நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Saturday, December 17, 2011

எழுதுபொருள் அச்சகத்துறையில் தொழில் நுட்ப உதவியாளர் பணி

எழுதுபொருள் மற்றும் அச்சகத் துறை இயக்குநரால் அறிவிக்கப்பட்ட தொழில்நுட்ப உதவியாளர் பணி காலியிடங்களுக்கு மாநில அளவிலான பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி பள்ளி இறுதி தேர்ச்சியுடன் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது வாரியத்தால் வழங்கப்பட்ட டிப்ளமோ இன் பிரிண்டிங் டெக்னாலஜி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

1.7.11 அன்று 30 வயதுக்குள் இருக்க வேண்டும் (பகிரங்க போட்டியாளர்). பிற இனத்தவருக்கு வயது வரம்பு ஏதும் இல்லை. பதிவு மூப்பு 5.12.11 வரை பதிவு செய்துள்ள அனைத்து மனு தாரர்களும் இந்த கல்வித்தகுதி மற்றும் பதிவு மூப்பு உள்ள மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக மனுதாரர்கள் மட்டும் தங்களது பதிவு விவரத்தை இன்று(வியாழக்கிழமை) காலை 11 மணியளவில் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை மற்றும் உரிய கல்விச்சான்றுகளுடன் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சரிபார்த்துக்கொள்ளலாம். 

இந்த தேதிக்கு பின்பு பெறப்படும் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் க.பெ.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...