நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Wednesday, November 10, 2010

சவூதி அரேபியாவில் வேலைவாய்ப்பு: நாகர்கோவிலில் நேர்முகத் தேர்வு


First Published : 10 Nov 2010 10:28:38 AM IST


திண்டுக்கல், நவ. 9: சவூதி அரேபியாவில் உள்ள நிறுவனத்தில் ஆட்டோகாட் டிராப்ட்ஸ்மேன்கள் பணிக்கு ஆட்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கான நேர்முகத் தேர்வு நாகர்கோவில் கோனம் அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் வரும் நவ. 16 அல்லது 17 ஆம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பு நிறுவனமான ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குநர் சந்தோஷ் கே மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

   இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

   சவூதி அரேபியாவில் உள்ள முன்னணி நிறுவனத்துக்கு டிப்ளமோ மெக்கானிக்கல் பிரிவில் தேர்ச்சி பெற்ற ஆட்டோகாட் டிராப்ட்ஸ்மேன்கள் தேவைப்படுகின்றனர். நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நிறைவான ஊதியம் மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும்.

   தகுதியுள்ளவர்கள் தங்களின் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் வெள்ளை நிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட 5 புகைப்படங்களுடன் தட்டச்சு செய்யப்பட்ட சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் நாகர்கோவில் கோணம் அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் வரும் நவம்பர் 16 அல்லது 17 ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

   இது குறித்து மேலும் விவரம் அறிய விரும்புவோர் 99529 40460, 94436 90272, 044 24464269 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...