நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Monday, February 28, 2011

எந்த நாட்டுக்கு என்ன பொருள் தேவை?

வடகம், வத்தல், ஊறுகாய்… போன்றவை எல்லாம் நம் முன்னோர்களின் கண்டுபிடிப்பு. இவற்றுக் இப்போது சர்வதேச அளவில் விற்பனை வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மாங்காய் ஊறுகாய், கொத்தமல்லி சட்னி… என்று விதம் விதமாக கேட்கிறார்கள்.

உலர வைக்கப்பட்ட காய்கறிகள் : ரஷ்யா, ஃபிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின்
மாம்பழச் சாறு : சவுதி அரேபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள்.
ஊறுகாய் மற்றும் சட்னி : ரஷ்யா, அமெரிக்கா, பெல்ஜியம், நெதர்லாந்து, ஃபிரான்ஸ்
பதப்படுத்தப்பட்ட பழங்கள் : அமெரிக்கா, நெதர்லாந்து, இங்கிலாந்து, சவுதி அரேபியா.
இந்தியாவின் கைமணம் கமழும் முறுக்கு, மிட்டாய், வெல்லம், கடலைமிட்டாய்… போன்றவற்றுக்கும் வெளிநாட்டில் ஏராளமான வாய்ப்பு உள்ளன.
கடலை மிட்டாய் : இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர்
வெல்லம் : போர்ச்சுக்கல், வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம்
வெப்பமண்டல நாடான இந்திய கால்நடைகளின் இறைச்சியில் சுவை கூடுதலாக இருக்கிறதாம். இதனால் பல நாடுகள் வாங்கிக்
கொள்ள, போட்டி போடுகின்றன. அந்த வரிசையில் நம்மூர் ஆட்டிறைச்சிக்கு முதலிடம் உண்டு.
எருமை இறைச்சி : மலேசியா, பிலிப்பைன்ஸ், குவைத், சவுதி அரேபியா, ஜோர்டன், வியட்நாம்
ஆட்டிறைச்சி : சவூதி அரேபியா, கத்தார், ஏமன், குவைத்
கோழியிறைச்சி : ஏமன், ஜெர்மனி, டென்மார்க், குவைத், ஜப்பான்
பால் பொருட்கள் : எகிப்து, வங்கதேசம், நேபாளம், அல்ஜீரியா, தாய்லாந்து
பதப்படுத்தப்பட்ட இறைச்சி : வியட்நாம், கானா, துருக்கி, சீனா
தேன் : அமெரிக்கா, ஜெர்மனி, சவுதி அரேபியா, இங்கிலாந்து, பெல்ஜியம்
நம் நாட்டில் விளையும் அரிசி, பருப்புக்கும் கூட வெளிநாட்டில் ஏக வரவேற்புதான். குறிப்பாக இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் அரிசியை அதிக அளவு இறக்கமதி செய்கிறார்கள்.
பாசுமதி அரிசி : சவுதி அரேபியா, குவைத், இங்கிலாந்து, ஏமன்
மற்ற ரக அரிசி : நைஜீரியா, வங்கதேசம், தென் அமெரிக்கா
கோதுமை : நேபாளம், வங்கதேசம், ஸ்ரீலங்கா, தாய்லாந்து, பூடான்
பயறு வகை மற்றும் பிற தானியங்கள் : வங்கதேசம், இந்தோனேஷியா, ஸ்ரீலங்கா, சூடான், மலேசியா, தாய்லாந்து
இந்தியாவில் இருந்து இத்தனை வகையானப் பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப வாய்ப்புகள் உள்ளன. இந்த நாடுகளில் உள்ள விற்பனை வாய்ப்புகள் குறித்த ஆலோசனைகளுக்கு நீங்கள் ‘அபீடா’ நிறுவனத்தை அணுகலாம்.
தொடர்புக்கு :
Mr. R. Ravindra, Reginal Incharge Agricultural and Procesed Food products, Export Development Authority, 12/1/1, Palace Cross Road, Bangalore – 20. Phone : 080-23343425 / 23368272
- களத்துமேடு கமருதீன்

No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...