நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Sunday, February 13, 2011

சுயதொழில் ஆரம்ப ஏற்பாடுகள்

ஆரம்ப ஏற்பாடுகள் :
நீங்கள் முழுமனதுடன் தொழிலை ஆரம்பிக்க நினைத்தவுடன் செய்ய வேண்டிய முக்கியப் பணி, யார் யாரெல்லாம் தம்முடைய பொழுதுபோக்கினை வியாபாரமாக்கி உயர்ந்துள்ளார்கள் என்று ஆராய்வதுதான். ஆரம்பித்த நிலையிலிருந்து, விரிவாக்க நிலைவரை அவர்களுடைய அனுபவங்கள் எப்படிபட்டவையாக இருந்தன என்பதை விரிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். இது உங்கள் மனதில் தன்னம்பிக்கையை வளர்க்கும்.


சட்ட ஆலோசனை:

வரப்பிரசாதமான இணையம்:

இக்காலத்தில் இணையம் மூலம் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. நீங்களும் நம்பகமான இணையதளங்களில் உங்கள் தொழில் பற்றிய செய்திகளை வெளியிடுங்கள். அந்த இணையதளம் பலராலும் பார்த்துப் பயன்பெறக் கூடியதாக இருக்க வேண்டும். இதற்கு கொஞ்சம் அதிகம் செலவு செய்ய வேண்டி வந்தாலும் ஏற்றுக் கொள்ளுங்கள்.
பொழுதுபோக்காகக் கருதிய ஒன்று, வாழ்க்கைத் தொழிலாக மாறும் போது சில முடிவுகளைச் சட்ட ரீதியாக யோசித்து செயல்படுத்துவது மிக மிக முக்கியமாகும்.

1.
உங்களுடைய தொழிலைப் பதிவு செய்து கொள்வது.
2.
தொழிலுக்காக தனிப்பட்ட கணக்கினை வங்கியில் துவக்குவதோடு, தேவைப்பட்டால் தனி கிரெடிட் கார்டும் வாங்கிக் கொள்வது.
3.
விரைவான பணப்பரிமாற்றத்திற்காக இணையதளம் மூலம் பணம் செலுத்தும் வகையில் பே பால்போன்றவற்றில் கணக்குகளை ஏற்படுத்துவது.
4.
எந்த சந்தர்ப்பத்திலும் உங்கள் தனிப்பட்ட வரவு செலவுகளுடன், தொழில் வரவு செலவுகளை சேர்க்காமல் பார்த்துக் கொள்வது.

அகலக்கால் வேண்டாம்!
நீங்கள் ஆரம்பிக்கப் போகும் தொழிலின் போக்கு எவ்வாறு இருக்கும் என்பதை உடனடியாகக் கூற முடியாது. அதற்கு சில வருடங்கள் கூடத் தேவைப்படலாம். இதை மனதில் கொண்டு கொஞ்சம் சிக்கனமாகவே இருங்கள். விளம்பரம் தேவைதான். ஆனால் அதற்காக பெரிய அளவில் செலவு செய்வதைத் தவிருங்கள். சிக்கனமாக, அதே நேரத்தில் ஆழமான பதிவினை ஏற்படுத்துகின்ற மாதிரி விளம்பரம்.

சந்தைப்படுத்துதல்:
உங்களுடைய தொழிலை எவ்வாறு சந்தைப்படுத்துவது? பெரும்பாலோர் தங்களுடைய வியாபாரத்தைப் பொருட்காட்சியில் துவக்குகின்றனர். சிலர் உள்ளூர்க் கடைகளில் துவக்குகின்றனர். உங்கள் ஊரில் நடைபெறும் பொருட்காட்சி, திருவிழா போன்றவை எந்தெந்த சமயத்தில் எங்கெங்கு நடைபெறுகின்றன என்ற தகவல்களை சேகரியுங்கள். உடனே அவ்விடத்தில் ஒரு ஸ்டால் அமைத்து விடுங்கள். நோட்டீஸ்களுடன் ஆஜராகி விடுங்கள். உங்கள் தொழில் பற்றிய முழு விவரங்களுடன் கூடிய கார்டுகளை அச்சடித்து வைத்துக் கொள்ளுங்கள். அங்கு வரும் உங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்குத் தவறாமல் விநியோகம் செய்யுங்கள். மேலும், செய்தித்தாள்களில் செய்திகளாகவும் வெளியிடலாம். பலராலும் அறியப்படும்; செலவும் குறைவு.


பொருள் அறிமுகப்படுத்துதல்:
நீங்கள் எந்தப் பொருளை வியாபாரம் செய்ய எடுத்துக் கொண்டாலும், முதல் கேள்வி, அதை எப்படி அறிமுகப்படுத்தப் போகிறீர்கள் என்பதுதான். நீங்கள் ஒரு மெழுகுவர்த்தியைத் தயாரிக்கப் போகிறீர்கள் என்றால், அதை உருவாக்கத் தேவைப்படும் கற்பனைத் திறனை விட, அதை அறிமுகப்படுத்துதலில் அதிக திறன் தேவைப்படும். புதுமையான அணுகுமுறையாக இருத்தல் நல்லது. ஞாபகம் இருக்கட்டும், இது போட்டிகள் நிறைந்த உலகம்! காலத்திற்கேற்றாற்போல மாறிக்கொள்ளுங்கள்.
அதன் பிறகு, நீங்கள் தயாரிக்க விரும்பும் பொருளை முடிவு செய்யுங்கள். அதே பொருளைத் தயாரிக்கும் வேறு நிறுவனங்களைப் பற்றியும், அவற்றின் தரம், விலைகளைப் பற்றியும் அறிந்து கொண்டு உங்கள் தயாரிப்புடன் ஒப்பு நோக்கிப் பாருங்கள். இந்த ஒப்பீடு உங்களின் தனித் தன்மையை அடையாளம் காட்டி தொழிலில் முன்னேற உதவும்.

No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...