Pages

Thursday, June 23, 2011

சிறுபான்மையினருக்கு கல்வி மறுக்கப்பட்டால் 3 ஆண்டு சிறை: மத்திய அரசு


புதுடில்லி, ஜூன் 21- சிறுபான்மையினருக்கு, குறிப்பாக முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, வீட்டு வசதி மறுக்கப்படக் கூடாது என்று சச்சார் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்தக் குழுவின் அறிக்கையை நடைமுறை படுத்த வகை செய்யும் வரைவு மசோதா ஒன்றை, மத்திய அரசு தயாரித்து வருகிறது.

இந்த மசோதாவின் படி, சிறுபான்மையினருக்கு கல்வி, வேலைவாய்ப்பு, வீட்டு வசதியை மறுப்போருக்கு 3 ஆண்டு வரை சிறைத் தண்டனை அளிக்க முடியும்.

மேலும் தவறு செய்வோருக்கு ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்க முடியும். இதற்கான நடவடிக்கைகளை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை எடுத்து வருகிறது.

No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்