நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Thursday, June 2, 2011

108 இலவச ஆம்புலன்சில் பணியாற்ற விருப்பமா?


----- Forwarded Message -----

Subject:
 108 இலவச ஆம்புலன்சில் பணியாற்ற விருப்பமா?

அஸ்ஸலாமு அலைக்கும்,,,

 

 
108 இலவச ஆம்புலன்சில் பணியாற்ற விருப்பமா
 
 
தமிழக அரசின் சுகாதார திட்டத்தின் கீழ் இயங்கும் 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை நிறுவனத்தில் மருத்துவ உதவியாளர், டிரைவர்கள் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் ஜூன் 9ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து, '108' ஆம்புலன்ஸ் சேவைக்கான தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் கீழ் ஜிவிகே, இஎம்ஆர்ஐ நிறுவனத்துடன் அவசரகால சேவைகளுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இணைந்து செயலாற்றுகிறது.
 
தமிழகத்தில் 32 மாவட்டங்களில் 426 ஆம்புலன்சுகளுடன் '108' சேவை மக்களுக்கு பயனளித்துக் கொண்டிருக்கிறது. ஜிவிகே, இஎம்ஆர்ஐ நிறுவனம் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாமை நடத்த இருக்கிறது. அதன்படி, ஓட்டுனர் பணியில் சேர விரும்புபவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 25 வயதுக்கு மேல் 38 வயதுக்கு மிகாமல், 162.5 செ.மீ. உயரம் குறையாமல் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.6,489 வழங்கப்படும்.
 
மருத்துவ உதவியாளர் பணியில் சேர விரும்புபவர்கள் பிஎஸ்சி நர்சிங் அல்லது ஜிஎன்எம் (12ம் வகுப்புக்கு பிறகு 3 ஆண்டுகள்) படித்திருக்க வேண்டும். 21 வயது முதல் 30 வயதுள்ள ஆண் மற்றும் பெண்கள் பங்கேற்கலாம். மாத சம்பளம் ரூ.7,500 கிடைக்கும்.
 
ஓட்டுனர் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கான நேர்முகத் தேர்வு, வரும் 9ம் தேதி, சென்னை திருவல்லிக்கேணி, 15 பெல்ஸ் சாலை, கஸ்தூரிபாகாந்தி தாய் சேய் நல மருத்துவமனை வளாகத்தில் உள்ள 108 அவசரகால சேவை மைய தலைமை அலுவலகத்தில் காலை 9.30 மணி முதல் நடைபெறும். பணி நேரம் 12 மணி நேரம் ஷிப்ட் முறையில் இரவு மற்றும் பகல் என மாறும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணி நியமன ஆணை அதேநாளில் வழங்கப்படும்.
 
வெளியூர்களில் இருந்து வரும் விண்ணப்பதாரர்கள் போக்குவரத்துக்கான ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரம் அறிய 044&2888 8060 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
 
 
--
இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...