நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Sunday, February 6, 2011

ஓமனில் பொது பணியாளர் வேலை-பிப் 7ல் நேர்முக தேர்வு: தகுதி எஸ்.எஸ்.எல்.சி

 
நெல்லை: ஓமன் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனத்துக்கு பொது பணியாளர்கள் தேவைப்படுதவாக நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுஜயசேகரன் நாயர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

ஓமன் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனத்துக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 22 முதல் 28 வயதுக்கு உட்பட்ட பொது பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு நல்ல ஊதியமும், இதர சலுகைகளும் வழங்கப்படும்.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்கள் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்விச் சான்று, பாஸ்போர்ட், முன் அனுபவ சான்று ஆகியவற்றி்ன் அசல் மற்றும் நகல் மற்றும் நீலநிற பின்னணியி்ல் எடுக்கப்பட்ட 5 புகைப்படங்களுடன் நேர்முக தேர்வில் கலந்து கொள்ளலாம்.

சென்னை அடையாறு டாக்டர் முத்துலெட்சுமி சாலையி்ல் அமைந்துள்ள தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் வரும் 7-ம் தேதி காலை 9 மணிக்கு நேர்முகத் தேர்வு நடக்கிறது என அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குனர் சந்தோஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளதாக நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுஜயசேகரன் நயார் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...