மதுரை: மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சுய தொழில் துவங்க வழிகாட்டும் தொழில்நுட்பங்களில் சான்றிதழ் படிப்பு நடத்தப்படுகிறது.
இப்படிப்பில் சேர தமிழில் நன்கு எழுதப்படிக்க தெரிந்திருந்தால் போதும். பயிற்சிகாலம் 6 மாதம். மாதம் ஒருமுறை நேர்முகப் பயிற்சி சனி அல்லது ஞாயிறுகிழமைகளில் நடைபெறும்.
பயிற்சி கட்டணம் ரூ. ஆயிரத்து 500. இப்பயிற்சி பெறுவோர் காய்கறிகள், பழங்களை பதப்படுத்துதல், ஜாம், ஜெல்லி, ஸ்குவாஷ், ஜூஸ், ஊறுகாய், வத்தல் போன்று டின்களில் அடைக்கும் வகையில் பொருட்களை தயாரிக்கலாம்.இச்சான்றிதழ் பாடத்தை படித்த இளைஞர்களும், பெண்களும், ஆர்வம் உள்ளவர்களும், சுயஉதவிக் குழுக்களும் தொழில்நுட்ப அறிவை பெற்று சுய தொழில் துவங்க முடியும்.
விபரங்களுக்கு:
முதல்வர் , மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
மதுரை-625 104, போன்: 0452- 242 3433,
அல்லது
இயக்குனர்,
திறந்தவெளி மற்றும் தொலைதுõரக் கல்வி இயக்ககம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம்,
கோவை-641 003 / போன்: 0422- 661 1229, 661 1429.
No comments:
Post a Comment
மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்