நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Sunday, January 8, 2012

35வது சென்னை புத்தகக் கண்காட்சி - மறக்காமல் செல்லுங்கள்


தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் 35வது சென்னை புத்தகக் கண்காட்சி பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

விவசாயம், தோட்டக்கலை, சுற்றுப்புறச் சுகாதாரம், மனித நேயம், சராசரி மனிதன் தெரிந்துவைத்திருக்கவேண்டிய சட்டங்கள், இலக்கியம், அரசியல், தத்துவம், பொருளாதாரம், தொழில்நுட்பம், ஆன்மீகம், சமையல், மருத்துவம்கல்வி என பலதரபட்ட பிரிவுகளில் புத்தகங்கள் உள்ளன.
கண்காட்சி வளாகத்தில்சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்க பிளாஸ்டிக் பைகள் தடைசெய்யப்பட்டுள்ளன ஆகவே வாசகர்கள் வீட்டிலிருந்தே துணிப்பைகளை எடுத்துச் செல்வது நல்லது.
ஓவ்வொரு வருடமும் வாசகர்களின் எண்ணைக்கை அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி திறந்திருக்கும். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.
புத்தகக்கண்காட்சிக்கு நுழைவுக்கட்டணமாக ரூ 5 வசூலிக்கப்படுகிறது. 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இலவசம்.

ஜனவரி 5ம் தேதி துவங்கிய புத்தகக் கண்காட்சி  தொடர்ந்து 17ம் தேதி வரை  நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...