சென்னை, நவ. 3: புதுக்கோட்டை மாவட்டம் புனல்குளத்தில் நவம்பர் 13, 14-ல் மெகா வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து மத்திய அரசின் தொழில் பழகுநர் பயிற்சி வாரியத்தின் தென் மண்டல இயக்குநர் ஏ. அய்யாக்கண்ணு, கிங்ஸ் பொறியியல் கல்லூரி முதல்வர் வி. ஆறுமுகம் ஆகியோர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
மத்திய அரசின் தொழில் பழகுநர் பயிற்சி வாரியம் சார்பில், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே புனல்குளம் கிராமத்தில் உள்ள கிங்க்ஸ் பொறியியல் கல்லூரி வளாகத்தில் மெகா வேலைவாய்ப்பு முகாம் நவம்பர் 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறும். இந்த முகாமில் தேர்வு செய்யப்படுவோருக்கு காக்னிசன்ட் நிறுவனம் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளது.
இதில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பி.இ, பி.டெக், எம்.இ., எம்.டெக்., மற்றும் எம்.சி.ஏ. பட்டதாரி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.
13-ம் தேதி எழுத்து தேர்வுகளும், 14-ம் தேதி தொழில்நுட்பத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும். இதைத் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டோருக்கு உடனடியாக பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். தேர்வு செய்யப்படுவோருக்கு ஆண்டு ஊதியமாக ரூ. 3 லட்சம் வரை வழங்கப்படும். இந்த முகாமில் பங்கேற்க பதிவு கட்டணம் எதுவும் இல்லை.
10-ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை 60 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பண்களுடன் முழு நேர பி.இ. படிப்பில் 2010-ம் ஆண்டில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
காக்னிசன்ட் நிறுவனம் நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் கடந்த 6 மாதங்களுக்குள் பங்கேற்காதவர்களாக இருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வில் பங்கேற்கும் மாணவர், மாணவிகளுடன் உதவியாளராக வரும் ஒரு நபருக்கு கல்லூரி வளாகத்திலேயே தங்குமிட வசதி செய்யப்பட்டுள்ளது
இவர்களுக்கு தஞ்சாவூர் மற்றும் கந்தர்வக்கோட்டை ஆகிய இடங்களில் இருந்து கல்லூரி நிர்வாகமே 12 பஸ் சேவைகளை இலவசமாக நடத்த உள்ளது.
இந்த முகாமில் பங்கேற்க, ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். இதற்கான இணையதள முகவரி:
http:careers.cognizant.com
No comments:
Post a Comment
மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்