நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Thursday, June 2, 2011

விமானப் படை பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


---------- Forwarded message ----------கடலூர் : இந்திய விமானப் படையில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் வரும் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படைக்கு வீரர்கள் தேர்வு முகாம் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இப்பணியில் சேர விருப்பம் உள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 , இன்டர் மீடியேட் அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பாலிடெக்னிக் படித்து 50 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரம் மற்றும் விண்ணப்பம் வேண்டுவோர் ( www.indianairforce.nic.in  ) என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் ஜூன் 10ம் தேதிக்குள், சென்ட்ரல் ஏர்மென் செலக்சன் போர்டு, தபால் பெட்டி எண் 11807, புதுடில்லி 110 010 என்ற முகவரிக்கு வரும் 10ம் தேதிக்குள் சாதாரண தபாலில் அனுப்ப வேண்டும். இதுகுறித்த விவரம் வேண்டுவோர் "ஏர்மென் செலக்சன் சென்டர், ஏர்போர்ஸ் ஸ்டேஷன், தாம்பரம், சென்னை 600 046 என்ற முகவரியிலோ அல்லது 044-22791853, 044-22396565 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். 

 

http://www.dinamalar.com/district_detail.asp?id=248735

 

 No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...