அஸ்ஸலாமு அலைக்கும்,,,
தமிழ்நாடு அமைச்சுப் பணியில் 1576 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதற்கான நேரடி நியமனத்துக்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும்
20-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைத்திட வேண்டும். தேர்வு நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
ஊதியம் விகிதம்: 15,200 - 20,200. குறைந்தபட்ச வயது 21. குறைந்த பட்ச பொதுக் கல்வி அதாவது
பள்ளியிறுதி வகுப்பில் (10ம் வகுப்பு) அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதியில்
தேர்ச்சி பெற்று மேல்நிலைப் பள்ளிக் கல்வி அல்லது கல்லூரி கல்வி படிப்பில்
சேர்வதற்கான தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தமிழில் போதிய அறிவு பெற்றிருத்தல் அவசியம். அதாவது பள்ளியிறுதித்
தேர்வில் தமிழை ஒரு மொழியாக எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 20-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைத்திட வேண்டும்
மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.
--
முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய துண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்படிக்கிறார்கள்; (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான் 9:71
No comments:
Post a Comment
மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்