நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Tuesday, January 11, 2011

இண்டர்வியூ அட்டெண்ட் செய்வது எப்படி:

இண்டர்வியூவில செய்ய வேண்டிய / செய்யக்கூடாத விஷயங்கள் பத்தி பாக்கலாம்.

Phone Interview : இதன் சாதகமான விஷயம் - Time Saving. ஒரு முப்பது நிமிட உரையாடலில் Employer- Prospective candidate பத்தியும் Candidate - Propective Employer / Postion பத்தியும் தெரிந்து கொள்ளலாம். பல நேரங்களில் இண்டர்வியூவுக்கு போன பின்புதான் அந்த வேலைக்கும் நமக்கும் ஒத்து வராதுன்னுதெரிய வரும்(Due to various reasons). இதுக்காக லீவு போட்டுட்டு லொங்கு லொங்குன்னு ஓடிப் போயிருப்போம்..

இதன் பாதகமான விஷயம் - You don't have your personality and your body language to compliment what you speak.
அதனால பேசும்போது ரொம்ப கவனமா இருக்கணும், சொல்லும் வார்த்தைகள் உங்க பர்சனாலிடிய பிரதிபலிக்கணும்.

செய்ய வேண்டியவை:

Take the call in a quiet place;speak up and speak clear – do not ramble and be articulate with your answers

Speak slowly but loudly. Check with the interviewer if you are audible and clear to him/ her.

Take the call from a reliable phone, make sure your cell phone is fully charged.

Disable the call waiting option on your cell phone.

Have a copy of your resume in front of you and the job description


கேட்கப்படும் கேள்வி புரியலன்னா, மறுபடியும் கேக்கச் சொல்லுங்க.

உரையாடலின் முடிவில் நீங்க கேட்பதற்கு கேள்விகள் தயாராக இருக்கட்டும் - What are the key skills required, When do they intend to hire,What is the project all about, what is the salary, ஆபிசில் பிளாக் எழுதலாமா/கூடாதா etc.

செய்யக்கூடாதவை:

உங்க நண்பரை விட்டு போன் இண்டர்வியூ எடுக்கச் சொல்லாதீங்க, நேரில் போகும்போதோ அல்லது வேலை கிடைத்த பின்னரோ மாட்டிக்குவீங்க.

Engage in a converation, Never make it a Monologue.

வளவளன்னு பேசாம ரத்தினச் சுருக்கமா பதில் சொல்லுங்க.

ஸ்பீக்கர் போனில் பேசாதீர்கள், கேட்பவருக்கு தெளிவா கேக்காது, உங்க பக்கத்தில் இருக்கும் சின்ன சத்தம் கூட அவருக்கு பெரிசா கேக்கும்.

As much as the Hiring Manager interviews the candidate, the candidate should also interview the client. இரண்டு பக்கமும் கேள்விகள் முடிந்ததும், நன்றி சொல்லி Next Steps பத்தி கேளுங்க.

போனை வைப்பதற்கு முன் மறக்காம மேனஜிரின் இமெயில் ஐடி வாங்கி அவருக்கு ஒரு Thank You note அனுப்புங்க.


இப்போ நேர்முகத்தேர்வு :

முதல் கட்டம்

நேர்முகத்தேர்வுக்கு முந்தைய நாள்: Failure to Plan is Planning to fail - இது வேறெதுக்கு பொருந்துதோ இல்லயோ இண்டர்வியூவுக்கு ரொம்ப பொருந்தும். ஒரு இண்டர்வியூவுக்கு போகும் முன் கொஞ்ச நேரம் செலவழிச்சு பிளான் பண்ணா வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்.

மொதல்ல இண்டர்வியூ நடக்கும் நேரம், இடம், யார் என்பதையெல்லாம் ஒன்றுக்கு இரண்டு முறை கன்ஃபர்ம் செய்து கொள்ளுங்கள், முடிந்த வரை காலை நேரத்தில் இண்டர்வியூ வைத்துக் கொள்ளுங்கள், நீங்களும் ஃப்ரெஷ் ஆக இருப்பீர்கள், மேனேஜரும் நல்ல மூடில் இருக்க வாய்ப்புகள் அதிகம்.

கம்பெனியின் வலைதளத்துக்கு சென்று ஒரு மணி நேரம் செலவிடுங்கள். company history,Products and service offerings,latest announcements, கம்பெனி பத்தி கடைசியாக பேப்பரில் வந்த செய்தி எல்லாம் தெரிஞ்சிக்கிட்டு இண்டர்வியூவில் நடு நடுவே சொல்லி அசத்துங்க.

டெக்னிகல் வேலையாக இருந்தால் Job Description தெரிந்து கொண்டு உங்களோட திறமை / அனுபவம் எவ்வாறு அதனுடன் ஒத்துப் போகிறதுன்னு ஒரு 4-5 லைன் மனப்பாடமாக வையுங்கள்.

அந்த கம்பெனியில் வேலை செய்யும் யாருடனாவது அறிமுகம் இருந்தால் அவருடன் பேசி அந்த கம்பெனியில் பொதுவாக எதிர்பார்க்கப்படும் Qualification/ Skills பத்தி தெரிஞ்சிக்கோங்க.

அப்புறம் ரொம்ப முக்கியமா, இண்டர்வியூவுக்கு அணியப் போகும் உடை, Shoe, Matching Socks எல்லாம் சரிபாத்து ராத்திரியே எடுத்து வைத்து விடுங்கள். காலையில் ரொம்ப ரிலாக்ஸ்டா இருக்கும்.

இரண்டாம் கட்டம்:

இண்டர்வியூவுக்கு போவதற்கு உங்களிடம் உள்ள சிறந்த உடையை தேர்ந்தெடுங்கள். அதுக்காக என்கிட்ட இருக்குறதிலேயே சிறந்த டிரெஸ் பச்ச கலர் பேண்டும் செவப்பு கலர் சில்க் ஜிப்பாவும் சொல்லிட்டு அதயெல்லாம் போடக்கூடாது. என்னோட சாய்ஸ் Navy Blue Matt Finish Pant, White Shirt, Red tie and Navy Blue Blazer. கருப்பு பேண்ட் வெள்ளை சர்ட் கண்டிப்பாக கூடாது.

டை பத்தின சில விஷயங்கள் - Pant க்கு மேட்சிங்காக டை அணிவது ப்ரிட்டிஷ் பழக்கம், Shirt க்கு மேட்சிங்காக டை அணிவது அமெரிக்க வழக்கம். கல்யாணம் ஆகாதவர்கள் பெல்ட் வரையும், கல்யாணம் ஆனவர்கள் பெல்ட்டை தாண்டி (கொஞ்சம்) வருமாறும் டை அணிவது உலக வழக்கம்.





ஷீ - குனிஞ்சு பாத்தா முகம் தெரியணும் (தொப்பை மறைக்காம இருந்தா) அந்த மாதிரி பாலீஷ் போட்டு இருக்கணும். Pointed Black leather shoe with lace -இதுதான் நம்ம சாய்ஸ் எப்பவும். இன்னொறு முக்கியமான விஷயம், சாக்ஸ் பேண்ட் கலரில் இருக்க வேண்டும், கருப்பு ஷீவுக்கு வெள்ளை சாக்ஸ் கூடவே கூடாது, இந்த காம்பினேஷன் போட்ட ஒரே பிரபலம் மைக்கேல் ஜாக்ஸன் என்பது கூடுதல் தகவல்.

டிரெஸ் பண்ணி முடிச்சாச்சா? நேரத்துக்கு கெளம்பி இண்டர்வியூ நேரத்துக்கு 15 நிமிடங்களுக்கு முன்பு கம்பெனியை அடையுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அப்பத்தான் ரிலாக்ஸ்டா வண்டியை நிறுத்திவிட்டு, உடைகளை மறுபடி ஒருமுறை நேர்த்தி செய்துவிட்டு, செக்யூரிட்டியை தாண்டி வரவேற்பரைக்கு குறித்த நேரத்துக்கு அஞ்சு நிமிஷம் முன்ன போக முடியும்.

No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...