நவீன தொழில்நுட்ப யுகத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் பெருகி வருகின்றன. இதுதொடர்பாக தனியார் அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிவித்திருப்பதாவது, சைபர் குற்றங்கள் தினந்தோறும் அதிகரித்து வருவதாகவும் இதன் காரணமாக சைபர் கிரைம் தொடர்பான வழக்குகள் அதிகரித்து வருகின்றன என்றும் இவற்றை விசாரிக்க அதிகளவிலான திறமையான பணியாளர்கள் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துறையில் தனியார் பங்களிப்பு பெருமளவில் தேவைப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். சைபர் கிரைம் குற்றங்களை பொறுத்தமட்டில் தேவையான தொழில்நுட்ப கருவிகளை வாங்க பெரும் முதலீடுகள் தேவைப்படுவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கர்நாடகா போன்ற மாநிலங்களில் நாஸ்காம் போன்ற அமைப்புகள் பெருமளவில் சைபர் கிரைம் துறையில் உதவிகளை வழங்கி வருவதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சைபர் கிரைம் தொடர்பான குற்றங்களை விசாரிக்க பெருமளவிலான பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, இந்த துறை விரிவாக்கப்பட வேண்டிய அவசியத்தை பல மாநிலங்கள் தற்போது உணர்ந்துள்ளன. இதனால் சைபர் கிரைம் துறையில் நிச்சயமாக ஏராளமாக புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்