Pages

Saturday, January 14, 2012

அண்ணா பல்கலைகழகம் சார்பில் – வேலைவாய்ப்பு முகாம் (Off-Campus Interview)!!


அண்ணா பல்கலைக்கழகத்தில், தனியார் பொறியியல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் வரும் 21 மற்றும் 22ம் தேதிகளில் நடக்கிறது.
இதில், சென்னை மண்டலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம்.
அவர்கள்,இதுவரை முடித்த பொறியியல் தேர்வுகளில் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
குறிப்பாக, இதுவரை தேர்வில் ‘Arrear’ எதுவும் வைத்திருந்திருக்கக் கூடாது.
மேலும், 10 மற்றும்12ம் வகுப்புகளில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
இவை அனைத்தையும் உறுதி செய்யும் விதமாக, கல்லூரி முதல்வரிடம் இருந்து சான்று கடிதம் பெற்று வர வேண்டும்.
இந்த முகாமை பல்கலைக்கழக தொழில் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு மையம் நடத்துகிறது. இதில், பங்கேற்க வரும் 19ம் தேதிக்குள் ரூ.750 பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்.


கல்வி களஞ்சியம் (www.kalvikalanjiam.com) 

No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்