நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Tuesday, January 11, 2011

Walk-in Interview (Software Support Engineer)


Hi,
. We have an opening for Software Support Engineer. Pls. find below the job description.
1. Any Graduation / Diploma Holders
2. Freshers or 6 months to 1 year experience
3. Excellent Communication skill
4. 2 wheeler is must
5. Job location: Chennai
6. Only Male Candidates can apply
Interested candidates please walk-in with your updated resume from 11/Jan/11 - 13/Jan/11(Tuesday to Thursday) between 10 A.M - 6 P.M in the below mentioned venue
Thanks and Regards
Chitra Srinivasan
Sr. Executive - HR
Fourth Dimension Technologies Pvt. Ltd.
Bali Towers, 5th Floor, 1, Abdul Razack Street
Anna Salai, Saidapet, Chennai 600 015 (Tamilnadu)
Land Mark: Next to Panagal Maligai
Direct Line: 91 44 2430 5453
Tel.: 91 44 24305400 / Fax: 91 44 2434 3221
Web: www.fourdtech.co.in / www.fourdtech.com
www.4dchampagne.in

 

Monday, January 10, 2011

நீங்களும் கலெக்டர் ஆகலாம்...வெற்றி பெறுவதற்கான அடிப்படை விஷயம் தொடர்ச்சியான கடின உழைப்பு

ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். ஐ.எஃப்.எஸ். போன்ற அரசு உயர் பணிகளுக்காக நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வு முறைகளை அறிந்து கொள்ளும் முன் ஒரு செய்தி. இத்தேர்வு குறித்த சில அடிப்படையான விவரங்களைத் தெரிந்து கொள்வது முக்கியம்.

பல்வேறு வகையான பணிகளுக்கான காலியிடங்களை நிரப்ப நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதுவர். நிரப்பப்பட வேண்டிய காலியிடங்களின் 12 மடங்கு எண்ணிக்கை அளவுக்கு முதன்மைத் தேர்வில் இருந்து மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். அதிலிருந்து ஒரு காலியிடத்துக்கு 3 பேர் என்ற அடிப்படையில் நேர்முகத்தேர்வுக்குப் போட்டியாளரின் எண்ணிக்கை அமையும்.

முதல்நிலைத் தேர்வு என்பது போட்டியாளரின் எண்ணிக்கையை முறைப்படுத்தி முதன்மைத் தேர்வுக்குத் தகுதியானவர்களைக் கண்டறிய நடத்தப்படுகிறது. முதல்நிலைத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் இறுதி வெற்றிக்கு எடுத்துக் கொள்ளப்படாது. முதன்மைத் தேர்வுக்கு 2,000 மதிப்பெண்களும் நேர்முகத் தேர்வுக்கு 300 மதிப்பெண்களும் ஆக மொத்தம் 2,300 மதிப்பெண்களும் தேர்ச்சிக்காகக் கணக்கில் கொள்ளப்படும்.

பல்வேறுபட்ட துறைகளில் படித்து வரும் மாணவர்களுக்கு வாய்ப்பாக சிவில் சர்வீசஸ் தேர்வில் பரந்த அளவிலான விருப்பப் பாடங்கள் உள்ளன. அவற்றில் முதல்நிலைத் தேர்வுக்கென்று ஒன்றும் முதன்மைத் தேர்வுக்கென்று இரண்டுமாக இரு விருப்பப் பாடங்களைப் போட்டியாளர் தேர்ந்தெடுக்க வேண்டும்.

விருப்பப் பாடங்களைத் தேர்வு செய்வதுதான் தேர்வுக்கான ஆயத்தங்களின் தொடக்க நிலையும் மிக முக்கியமான அம்சம் ஆகும். விருப்பப் பாடங்களைத் தேர்ந்தெடுக்கும்போது கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில விஷயங்களைப் பார்ப்போம்.
 
தேர்வு செய்யும் விருப்பப் பாடத்தில் பரிச்சயம் மற்றும் அப்பாடத்தில் கல்வியறிவு. அடிப்படை ஈடுபாடு பாடத்திட்டத்தின் அளவு அப்பாடத்தில் வழக்கமாக அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான வாய்ப்பு. பாடத்திட்டத்துக்குத் தேவையான நூல்கள் கிடைக்கும் தன்மை.

 முதல்நிலைத் தேர்வுக்கான ஆயத்தப் பணிகளிலிருந்து இப்போது தொடங்கலாம். முதல்நிலைத் தேர்வில் விருப்பப் பாடங்களுக்கு 300 மதிப்பெண்களும் பொது அறிவுப் பாடத்துக்கு 150 மதிப்பெண்களும் உள்ளன. விருப்பப் பாடத்துக்கு அதிக மதிப்பெண்கள் உள்ளதால் அப்பாடத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டியுள்ளது.

 பல்வேறு பதில்களிருந்து ஒன்றைத் தெரிவு செய்திட வேண்டிய வினாமுறை (ஞக்ஷத்ங்ஸ்ரீற்ண்ஸ்ங் பஹ்க்ஷங்) என்பதால் ஆயத்த நிலையில் ஒரு பாடத்தின் அனைத்து அம்சங்களையும் ஆழ்ந்து அறிய வேண்டியது முக்கியம். முதலாவது சுற்றுத் தயாரிப்புக்கு 3 மாதங்களும் திரும்ப ஒருமுறை திருப்பிப் பார்த்துப் படிக்க ஒரு மாதமும் தேவை.

 முதல்நிலைத் தேர்வுகளுக்கான ஆயத்தின்போது தொடக்கத்திலேயே கேள்விகளுக்கு விரைவாகப் பதில் எழுதிடப் பழகுதல் மிக முக்கியமான ஒன்றாகும். முந்தைய ஆண்டு வினாத்தாள்களைப் பெற்று அவற்றுக்கு விடையளித்துப் பார்க்க வேண்டும்.

 இம்முறை பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். ஆயத்தப் பணிகளின் போக்கை நெறிப்படுத்துவதுடன் தேர்வுகளில் விடையளிப்பதை மேம்படுத்தவும் உதவும். முதல்நிலைத் தேர்வில் உள்ள பொதுப்பாட வினாத்தாள் பரவலான பாடத்திட்டத்தைக் கொண்டது.

 எனவே, தேர்வாளர்கள் முக்கியமான பகுதிகளை இனங்கண்டு அவற்றில் கருத்தூன்றிப் படிக்க வேண்டும். பொதுஅறிவுத் தாளில் கணிதத்திறன் தொடர்புடைய வினாக்களில் நல்ல மதிப்பெண்களைப் பெற வாய்ப்புள்ளது. எனவே, அப்பகுதியில் அதிக மதிப்பெண் பெறும் வகையில் விடையளிக்க நல்ல பயிற்சி பெற வேண்டும்.

 முதன்மைத் தேர்வுக்கான ஆயத்தப் பணிகள் முதல்நிலைத் தேர்வு முடிந்த மாத்திரத்திலேயே தொடங்கப்பட வேண்டும். முதல்நிலைத்தேர்வு முடிவுற்ற தேதிக்கும் அத்தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதிக்கும் இரு மாதங்கள் இருக்கும். இக்கால அவகாசத்தை முதன்மைத் தேர்வின் இரண்டாவது விருப்பப் பாடத்துக்கான ஆயத்தப் பணிகளுக்குப் பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

 அவ்வாறு செய்தால் அடுத்த இரு மாதங்களைப் பொதுப் பாடங்கள் மற்றும் இன்னொரு விருப்பப் பாட ஆயத்தப் பணிகளுக்குப் பயன்படுத்த முடியும். தேர்வுக்கு முந்தைய கடைசி ஒரு மாதத்தை அனைத்துப் பாடங்களையும் திரும்பப் பார்த்துப் படிக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 முதன்மைத் தேர்வுக்கு அதிகமான மதிப்பெண்கள் உள்ளதால் அத்தேர்வுக்கான ஆயத்தப் பணிகளும் மிக முக்கியமானதாகும். பொதுவாகப் போட்டியாளர்கள் ஆயத்தப் பணிகளை முடித்த பிறகு தயார்படுத்திய பாடங்களை ஒருமுறை திரும்பப் பார்ப்பதற்கு நேரமின்றி கஷ்டப்படுவதுண்டு. ஆயத்தப் பணிகளில் தொடக்க நிலையிலிருந்தே குறிப்புகள் எடுத்து வந்தால் இதைத் தவிர்க்கலாம்.

 அத்துடன் பாடத்தைப் புரிந்துகொள்ளும் நிலையை மேம்படுத்தவும் இது உதவும். மேலும் முக்கியமாக ஆயத்தம் செய்த பாடங்களைத் திரும்பப் பார்க்கும்போது நேரத்தைச் சேமிக்கும் வகையில் முழுப்பாடங்களையும் பார்க்கத் தேவையின்றி எடுத்த குறிப்புகளைப் பார்த்தாலே போதும் என்ற நிலைக்கும் உதவும்.

 முதன்மைத் தேர்வில் பொதுப்பாடத் தாள் மிக அதிகமான பாடத்திட்டங்களைக் கொண்டது ஆகும். எனவே, ஒவ்வொரு பாடத்தையும் அதன் பகுதிகள் அனைத்தையும் முழுமையாகவும் ஆழமாகவும் தயாரிப்பது கடினம் என்பதை உணர்ந்து கொள்வது முக்கியம்.

 திரும்பத் திரும்ப வினாக்கள் கேட்கப்படும் பகுதியை மிகக் கவனம் செலுத்திப் படிக்க வேண்டும். பிற பகுதிகளைப் பொருத்தவரையில், அப்பாடங்களில் அடிப்படை விஷயங்களை உணர்ந்து அது தொடர்புடைய அண்மைக்கால குறிப்பிடத்தக்க சம்பவங்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை அறிந்துகொண்டு அதில் கவனம் செலுத்திப் படிக்க வேண்டும்.

 முதன்மைத் தேர்வில் கட்டுரைத்தாள் என்பது ஒரு தனித்தன்மை மிக்கது. பொதுத் தாள்களுக்குப் படிப்பது கட்டுரைத்தாளுக்கும் மிகவும் உதவியாக இருக்கும். பலதரப்பட்ட தலைப்புகளில் கட்டுரையை எழுதிப் பார்ப்பது சிறந்த பயிற்சியாக அமையும். நல்ல மதிப்பெண்களும் பெறலாம்.

 திட்டமிடுதலிலும் கட்டுரைத் தரப்போகும் செய்திகளைக் குறிப்பெடுப்பதிலும் செய்திகளை அடுத்தடுத்து தரும் முறைகளை வகுப்பதிலும் செய்திகளைப் பகுப்பாய்வு செய்வதிலும் தீர்வு வழங்குவதிலும் கட்டுரை எழுதத் தொடங்கும் முன்னரே நேரத்தை செலவிட வேண்டும்.
 
இத்தேர்வு முறையில் மொத்த காலஅளவு ஏறக்குறைய ஓராண்டு. இதைக் கருத்தில் கொண்டு இக்காலம் முழுவதும் கடினமாக உழைக்க வேண்டும். இத்தகைய சரியான வழியிலான கடின உழைப்பு எதிர்காலத்தில் வாழ்வில் உயர்வைத் தரும் என்பதில் துளியும் ஐயமில்லை.

Sunday, January 9, 2011

இந்திய கடற்படையில் பயிற்சியுடன் வேலை

TNPSC - GROUP -1 ,GROUP-2 ( 4493 VACANCY)

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை

ANY JOB VACANCY


Dear Sir,
Assalamu Alaikum Varah.
I am Six years experience ERP Software Oracle   &  Store incharge in  Qatar
we have any vacancy pls. send the mail.
Thanks & Regards,
Ziyavudeen S
91 9487940913

பின்தங்கிய மாணவர்களுக்கு உதவித்தொகை

  
*முஸ்லிம் மாணவியர் விடுதியில் சேரவிண்ணப்பம்*

சென்னை: சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் முஸ்லிம் பள்ளி, கல்லூரி மாணவியர் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முஸ்லிம் மாணவியர் இடைவிடாது கல்வி பயிலும் நோக்கில் சிறுபான்மையினர் நலத்துறை வேலூர் வாணியம்பாடி, திருச்சி வைகுண்டகோஷ்புரம், திண்டுக்கல் பேகம்பூர், கோவை சிட்கோ, சுந்தரபுரம் மற்றும் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் அரசு முஸ்லிம் பள்ளி, கல்லூரி மாணவியர் விடுதியை இயக்கி வருகிறது. இந்த கல்வியாண்டில் இவ்விடுதிகளில் மாணவியர்
சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

விடுதியில் 4ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை படிக்கும் மாணவியர் சேர்க்கப்படுவர். மாணவியர் முஸ்லிம் இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். மாணவியின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும். இலவச உணவு மற்றும் உறைவிடம், அனைத்து அடிப்படை வசதிகள் அளிக்கப்படும். மேலும் 4ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவியருக்கு இரண்டு செட் இலவச சீருடை வழங்கப்படும். பத்தாம் வகுப்பு, பிளஸ்2 மாணவியருக்கு இலவச சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். தொலைதூரத்திலிருந்து வந்து கல்வி பயில்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விடுதி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 முதல் மாலை 5:45 மணி வரை, அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, சம்பந் தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அல்லது சம்பந் தப்பட்ட
விடுதி காப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். பள்ளி விடுதிக்கு, ஜூன் 10ம் தேதி மாலை 5:45 மணிக்குள்ளும், கல்லூரி விடுதிக்கு ஜூன் 24ம் தேதி மாலை 5:45 மணிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப் பட்டுள்ளது. கல்வி தொடர்பாக முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள,
www.kalvimalar.com இணைய தளத்தைப் பார்க்கவும்.

Applications are invited for the IDB Scholarship from meritorious but financially needy Muslim students granted admission or intend to seek admission in the academic session 2010-2011 in the first year of degree course in the fields of Medicine and Engineering, (all branches) including Homeopathy, Unani, Ayurvedic, Agriculture, Fisheries, Forestry, Food Technology, Microbiology, Biotechnology, Bachelor of Business Administration and Bachelor of Law. Applicants for Bachelor Courses in B.B.A. and LL.B. should have scored minimum 60% marks in English and optional/elective subjects in 10+2 or Qualifying Examination.The scholarship is offered as an Interest-Free Loan to be refunded in installments after completion of the graduation. The applicants should have passed SSC (10+2) with minimum 60% marks in English, Physics, Chemistry, Biology/Mathematics .
Application for can also be downloaded from our websiteswww.sit-india. org or www.metdelhi. org

Application form duly completed in all respects with necessary copies of required documents should reach the MUSLIM EDUCATION TRUST E 3 Abul Fazal Enclave,Jamia nagar, New Delhi 110025 latest by 25th August 2010.


இஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி விளையாட்டு தங்கும் விடுதி2010 – 2011 கல்வி ஆண்டுக்கான சேர்க்கை ஆரம்பம்6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயில விரும்பும் ஏழை மாணவர்களுக்கு ( தமிழ் மொழியுடன் உருது / ஆங்கிலம் மீடியம் ) இலவசக் கல்வியும் தங்குமிடமும் அளிக்கப்படுகிறது. ஆர்வமுள்ள மாணவர்கள் பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.அரசு மதரஸா ஆஜம் மேல்நிலைப்பள்ளி, 779 அண்ணா சாலை ,
எல்.ஐ.சி. எதிரில்
சென்னை 600 002
போன் : 2841 2742

பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 30 மே 2010

தலைவர் : டாக்டர் சையத் எம்.எம். அமீன்,  ஏழை மாணவர் இல்லம், தொலைபேசி : 2848 1344

+2 மாணவ மாணவிகளுக்கு பாப்புலர் கல்வி அறக்கட்டளையின் அறிவிப்புஅஸ்ஸலாமு அலைக்கும்கழிந்த வருடங்களைப் போல் இவ்வருடமும் பெட் இஞ்ஜினியரிங் கல்லூரி +2ல் Maths, Physics, Chemistry ல் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற பொருளாதார நிலை காரணமாக பொறியியல் கல்லூரியில் சேர இயலாத மாணவ மாணவிகளுக்கு வாய்பளிக்க முன் வந்துள்ளது.விண்ணப்பங்கள் வர வேண்டிய கடைசிய நாள் : 30-05-2010

பாப்புலர் கல்வி அறக்கட்டளை, 370/C5, கேப் ரோடு, இடக்குடி, கோட்டார், நாகர்கோவில் – 629 002 போன் : 04652241850

Postal Mail Telephone: E-mail addresses
PET Engineering College,
Post Box No 6, Thiruchendur Road, Vallioor 627 117,
Tirunelveli District, Tamil Nadu, India College Phone:04637-220999(8 LINES)
Fax: 04637-222205  mail@petengg.ac.in
principal@petengg.ac.in


--------------------------------------------------------------------------------
If you have come across any bright students coming from poor financial background who have finished their 10th standard this year (April 2010) and scored more than 80%, please ask them to contact the NGO-Prerana (supported by Infosys foundation). The NGO is conducting a written test and those who clear the test will be eligible for financial help for their further studies. Please ask the students to contact the people mentioned below to get the form:580, Shubhakar, 44th cross, 1st A main road, Jayanagar, 7th block,
Bangalore.Contact numbers:

1. Ms. Saraswati – 99009 06338
2. Mr. Shivkumar – 99866 30301
3. Ms. Bindu – 99645 34667

Even if you don’t know anyone, please pass on this info, someone might be in need of this help.


கல்வியை தொடரமுடியாமல் வசதியற்ற நிலையில் உள்ள மாணவ மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள்


ஐக்கியப் பொருளாதாரப் பேரவை
அலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு
ஆயிரம் விளக்கு, சென்னை – 600 006
தொலைபேசி: 2829 5445 

இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க்
ராயபேட்டை, நெடுஞ்சாலை
சென்னை – 14
தொலைபேசி: 94440 52530 

சீதக்காதி அறக்கட்டளை
688 , அண்ணா சாலை
சென்னை – 06 

ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன்
688 , அண்ணா சாலை
சென்னை – 06

B S. அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன்
4 மூர்ஸ் ரோடு, சென்னை – 06
(ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்) 
சுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட்
ஜாவர் பிளாசா,
நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை – 34

முஹம்மது சதக் அறக்கட்டளை
133 , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை
சென்னை – 34 
முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட்
ஜபார்ஷா தெரு,
திருச்சி.


மெஜெஸ்டிக் பவுண்டேசன்
117 ஜெனெரல் பேட்டர்ஸ் சாலை
சென்னை – 02

தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்
118 / பி வேப்பேரி நெடுஞ்சாலை
சென்னை – 03 

தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்பர் டிரஸ்ட்
டி பிளாக் 10 ( 23 ) 11 வது தெரு
அண்ணா நகர் சென்னை 40
போன் 98400 80564

அஸ்மா காசிம் அறக்கட்டளை
மாண்டியத் சாலை
எழும்பூர் சென்னை – 08 

ராஜகிரி பைத்துல்மால்
கீழத் தெரு
ராஜகிரி – 614 207

டாம்கோ
807 – அண்ணா சாலை 5 வது சாலை
சென்னை


ஹாஜி. அஹமது மீரான்
Managing Director, Professional Courier’s
22. மகாராஜா சூர்யா ராவ் ரோடு
ஆழ்வார்பேட்டை சென்னை – 18

மியாசி
புதுக் கல்லூரி வளாகம்
பீட்டர்ஸ் ரோடு சென்னை – 14 
S I E T
கே.பி. தாசன் சாலை
தேனாம்பேட்டை
சென்னை – 18
 ST Courier
199, Hariyan Street, C.Pallavaram,
Chennai – 600 043.
TEL :914422666666, 914430566666

மஸ்கட் வாழ் தமிழ் முஸ்லிம்கள் சார்பாக ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள வசதி குறைந்த மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி செய்து வருகிறார்கள். உயர்நிலை பள்ளிப் படிப்பு முடிந்து மேல்நிலை பள்ளிப் படிப்பு (+2), பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு, தொழில் கல்வி, மார்க்கக் கல்வி பயில பொருளாதார வசதி குறைந்த முஸ்லிம் மாணவ மாணவியர் தங்கள் விண்ணப்பங்களைக் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பித் தருமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றார்கள்.கல்வி நிதி கேட்டு விண்ணப்பம் அனுப்புவோர் தவறாமல் தங்களுடைய மதிப்பெண் சான்றிதழின் (xerox) புகைப்பட நகல், அவர்கள் சார்ந்திருக்கும் ஜமாஅத் தலைவர் / செயலாளரிடமிருந்து வசதியின்மை குறித்து பரிந்துரைக் கடிதம், எந்தப் படிப்பு படிக்க இருக்கிறார்கள்? அதற்கு எதிர்பார்க்கப்படும் கல்விக் கட்டணம் எவ்வளவு? ஆகியவைகளையும் இணைத்து அனுப்புதல் வேண்டும். இந்த இணைப்புகள் இல்லாத விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

தகுதியும் ஆர்வமும் இருந்தும் வசதி குறைவால் படிக்க இயலாத தமிழ் முஸ்லிம் மாணவ மாணவியருக்கு உதவிட இந்தப் படிவத்தை முடிந்தவரை நகல் எடுத்து பள்ளிவாயில், கல்விக்கூடங்கள், பொதுநல அமைப்புகளுக்கெல்லாம் அனுப்பிக் கொடுத்து பயன்பெறச் செய்யுங்கள்.  இறையருள் பெறுங்கள்!

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

TAMAM
P.O.BOX 1263
MUTTRAH-114
SULTANATE OF OMAN

விண்ணப்பங்கள் மஸ்கட் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 30-05-2008




CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...