நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Thursday, October 13, 2011

சவுதி அரேபியாவில் வேலை இருக்கிறது, முயற்சி செய்யுங்கள்
சவுதி அரேபியாவில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு கணக்காளர் தேவை ( Accountant).
குறைந்தது 3 வருடங்கள் சவுதி அரேபியாவில் வேலை செய்த அனுபவத்துடன் தற்போது சவுதியில் வசிப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பம் செய்ய வேண்டிய முகவரி - ansarigfc@gmail.com
 Greetings!

The person must have good qualification (BE, MBA, etc.) with at least 5 years of experience in the related field as follows:

CV Send to zafarzahir@gmail.com

JOB POSITION-1:  High Speed Broadband Expert (experience in sales and marketing of FTTH, VDSL and DSL)
JOB POSITION-2: Telecom Billing and Retention Expert
JOB POSITION-3: Triple Play and Quadruple Play Marketer and Sales Expert
JOB POSITION-4: Sales and Market Analyst (experience and sound skill in data mining, MS Office, Business Objects, etc.)

COMPUTER: Excellent skills in MS OFFICE especially excel and powerpoint
LANGAUGE: Excellent written and spoken English. Arabic knowledge (read, write and speak) will be a big plus.

All position offer excellent rumeneration and a renewable annual contract.

Please persons with relevant experience in the telecom domain ONLY may email their detailed CVs.

Best Regards

 From: MEN [mailto:info@mengnetwork.com]
To: MEN
Subject: Engineering Vacancies in Qatar

Salaam Dear brothers & sisters

Worley Parsons (Qatar) are looking to recruit the following and are prepared to offer family status for interested individuals.
  • Lead Instrument
  • Lead Mechanical (rotating and static)
  • Project Engineers
  • Project Managers
Those of you who are interested, please forward your CV/ resume to MEN.

________________________________
MUSLIM ENGINEERS NETWORK
Helping Muslim Professionals in Industry

MEN Discussion Board: http://mengnetwork.com/Forum/
Facebook Group: MEN___Muslim Engineers Network

  மதுரை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு இலவச வெப்சைட் ஏற்படுத்தித் தர மைக்ரோஇந்தியா கம்ப்யூட்டர் நிறுவனம் முன்வந்துள்ளது.
மாவட்டத்தில் பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர், ஆசிரியர்களுக்கு பயிற்சி, மாணவர்களுக்கு, இமெயில் வசதியை ஏற்படுத்தியது இந்நிறுவனம். தற்போது கல்லூரி மாணவர்களுக்கு இலவச வெப்சைட் வசதியை ஏற்படுத்தித் தர முன்வந்துள்ளது.
இலவச வெப்சைட்டில் மாணவர்கள் தங்கள் சுயவிபரங்கள்
(
பயோடேட்டா) பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். போட்டோக்கள், வீடியோ பதிவுகள்,சான்றிதழ்களை ஸ்கேன் செய்தும் பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் ஒரிஜினல் தொலைந்தாலும்கூட, அவற்றை எங்கிருந்தும் தேவைக்கேற்ப டவுன்லோடு செய்து நகலை பெற வசதி கிடைக்கும்.
மேலும் பல வெளிநாட்டு வெப்சைட்டுகள் மூலம் சம்பாதிக்கவும் வாய்ப்புள்ளதால், அதற்கும் இன்டர்நெட் பயிற்சி அளிக்கப்படும். இதுதவிர தற்காலத்திற்கு தேவையான ஆங்கில பேச்சுப் பயிற்சி, நெட் பாங்கிங், டிக்கெட் ரிசர்வேஷன் போன்றவற்றை மாணவர்கள் தானாகவே செய்யும் வகையில் பயிற்சி அளிக்கப்படும்.
மாணவர்கள் இணையதளத்தை பொறுத்தவரை அப்டேட் செய்யும் வகையில் அவர்களுக்கு இலவச பயிற்சியாகவே அளிக்கப்படும்.
மைக்ரோ இந்தியா அமைப்பின் இயக்குனர் நரேஷ் கூறியதாவது: இதில் சிறந்த மாணவர்களை கண்டறிந்து வேலைவாய்ப்பு வழங்கவும் திட்டம் உள்ளது. இன்டர்நெட்டை முறைப்படி பயன்படுத்த தெரிந்தால் எளிதாக சம்பாதிக்கவும் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அமெரிக்காவின் டாலருக்கு நிகரான இந்திய பணமதிப்பு வீழ்ச்சி அடைவதால், அமெரிக்க முதலீடு அதிகரிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் இன்டர்நெட்டை பயன்படுத்தி சம்பாதிக்கவும் வழி ஏற்படும்.
இதுபோன்ற பயிற்சிகளுக்கு அணுகும் கல்லூரிகளுக்கு சென்று பயிற்சியை துவக்க உள்ளோம். இயக்குனர், இளைஞர் வேலைவாய்ப்பு பயிற்சி அமைப்பு, 5, பைபாஸ் ரோடு, எஸ்.எஸ்.காலனி,மதுரை-16 என்ற முகவரியில் அணுகலாம். 94433-64567 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,என்றார்.
வேளாண் பல்கலையில் மல்டிமீடியா டிப்ளமோ படிப்பு
கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண் துறையில் நல்ல வேலை வாய்ப்புகளை பெறும் வகையில் மல்டிமீடியா டிப்ளமோ படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஒரு வருட கால மல்டிமீடியா டிப்ளமோ படிப்பில் சேர பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இது குறித்து வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் முருகேசபூபதி கூறுகையில், தற்போது துவக்கப்பட்டுள்ள மல்டிமீடியா டிப்ளமோ படிப்பு வாயிலாக 2டி, 3டி அனிமேஷன் நுட்பங்களை நுண்கலை மற்றும் வடிவமைப்புத் துறைகளில் தேர்ந்த வல்லுனர்களைக் கொண்டு இந்த படிப்புக்கான பாடங்கள் நடத்தப்படும் என்றார்.
இது குறித்து பல்கலைக்கழக திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்குநர் வள்ளுவபாரிதாசன் கூறும் போது, இதற்கான பாடத்திட்டம் அனைவரையும் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. புதுமை கண்ணோட்டத்துடன் அணுகக் கூடிய மாணவர்களுக்கு இப்படிப்பு பயனுள்ளதாக இருக்கும்.
2 பருவங்களைக் கொண்ட ஓராண்டு கால படிப்பில் ஒவ்வொரு பருவத்திலும் 40 பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பட்டயப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு இயக்குநர், திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வி இயக்ககம், வேளாண் பல்கலைக்கழகம், கோவை என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு கேட்டறியலாம் என்றார்.
மின்பகிர்மான மேலாண்மையில் சான்றிதழ் படிப்பு
எரிசக்தித்துறையில் வேலைவாய்ப்புகளுக்குப் பஞ்சமில்லை. பொறியியல் படிப்பை முடித்தவர்களுக்கு அவர்கள் சார்ந்த துறையில் மின்பகிர்மான மேலாண்மையில் ஆறுமாத மின்பகிர்மான சான்றிதழ் படிப்பு வழங்கப்படுகிறது.
இப்படிப்பை இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகம், எரிசக்தித்துறை அமைச்சகம், USAID-India, Poer Finance Corporation ஆகியவற்றுடன் இணைந்து Advanced Certificate in Power Distribution Management என்ற பெயரில் வழங்குகிறது. இதற்கான கட்டணம் 4,000 ரூபாய்.
இப்பாடத்திட்டம், மின்பகிர்மானம், எரிசக்தி மேலாண்மை தொடர்பான பொருள்களை உள்ளடக்கி அமைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு www.ignou.ac.in  என்ற இணையப் பக்கத்தை பார்வையிடலாம்.
 மார்க்கெட்டிங் ரிசர்ச் படித்தால் வேலை நிச்சயம்! 
தொழில்போட்டி மிகுந்த உலகில் வேலைவாய்ப்புக்கு என்றுமே குறைவில்லாத துறையாக மார்க்கெட்டிங் விளங்குகிறது. எந்தவொரு பொருளையும் சந்தைப்படுத்துதலும், விற்பனையை அதிகப்படுத்துதலுமே இத்துறையின் முதுகெலும்பாக விளங்குகிறது. மார்க்கெட்டிங் சம்பந்தமான இளங்கலை, முதுகலை மற்றும் டிப்ளமோ படிப்புகளை பல்வேறு கல்லூரிகளும், கல்வி நிறுவனங்களும் வழங்கி வருகின்றன. தற்போதுள்ள சூழ்நிலையில் கல்லூரி கல்வியை நிறைவு செய்த பலரும் மார்க்கெட்டிங் படிப்புகளை விரும்பி படிக்கின்றனர்.
இதில் ஒரு சிறப்பு பிரிவு படிப்பாக மார்க்கெட்டிங் ரிசர்ச் துறை உள்ளது. விற்பனைத்துறையில் ஏற்படும் சிக்கல்களை கண்டறிந்து அவற்றுக்கு தீர்வுகளை ஆராய்வதே மார்க்கெட்டிங் ரிசர்ச் படிப்பின் முக்கிய நோக்கம். வாங்கும் சக்தி படைத்த இலக்கு வாடிக்கையாளரை கண்டறிவது,நுகர்வோரின் தேவைகள் குறித்து ஆய்வு செய்வது புதிய, மேம்படுத்தப்பட்ட பொருட்களுக்கான தேவையை ஆய்வு செய்வது போட்டி தயாரிப்புகள் குறித்த தகவல்களை திரட்டுதல்  பொருட்களின் விலை, லாபத்தை முடிவு செய்வது, சரியான தகவலை, சரியான நேரத்தில், சரியான இடத்தில்,சரியான நபரிடம் கொண்டு சேர்ப்பது ஆகியவற்றுக்கு மார்கெட்டிங் ரிசர்ச் உதவுகிறது.
சிறிய, பெரிய, நடுத்தர நிறுவனங்களில் (தனியார் நிறுவனமோ, அரசு நிறுவனமோ) முக்கியமான தருணங்களில் முடிவெடுக்க இத்துறை சார்ந்த கல்வியறிவு மிகவும் உதவிகரமாக இருக்கும். விற்பனை தொடர்பான பிரச்னைகளை விஞ்ஞானபூர்வமாக ஆராய்ந்து முடிவெடுக்கவும் இப்படிப்பு உதவுகிறது.  புனேயில் உள்ள சிம்பயாசிஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட், ஜாம்ஷெட்பூரில் உள்ள சேவியர் லேபர் ரிலேஷன் இன்ஸ்டிடியூட் போன்ற முன்னணி கல்வி நிறுவனங்கள் மார்க்கெட்டிங் ரிசர்ச்சில் குறுகிய கால படிப்புகளை வழங்குகின்றன.
சிறந்த எதிர்காலத்தை அளிக்கும் மெடிக்கல் நானோ டெக்னாலஜி!
நானோ தொழில்நுட்பத்தின் மற்றுமோர் புரட்சி தான் மெடிக்கல் நானோ டெக்னாலஜி. இத்தொழில் நுட்பத்தின் மூலம் மனிதர்களின் உடல் நலத்தை மிகச் சிறந்த முறையில் பேணிப் பாதுகாக்கலாம். நானோ டெக்னாலஜி என்பது ஒரு பொருளின் அணுக்கள் மற்றும் மூலக் கூறுகளின் அளவை கட்டுப்படுத்துவது குறித்து படிப்பதாகும். ஒரு திண்மப் பொருளை, நானோ மீட்டர் (மிகச்சிறிய) அளவிற்கு கொண்டு செல்லும் போது, அந்த பொருள் அபரிமித மான ஆற்றலையும், சக்தியையும் பெறுகிறது. அதன்படி, உருவாக்கப் படும் அனைத்து சாதனங்களும் மிகுந்த ஆற்றலை உடையதாக இருக்கிறது.
நானோ தொழில்நுட்பம் மூலமாக உயிரியல் மண்டலங்களைக் கூட செயற்கையான முறையில் உருவாக்கலாம். நானோ டெக்னாலஜி மூலம் உருவாக்கப்படும் சாதனங்கள் அனைத்தும் எதிர் காலத் தில் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும் என்பதே உண்மை. இத்தொழில்நுட்பம் மருத்துவம், வேதியியல் மற்றும் சுற்றுப்புறச்சூழல், ஆற்றலை அளித்தல், தகவல் தொடர்பு, கனரக தொழிற்சாலைகள் மற்றும் உணவியல் என சகல துறைகளிலும் பயன்படுகிறது. இதன் அடிப்படையில்தான் தற்போது ஆராய்ச்சியும், புதிய புதிய படிப்புகளும் வந்து கொண்டேயிருக்கிறது.
மருத்துவ துறையில் நானோ: நுண்ணிய அளவிலான ரோபோ, சென்சார்கள், கேமரா மற் றும் இதர பல சாதனங்கள் ஆகியவற்றை கண்டறிந்து மருத்துவத்துறையில் பயன் படுத்துவது, உடலை துளை யிடாமல் சிகிச்சை அளிப் பது, நோயாளி உடலின் உட்புறத்தை பாதுகாத்து சிகிச்சை அளிப்பது மற்றும் தனிப்பட்ட செல்களை மட் டும் பாதுகாத்து சிகிச்சை அளிப்பது என பல்வேறு வகையான வருங்கால தொழில்நுட்பம் குறித்து இப்படிப்பில் (மெடிக்கல் நானோ டெக்னாலஜி) ஆய்வு செய்யப்படுகிறது.
மெடிக்கல் நானோ டெக் னாலஜி மூலமாக பல சாதனைகளை சொல்ல முடியும். உதாரணமாக நோயாளியின் உடலில், குறிப்பிட்ட பகுதியில்  நானோ அளவுடைய துகள் மூலமாக மருந்து பொருட்களை செலுத்தி குணமடையச் செய்யலாம். உயிரியல் மண்டலங்களில் உள்ள மூலக்கூறுகளை கண்காணித்தல், புதிதாக உருவாக்குதல், சரி செய் தல், கட்டுப்படுத்துதல் என அனைத்து செயல் முறைக ளையும் மெடிக்கல் நானோ டெக்னாலஜி மூலம் மேற்கொள்ளலாம்.
எம்.டெக்., மெடிக்கல் நானோ டெக்னாலஜி படிப்பானது, 5 வருட ஒருங்கிணைந்த படிப்பாக தஞ்சா வூர் சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் கற்றுத் தரப்படுகிறது.
கல்வித் தகுதி: பிளஸ் 2. மாணவர் சேர்க்கை இடங் கள், கல்விக்கட்டணம் உள் ளிட்ட பிற விவரங்களை www.sastra.edu என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இப்படிப்பை முடித்தவர்களுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல தரப்பட்ட ஆய்வுக் கூடங்களில் வேலைவாய்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது. அறிவியல்  திரைப் படங்களில் காட்டப்படுவது போன்ற கற்பனைக்கும் எட் டாத விஷயங்கள் மற்றும் சாதனங்கள் உள்ளிட்டவை, நானோ தொழில்நுட்பம் மூலம் நிஜத்தில் நடக்கவும் சாத்தியம் இருக்கிறது. நானோ தொழில் நுட்பதுறை தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது.
வேலை வாய்ப்பை அள்ளித்தரும் ஓஷன் இன்ஜினியரிங் படிப்பு!
கடலில் இயங்கும் பொருட்களை வடிவமைப்பது, பயன்படுத்துவது தொடர்பாக ஓஷன் இன்ஜினியரிங்கில் கற்றுத்தருகின்றனர். படகு, கப்பல், நீர்மூழ்கி வடிவமைப்பில் இவர் கள் முக்கிய பங்காற்றுகின்றனர். உப்புத் தன்மை, நீரின் அழுத்தம், கடல் அலை களை தாக்குப் பிடிக்கும் வகையில் வடிவமைக்க கற்றுத்தருகின்றனர். வழக்கமான சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்குடன் கடல் சார்ந்த அறிவியல் மற்றும் வடிவமைப்பு குறித்தும் பாடங்கள் உள்ளன.
தெர்மோ டைனமிக்ஸ், புளூயிட் மெக்கானிக்ஸ், எலெக்ட்ரிக்கல் சர்க்யூட் பற்றியும் கற்றுக்கொடுக்கின்றனர். டேட்டா அனாலிசிஸ், ஓஷன் இன்ஸ்ட்ரூமென்டேஷன், அண்டர் வாட்டர் அக்குஸ்டிக்ஸ், மரைன் ஹைட்ரோ டைனமிக்ஸ், ஓஷனோகிராபி, மரைன் ஜியோ மெக்கானிக்ஸ் போன்ற பாடங்கள் நடத்தப்படுகின்றன. துறைமுகங்கள் வடிவமைக்கவும், கடலில் கட்டுமானங்கள் அமைக்கவும் ஓஷன் இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டியது அவசியம்.
ஓஷன் இன்ஜினியரிங்  படித்தவர்களுக்கு கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள்,கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் உள்ளன. கடல் அரிப்பு, கடற்கரை எண்ணெய் வளம்,சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புவி வெப்பமாற்றம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கடல் போக்குவரத்து தொடர்பான ஆராய்ச்சி பணிகளிலும் ஈடுபடலாம்.
இந்தியாவில் ஓஷன் டெக்னாலஜி கல்வியை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி-சென்னைஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி-காரக்பூர், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி-கோழிக்கோடு, கொச் சின் யுனிவர்சிட்டி ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி- கொச்சி, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - சூரத்கல் ஆகிய கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன.
ஐஐஎஸ்டியில் படித்தால் விண்வெளித்துறையில் ஜொலிக்கலாம்!
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் டெக்னாலஜி கல்வி நிறுவனமானது ஆசியாவிலேயே முதல் ஸ்பேஸ் இன்ஸ்டிடியூட் என்ற பெருமையை பெற்றுள்ளது. உலகிலேயே விண்வெளி அறிவியல்,தொழில்நுட்பம், தகவல்கள் குறித்து இள நிலை, முது நிலை, பிஎச்.டி. பட்டப்படிப்பு களை இந்த கல்வி நிறுவனம் வழங்குகிறது. விண்வெளி தொடர்பான விஷயங்களில் ஆர்வமுடைய இந்திய இளைஞர்களை ஊக்குவித்து, விண்வெளி துறை விஞ்ஞானியாகவோ, பொறியாளராகவோ உருவாக்குவதை இந்தியன் விண்வெளி ஆராயச்சிக் கழகம் நோக்கமாக கொண்டுள்ளது. பிளஸ் 2முடித்த மாணவர்களுக்கு, ஐஐஎஸ்டி. பிடெக். பட்டப்படிப்பில் 3 பாடப்பிரிவுகள் வழங்கப்படுகிறது.
பிடெக். பிசிக்கல் சயின்ஸ்: விண்வெளித் துறையில் பணியாற்றத் தேவையான ஆஸ்ட்ரோனமி,ஆஸ்ட்ரோபிசிக்ஸ், ரிமோட் சென்சிங், எர்த் சிஸ்டம் சயின்ஸ் மற்றும் கெமிக்கல் சிஸ்டம்ஸ் ஆகிய துறைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பிடெக். ஏவியோனிக்ஸ் ப்ரோக்ராம்: பொதுவாக இந்த பாடப்பிரிவில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ்,கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் போன்ற துறைகள் கற்பிக்கப்படுகிறது. இத்துறை மாணவர்களுக்கு,அடிப்படை அறிவியல், ஏரோஸ்பேஸ் சிஸ்டம், பொருளாதாரம், மேலாண்மை மற்றும் இலக்கியத் துறைகளில் கல்வி அளிக்கப்படுகிறது.
பி.டெக். ஏரோஸ்பேஸ் பொறியியல்: பிளைட் மெக்கானிக்ஸ், தியரி ஆப் மெக்கானிக்ஸ், ஏரோ ஸ்பேஸ் ஸ்ட்ரக்சர், மேனுபேக்சரிங் புராசஸ், ஆட்டோமெடிக் கன்ட்ரோல் ஆகிய துறைகள் கற்பிக்கப்படுகிறது. இத்துறையை தேர்வு செய்யும் மாணவர்களுக்கு, ஏவுகணைகள், ராக்கெட்டுகள்,விமானம், செயற்கைகோள் ஏவுகணை போன்றவற்றை தயாரிப்பது, அவற்றில் பணியாற்றுவதற்கு ஏற்ற வகையில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
FYI: Forward to Friends please....
By Moorthy. Gதமிழ்நாடு இ.எஸ்.ஐ. கழகத்தில் பகுதிநேர வேலை

 தமிழ்நாட்டில் இயங்கி வரும் எம்ப்ளாயி ஸ்டேட் இன்ஸ்யூரன்ஸ் கழகத்தில் பகுதி நேரமாக பணி செய்ய தகுதியாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: Part Time Specialist
1. Mesicine மற்றும் Unani பிரிவுக்கு வேலூரில் இயங்கி வரும் ஐ.எஸ்.ஐ. மருத்துவமனையில் நேர்முகத் தேர்வு நடைபெறும்.
நேர்முகத் தேர்வு நாள்: 13.10.2011
2. Medicine, Surgery, Orthopedic, Thoracic Medicine, Anaesthesia, Nephrology, Pathology, Radiology, Bio-Chemistry, Dental, Homeopathy, Unaniபிரிவுக்கு கோவையில் இயங்கி வரும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் நேர்முகத் தேர்வு நடைபெறும்.
நேர்முகத் தேர்வு நாள்: 14.10.2011
3. Orthopedic, Ophthalmology, ThoracicMed, Anaesthesia, Dental, Radiology பிரிவுக்கு சேலத்தில் இயங்கி வரும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் நேர்முகத் தேர்வு நடைபெறும்.
நேர்முகத் தேர்வு நாள்: 18.10.2011
4. Medicine, Surgery, Opthalmology, Thoracic Medicine, Dental Radiology, Homeopathy பிரிவுக்கு மதுரையில் இயங்கி வரும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் நேர்முகத் தேர்வு நடைபெறும்.
நேர்முகத் தேர்வு: 20.10.2011.
மேலும் விவரங்கள் அறிய எம்ப்ளாயி ஸ்டேட் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் 143, M்டெர்லிங் சாலை,நுங்கம்பாக்கம்சென்னை. தொலைபேசி தொடர்புக்கு 044- 28214457, 28267080. 
இணையதள விலாசம்: www.esichennai.org
இலவசமாக M.E /M.Tech படிக்க GATE நுழைவு தேர்வு 

GATE- என்ற நுழைவு தேர்வு இந்தியாவில் உள்ள IIT, NIT, அண்ணா பல்கலை கழகம் போன்ற மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் M.E/M.Techபடிக்க மத்திய அரசால் நடத்தப்படும் தேர்வாகும். இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு மாதம் ரூ.5,000 முதல் ரூ.9,000 வரை வழங்குகின்றது. இந்த உதவி தொகை மூலம் படிப்பை இலவசமாக படிப்பது மட்டும் இல்லாமல் நமது சிறிய தேவைகளையும் (ஹாஸ்டல், உணவு, புத்தகம்) நிறைவேற்றிகொள்ளலாம். இதில் முஸ்லீம்களையும் சேர்த்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடும் உள்ளது. தேர்வை பற்றிய விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  

இந்தியாவில் உயர்ந்த தொழில் நுட்ப நிறுவனக்களான IIT, NIT, டெல்லி பல்கலை கழகம் போன்ற மத்திய பல்கலை கழகங்கள், இதர அரசு பல்கலை கழகங்கள், நிகர் நிலை பல்கலை கழகங்கள், மற்றும் இதர தனியார் உயர் கல்வி நிறுவங்களில் M.E/M.Tech, Phd படிக்க GATE என்ற நுழைவு தேர்வை மத்திய அரசு நடத்துகின்றது, இதில் நாம் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் எடுப்பதின் மூலம் இந்தியாவின் மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் பணத்தை வாங்கிகொண்டு M.E/M.Tech/Phd படிக்க முடியும் (கல்லூரிக்கேற்ப அரசு மாதம் ரூ.5,000 முதல் ரூ.9,000 வரை வழங்குகின்றது). இந்த கல்வி உதவி தொகையை வாங்குவது மிகவும் எளிது. நீங்கள் குறிப்பிடும் வங்கி கணக்கு எண்ணுக்கு மாதமாதம் பணம் வந்து சேர்ந்துவிடும். இது மட்டும் இல்லை இந்த உயர்கல்வி நிறுவங்களில் கல்வி தரம் உயர்ந்ததாக இருக்கும் , இங்கு படிப்பவர்களுக்கு வளாக தேர்வு (campus interview) மூலம் மிக எளிதில் வேலைகிடைகின்றது. இறுதி ஆண்டு படிக்கும் போதே அதிக சம்பளத்தில் படித்ததற்க்கு ஏற்ப நல்ல வேலைகிடைக்கின்றது. மாதம் இலட்சங்களை வாங்கிகொண்டு வெளி நாட்டில் Phd படிக்க வாய்ப்புகளும் கிடைக்கின்றன 

இந்த தேர்வை எழுதும் முஸ்லீம் மாணவரகளின் எண்ணிக்கை மிக மிக குறைவு, காரணம், இந்த நுழைவு தேர்வுகளை பற்றி முஸ்லீம் சமுதாயம் அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் தான், உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு எந்த தேர்வுகள் கடினமில்லை. தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற கட்டுரை நமது www.tntj.netஇணையதளத்தில் உள்ளது. 

GATE நுழைவு தேர்வை பற்றிய விபரம் 

விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி : அக்டோபர் 17

விண்ணப்பங்கள் ஆன்லைனில் கிடைக்கும்:http://www.iitk.ac.in/gate/gate2012/gateonline.php

விண்ணப்பத்தின் விலை : ரூ.1,000 


தேர்வு எழுத தகுதியான மாணவர்கள் :

1. B.E/B.Tech எல்ல பொறியியல் படிப்புகள் படித்து முடித்தவர்கள் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்கள்.

2. AMIE மூலம் பொறியியல் படித்தவர்கள்

3. M.Sc கணிதம்/ புள்ளியியல்/ அறிவியல்( இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் etc…) மற்றும் MCA படித்தவர்கள் 

தேர்வு நடைபெறும் தேதி : ஜனவரி 29 மற்றும் பிப்ரவரி 12,

தேர்வு முடிவுகள் வெளிவரும் தேதி : மார்ச் 15. 

இந்த தேர்வை பற்றிய விபரங்கள்http://www.iitk.ac.in/gate/gate2012/index.php  மேலும் அறிய sithiqu.mtech@gmail.com என்ற ஈ - மெயில் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள் 

-S.சி்த்தீக்.M.Tech

No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...