9, 2011
PT GROUP - கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள்,,,
Subscribe to:
Post Comments (Atom)
CAREER JET JOB SEARCH
Jobs by Careerjet
No comments:
Post a Comment
மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்