நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Wednesday, November 10, 2010

இராணுவத்தில் சேர்வதற்க்கான நுழைவு தேர்வு

இந்திய ராணுவத்தின் தரை படை (Army), கப்பல் படை (Navy), விமான படையில் (Air Force ) சேருவதற்க்கான நுழைவு தேர்வு "NDA & NA Exams" அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்க உள்ளது இன்ஷா அல்லாஹ். அதற்க்கான விண்ணப்பம் தற்போது விணியோகிக்கப்பட்டு வருகின்றது. விண்ணப்பத்தை சமர்பிக்க கடைசி தேதி நவம்பர் 15 ஆகும். இந்த தேர்வு  எழுத +2 வரை படித்திருந்தால் போதும்.
 
தேர்வை பற்றிய விபரம்:
 
கல்வி தகுதி : +2 அல்லது அதற்க்கு இனையான படிப்பு (10th + Diploma)
வயது வரம்பு : ஜனவரி 1993-லிருந்து ஜூலை 1995-க்குள் பிறந்திருக்க வேண்டும். (17 முதல் 19-க்குள் இருக்க வேண்டும்)
விண்ணப்பம் கிடைக்கும் இடம் : அனைத்து தபால் நிலையங்கள், தபால் நிலையத்தில் விண்ணப்பம் கிடைக்க வில்லை என்றால் 011-23389366 இந்த எண்ணிற்க்கு புகார் தெரிவிக்கலாம்.
விண்ணப்பத்தின் விலை: ரூ.20.
தேர்வு கட்டணம்: ரூ.50. தேர்வு கட்டணத்தை "Central Recruitment Stamp" ஸ்டாம்பாக செலுத்த வேண்டும். இது போஸ்ட் ஆபிஸில் கிடைக்கும். போஸ்டல் ஸ்டாம்ப் ஒட்ட கூடாது "Central Recruitment Stamp"  தான் ஒட்ட வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி : Controller of Examinations, Union Public Service Commission, Dholpur House, Shahjahan Road, New Delhi - 110069
விண்ணப்பத்தை அனுப்ப கடைசி நாள் : நவம்பர் 15 (15-ஆம் தேதி டெல்லி சென்றடைய, இரண்டு தினங்களுக்கு முன்னதாகவே விண்ணப்பத்தை அனுப்பவும்).
 
மேலும் விபரங்கள் http://www.upsc.gov.in/exams/notifications/nda1-2011/indx.htm இந்த இணையதளத்தில் உள்ளது.
 
இந்த தேர்வுக்கு தயாராவது எப்படி?

இது வருட வருடம் நடக்கும் தேர்வாகும். எனவே கடந்த 5 ஆண்டு கேள்விதாள்களை பார்த்தால் எந்த பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்டுகின்றது என அறிந்து கொள்ளலாம். அந்த பாட பகுதிகளை நன்றாக ஆராய்ந்து படித்தாலே போதும். மேலும் CBSC-யின் 10-ஆம் மற்றும் +2 ஆம் வகுப்பு புத்தகங்கள் வாங்கிபடித்தால் இது போன்ற தேசிய தேர்வுகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும். இந்த கேள்விதாள்கள், புத்தகங்கள் முக்கிய புத்தக கடைகளில் கிடைக்கும். குறிப்பாக சென்னை மூர்மார்க்கெட் பகுதியில் உள்ள புத்தக கடைகளில் கிடைக்கும். மேலும் பொதுவாக தேர்வுகளுக்கு எவ்வாறு படிக்க வேண்டும் என்ற கட்டுரை  tntj.net (http://www.tntj.net/மாணவர்-பகுதி/கல்வி-வழிகாட்டி/தேர்வில்-அதிக-மதிப்பெண்/) இணையதளத்தில் உள்ளது. இதில் எவ்வாறு படிப்பது என குறிப்பிடபட்டு இருக்கும்.
 
மேலும் இது சம்மந்தமாக மேலதிக விளக்கம் தேவைபடும் மாணவர்கள் இந்த மெயில் ஐடியில் sithiqu.mtech@gmail.com தொடர்புகொள்ளவும்
 
தகவல்
S.சித்தீக்.M.Tech

1 comment:

  1. The article written by you very good, I like it very much.Cheap Montbrillant Breitling Watches

    I will keep your new article.

    ReplyDelete

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...