நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Thursday, December 8, 2011

PT GROUP - வேலை வாய்ப்புகள் , ஐ.ஏ.எஸ்., தேர்வுகளுக்கு இலவச பயிற்சி


அஸ்ஸலாமு அலைக்கும்,,,

 
 
மும்பை BSNL நிறுவனத்தில் JTO பணி
 
மும்பை BSNL அலுவலகத்தில் காலியாக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான கீழ்வரும் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. பணியின் பெயர்: Junior Telecom Operator (Telecom)
காலியிடங்கள்: 29 ( எலும்புசார் ஊனமுற்றோர் - 12, காதுகேளாதோர் -17)
சம்பளம்: ரூ.16,400 - 40,200
கல்வித்தகுதி:  டெலிகம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ், ரேடியோ, கம்ப்யூட்டர், எலக்ட்ரிக்கல், தகவல் தொழிற்நுட்பம்இன்ஸ்ட்ரூமென்டேஷனில் பாடப்பிரிவுகளில் BE/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர்: JTO (Electrical)
காலியிடங்கள்: 2 (அனைத்து வகையான ஊனமுற்றோரும் விண்ணப்பிக்கலாம்.
எலக்ட்ரிக்கல் பாடத்தில்  BE/B.Tech  பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இறுதியாண்டு தேர்வு முடிவுக்கு காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். இவர்கள் 31.12.2011 தேதிக்குள் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 12.12.2011 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளில் பொதுப்பிரிவினருக்கு 10 வருடங்களும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 15 வருடங்களும், ஒபிசி பிரிவினருக்கு 13 வருடங்களும் உச்ச வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
எழுத்து தேர்வு நடைபெறும் நாள்: 19.02.2012
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
DGM(HR &Admn)
O/o, TheCGM Telecom BSNL,
Maharastra Telecom Circle,
Admn.Bldg, 3rd Floor, B-Wing, JUhu Road,
Santacruz (West), Mumbai - 400054.
மேலும் விவரங்களுக்கு www.maharashtra.bsnl.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 12.12.2011

பொறியியல் பட்டதாரிகளுக்கு BSNL நிறுவனத்தில் JTO பணி

BSNL கேரள மண்டலத்தில் ஜூனியர் டெலிகாம் ஆப்பரேட்டர் பணிக்கு ஏற்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் சிறப்பு காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: Junior Telecom Operator (Telecom)
காலியிடங்கள்: Telecom - 6, PWD-(LI)-1, HI-5
ஜூனியர் டெலிகாம் ஆப்ரேட்டர் (எலக்ட்ரிக்கல்)-2
சம்பளம்: ரூ.16,400 - 40,200
தகுதி: ஜூனியர் டெலிகாம் ஆப்ரேட்டர்(டெலிகாம்) டெலிகம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ், ரேடியோ, கம்ப்யூட்டர், எலக்ட்ரிக்கல், இன்டர்மேஷன், டெக்னாலஜி, இன்ஸ்ட்ரூமென்டேஷனில் BE/B.Tech படித்திருக்க வேண்டும்.
ஜூனியர் டெலிகாம் ஆப்ரேட்டர் (எலக்ட்ரிக்கல்) எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் BE/B.Tech  தகுதி பெற்றிருக்க வேண்டும்.
இறுதியாண்டு தேர்வு முடிவுக்கு காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். இவர்கள் 31.12.2011 தேதிக்குள் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 12.12.2011 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளில் பொதுப்பிரிவினருக்கு 10 வருடங்களும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 15 வருடங்களும், ஒபிசி பிரிவினருக்கு 13 வருடங்களும் உச்ச வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு நாள்: 19.02.2012
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Asst.Manager(Rectt), II Floor,
O/o Chief General Manager,
Telecom, BSNL Kerala Circle,
PMG Junctiron, Trivandrum - 695033
மேலும் விவரங்களுக்கு www.keralatelecom.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 12.12.2011

 
 
ஐ.ஏ.எஸ்., தேர்வுகளுக்கு இலவச பயிற்சி
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வுகளுக்கான இலவச பயிற்சிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சென்னை, ராயப்பேட்டையில் உள்ள புது கல்லூரி, சமூக, பொருளாதார, கல்வி மேம்பாட்டு அறக்கட்டளையுடன் இணைந்து, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ் மற்றும் அரசுசார் பணிகளுக்கான தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கி வருகிறது. அடுத்தாண்டு மே மாதம் நடக்கும், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., முதல்நிலை தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், வரும் 10ம் தேதி, கல்லூரி வளாகத்தில் துவங்குகிறது.


இதுகுறித்து, ஒருங்கிணைப்பாளர் ராஜாராமன் கூறும்போது, ""இவ்வகுப்புகள், சனிக்கிழமை மாலை 6 முதல், இரவு 8 மணி வரையும், ஞாயிறுக்கிழமை மாலை 4 முதல் இரவு 8 மணி வரையும் நடைபெறும். இதில் பங்குபெற, ஏழை, எளிய மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு முன்னுரிமை தரப்படும். சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இப்பயிற்சியை பெறலாம். விண்ணப்பம் உள்ளிட்ட விவரங்களை, 044 - 2835 0297, 81488 94099 ஆகிய எண்களில் பெறலாம்,'' என்றார்.
 
நிரந்தரப் பணி நிலை கொண்ட டெக்னிகல் கிராஜூவேட் படிப்புக்கான சேர்க்கை அறிவிப்பு 
 
இந்தியாவின் முப்படைகளில் ஒன்றான இந்திய ராணுவம் அதன் திறமைகளுக்காக உலகளவில் அறியப்படுகிறது. இந்த படையில் ஜூலை 2012 முதல் நிரந்தரப் பணி நிலை கொண்ட டெக்னிகல் கிராஜூவேட் படிப்புக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
பிரிவுகள்: இந்திய ராணுவத்தின் டெக்னிகல் கிராஜூவேட் படிப்பில் சிவில் பிரிவில் 27 இடங்களும், எலக்ட்ரிகல் பிரிவில் 8 இடங்களும், மெக்கானிகல் பிரிவில் 8 இடங்களும், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் பிரிபில் ஒரு இடமும், புரொடக்சன் பிரிவில் 2 இடங்களும், ரப்பர் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பிரிவுகளில் முறையே ஒன்று மற்றும் 4 இடங்களும், கம்யூனிகேஷன் பிரிவில் 6 இடங்களும், ஆர்கிடெக்சர் பிரிவில் 2 இடங்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் ஓரு இடமும், எம்.ஏ., பிரிவு, முது நிலை பட்டப்படிப்பு, டெய்ரி அக்ரிகல்சர் ஆகிய பிரிவுகளில் தலா இரண்டு இடங்களும் உள்ளன.
தேவைகள்: இந்திய ராணுவத்தின் இன்ஜினியரிங் பிரிவிற்கு விண்ணப்பிப்பவர்கள் 20 முதல் 27 வயதுக்கு உட்பட்டவராகவும், ஏ.இ.சி., பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 23 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவராகவும், ஆர்மி பார்ம்ஸ் பிரிவிற்கு விண்ணப்பிப்பவர்கள் 20 முதல் 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
இந்தப் படிப்புக்கு எஸ்.எஸ்.பீ., நேர்காணல் மூலமாக தேர்ச்சி இருக்கும். இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்க தொடர்புடைய துறையில் இள நிலை பட்டப் படிப்பு தேவை. இவற்றுடன் சில குறைந்த பட்ச உடல் தகுதிகளும் கட்டாயத் தேவையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முழுமையான தகவலுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
இதர விபரங்கள்: இந்திய ராணுவத்தின் டெக்னிகல் கிராஜூவேட் படிப்பிற்கு ஆன்-லைன் முறையிலேயே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் கிடைக்கும் பிரின்ட் அவுட்டுடன் உரிய இணையங்களை இணைத்து பின் வரும் முகவரிக்கு 21.12.2011க்குள் கிடைக்குமாறு விண்ணப்பங்கள் சென்றடையுமாறு அனுப்ப வேண்டும். முழு விபரங்கள் அறிய கட்டாயம் இணையதளத்தைப் பார்க்கவும்.
முகவரி:
Additonal Directorate General of
Recruiting (Rtg6),
TGC Section, West Block3,
R.K. Puram, 
New Delhi 110066.
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் : 21.12.2011
இணையதள முகவரி : http://joinindianarmy.nic.in/Home.aspx 
 
ஹைட்ரோ எலக்ட்ரிக் திட்டத்தில் வேலை வாய்ப்பு
உத்தரப் பிரதேச மாநிலத்தின் மூலம் 1972ல் டெஹ்ரி டேம் அண்டு ஹைட்ரோ எலக்ட்ரிக் புராஜக்ட் எனப்படும் டி.எச்.டி.சி., நிறுவப்பட்டது. இந்த மையத்தின் மூலம் 600 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் விதத்தில் இது துவங்கப்பட்டது. தற்போது இந்த மையம் ஆயிரம் மெகா வாட்டுக்கும் அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகிறது. இந்த மையத்தில் இன்ஜினியரிங் மற்றும் எக்சிகியூடிவ் பிரிவுகளில் டிரெய்னிக்களை
பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரிவுகள்: இன்ஜினியரிங் டிரெய்னி பிரிவில் எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 15 காலி இடங்களும், எலக்ட்ரானிக் அண்டு கம்யூனிகேஷன் பிரிவில் 5 காலி இடங்களும், மெக்கானிகல் பிரிவில் 5 காலி இடங்களும், இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் பிரிவில் 2 காலி இடங்களும் சிவில் பிரிவில் 5 காலி இடங்களும், ஜியாலஜி பிரிவில் 4 காலி இடங்களும் நிரப்பப்பட உள்ளன. எக்ஸிக்யூடிவ் பிரிவான எச்.ஆர்.,ல் 3 காலி இடங்கள் உள்ளன.
தேவைகள்: டி.எச்.டி.சி., நிறுவனத்தின் மேற்கண்ட பகுதிகளுக்கு பிரிவுக்கு ஏற்றபடி பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். இவர்கள் குறைந்த பட்சம் 65 சதவிகித மதிப்பெண்களைப் பட்டப் படிப்பிலும், ப்ளஸ்டூ மற்றும் பத்தாம் வகுப்பிலும் பெற்றிருக்க வேண்டும். 01.01.2012 அன்று 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். டில்லியில் நடைபெற உள்ள எழுத்துத் தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும்.
இதர தகவல்கள்: இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.500/-க்கான டி.டி.,யை THDC India Ltd., என்ற பெயரில் ஸ்டேட் வங்கி அல்லது ஏதாவது ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரிஷிகேஷில் மாற்றத்தக்கதாக எடுக்க வேண்டும். விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
ஆன்-லைனில் பதிவு செய்த பின்னர் கிடைக்கும் ரெஜிஸ்ட்ரேஷன் சிலிப்புடன் உரிய ஆவணங்களை இணைத்து பின் வரும் முகவரிக்கு 17.12.2012க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களைப் பெற இணையதளத்தைப் பார்க்கவும்.
முகவரி:
The Advertiser,
THDC India Ltd.,
PO Box No:&9248,
Krishna Nagar, Head Post Office,
Delhi 110051.
ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் : 10.12.2011
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் : 17.12.2011
இணையதள முகவரி : http://thdc.gov.in 
 
துணை ராணுவப் பிரிவில் பணிவாய்ப்பு
 
இமயமலையில் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பேரழிவுகளின் போது ஐ.டி.பீ.பி., எனப்படும் இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்பு காவல் படையே முதலில் களம் இறங்குகிறது.
அடிப்படையில் இந்தப் படையானது மலையேறும் பயிற்சி பெற்ற படையாகும். இதில் பணிபுரிவோரும் மலையேற்றம் மற்றும் ஸ்கையிங் இவற்றில் பயிற்சி பெற்றவர் ஆவர். இந்தப் படையில் பார்மஸிஸ்ட் பிரிவில் உதவி துணை ஆய்வாளர்கள் 34 பேரைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த இடங்களுக்கு அரசு நிபந்தனைகளுக்கு ஏற்ப இட ஒதுக்கீடும் உள்ளன.
தேவைகள்: ஐ.டி.பீ.பி.,யின் பார்மஸிஸ்ட் பிரிவு உதவி துணை ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 20 வயது நிரம்பியவராகவும் 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். பிளஸ் 2விற்கு இணையான படிப்பை உயிரியல், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடங்களுடன் முடித்திருக்க வேண்டும். இதன் பின்னர் ஏதாவது ஒரு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலமாக பார்மஸி பிரிவில் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தியாவிலும் வேறு எந்த நாட்டிலும் பணி புரியத் தயாராக இருக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு மூலமாக இந்த இடங்கள் நிரப்பப்படும். இந்தப் பதவிக்கு சில குறைந்த பட்ச உடல் தகுதிகளும் கட்டாயத் தேவைகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. உயரம் குறைந்த பட்சம் 170 செ.மீ.,யும் இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும். அதே போல் குறைந்த பட்சம் 85 செ.மீ., மார்பளவும், 5 செ.மீ., விரிவடையும் தன்மையும் பெற்றிருக்க வேண்டும். இதில் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு விதிவிலக்கும் உள்ளது. தகவலுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
இதர விபரங்கள்: இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையின் பார்மஸிஸ்ட் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.50/-க்கான வங்கி டி.டி.,யை Commandant Bose Hospital, ITஆக என்ற பெயரில் எடுத்து அனுப்ப வேண்டும். பரிந்துரை செய்யப்பட்ட படிவமாதிரியில் விண்ணப்பங்களை நிரப்பி உரிய ஆவணங்களை இணைத்து 01.01.2012க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் : 01.01.2012
இணையதள முகவரி : http://itbp.gov.in 
*       

---------- Forwarded message ---------- 

சென்னை-துபாய் விமான கட்டணம் 7400/- மட்டும்

அல்-ஸஃபா டிராவல்ஸ் திருச்சி
போன்: 0431-4000256
செல்: 9442615850


Thanking You,
With Regards

For: Al-Safa Travels
       D. Ajmal Khan
       Mobile:             0091-9442615850      
       Phone:             0091-431-4000256      
 

 
--





No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...